Wednesday, May 31, 2006

உண்மை அறியா மனஸு


கிருத்துவர்களில் தலித்துகளுக்கு சேவை செய்யும் அமைப்புகள் பல உண்டு. மற்ற ஜாதியைச் சார்ந்தவர்களும் இதனால் பலன் பெறுகிறார்கள். இவை அளிக்கும் குறைந்த கால பலன்கள் மறுக்க முடியாதவை. தலித்துகளை ஓரளவு உயர்த்தினாலும் மத மாற்றமானது அவர்களை முற்றிலுமாக ஒரு சராசரி மனிதனுக்குரிய மரியாதையைப் பெறச் செய்யவில்லை. ஏனெனில் அவர்களது நோக்கம் அதுவல்ல.


அப்படியானால் ஹிந்து மதத்தில் அவர்களுக்கு மரியாதை இருக்கிறதா என்றால் பெரும்பான்மையாக இல்லை என்பதே உண்மை. மிருகங்கள்பாடு தேவலாம். ஆனாலும் இவர்கள் மற்றவர்கள் போன்ற மனிதர்கள்தான் என்பதும், இவர்களுக்கும் மற்றவர்களுக்குக் கிடைக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு தற்கால ஹிந்து மதம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. (மதமாற்றி குழுக்களின் நோக்கம் இதிலிருந்து வெளிப்படையாகவே மாறுபட்டது.)

இதற்கு இம்மதத்தில் மாற்றமுடியாதவை எனப்படும் கருத்துக்களே ஆதரவாய் உள்ளன. இத்தகைய மாறுதலை எதிர்க்கின்ற கருத்துக்கள், நல்ல வேளையாக, மாற்றப்படக் கூடியதாகத் தெரிவு செய்யப்பட்டக் கருத்துக்களில் உள்ளன.

இதற்குக் காரணம் இம்மதமானது மற்ற மதங்களை விட தொன்மை வாய்ந்ததாகவும், ஆன்மீகத்தின் உச்சத்தை தொட்டு நிற்கும் பூரணத்துவம் பெற்றதாகவிருப்பதும், மதத்தில் மட்டுமன்றி பலதுறைகளின் செழுமையான விழுமியங்களிலிருந்தும் கருத்துக்களைப் பெற்று தன்னுய்வு அடைந்ததாகவுமிருப்பதே.


(அதனால்தான் இதை குறை சொல்லும்போது இச்சமூகத்தின் தற்கால அவல நிலையை மட்டுமே குறை கூற முடிகிறது. இதன் ஆன்மீக, தத்துவக் கருத்துக்கள் நுண்மையான உயர்தன்மை உள்ளவை என்பதால் அவை பற்றி விமர்சிக்க முடியாது.)

ஏறத்தாழ ஆயிரமாண்டு கால அடிமை முறையினால் ஒரு ஜாதியினர் மற்றொரு ஜாதியினரை உயர்வாகவோ தாழ்வாகவோ நினைக்கும் பழக்கம் ஹிந்து சமுதாயத்தின் வேர்வரை பரவியிருக்கிறது (உதாரணமாக ஒரு தலித் மற்றொரு தலித்தை தாழ்வாக நடத்துவது). இந்த வியாதி குணமாகும் சாத்தியம் இம்மரத்தின் ஜீவ நீரிலே இருப்பதால் இந்த அழுகிய கனிகள் தானாகவே உதிர்ந்துவிடும்.


இத்தகைய மாற்றத்தை ஏற்காமல், நம்பமுடியாமல் நாம் இருப்பதற்கு, தயங்குவதற்குக் காரணம் இம்மரத்தின் பக்கத்திலுள்ள சில முட் செடிகளின் விஷக் காற்றுத்தான் (இம்மரத்திலுள்ள பல அழுகிய பழங்களும் காரணம்).

மீண்டும் சொல்கிறேன். மத மாற்றுபவர்களுக்கு மத மாற்றம் மட்டுமே முக்கியம். மனிதர்களின் உயர்வு இல்லை. மதம் மாற்ற மனிதர்களை ஜாதியின் அடிப்படையில் தாழ்த்துவது பலன் தருமாயின் இம்மத மாற்றிகள் தீண்டாமைக் கொடியை உயர்த்திப் பிடிப்பர்கள் என்பது சத்தியம் (உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்பது வேறு விஷயம்). இதற்கு உதாரணமாக ஆப்பிரிக்காவில் சில வருடங்களுக்கு முன் நடந்த ஹுட்டு, டூட்ஸி கலவரங்களை சொல்லலாம்.







இந்த பிரச்சினையில் மதமாற்றிகள் தங்கள் மதத்தை ஒரு குழுவை தாழ்ந்த நிலையில் வைப்பதன் மூலம் பரப்ப முடியும் என்பதால் அதற்கு இழைத்த கொடுமைகள் சொல்லி மாளா. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், அறிவு மறுமலர்ச்சி அடைந்து விட்டதாகக் கருதப்படும் காலத்தில் இவர்கள் செய்த விஷய(ம)ங்களின் மேல் மலத்தை மொய்க்கும் ஈ கூட உட்காராது.


அதே சமயத்தில் பல்லாண்டு அடிமை குணத்தினால் எழுந்த இந்தியாவில் காணப்படும் தீண்டாமையை எதிர்த்து முன்னேறும் மறுமலர்ச்சி ஹிந்து மதமோ அமைதியான முறையில் மனிதர்களை மனிதர்களாக நடத்தும் நிலை வர பாடுபடுகிறது. உதாரணத்திற்கு ராமக்ருஷ்ண மிஷன்.

மலைவாசிகளிடம் ராமக்ருஷ்ண மிஷன் செய்யும் காரியங்கள் பலப்பல. மற்ற இடங்களிலும் சேவைகள் நடந்து வருகின்றன. முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த சேவையைப் பெற நீங்கள் மதம் மாற வேண்டியதில்லை.



வேறு இயக்கங்களும் உண்டு. ஆனல் அவை பற்றி பொதுப்படையாக நிலவி வரும் தவறான கருத்தாக்கம் அவை பற்றி சொல்ல என்னை அனுமதிக்கவில்லை. குஷ்ட ரோகிகளுக்கும், காமத் தொழிலாளிகளுக்கும், அனாதை குழந்தைகளுக்கும், உடல் நலமில்லா முதியவர்களுக்கும் இவர்கள் ஜாதி, மத வேறுபாடின்றி சேவை செய்து வருகின்றனர்.

என்ன வித்தியாசம்? தெரேஸாவிற்கு கேமரா முன் எழும் சேவையுள்ளம் இவர்களுக்கு சாதாரணமாகவே இருக்கிறது. சாதரணமானவைகளுக்கு அதை செய்பவர்களே மரியாதை கொடுப்பதில்லை. இயல்பானதுதான்.



ஆனால் விளைவு? "ஓ கல்கத்தா" போன்ற மதமாற்றத்திற்கு மறைமுகமாக உதவும் நூல்களால் ராமக்ருஷ்ண மிஷன் ஸன்னியாஸிகள் குழந்தைகளைப் பிடித்து விற்கும் கும்பல் என்று எழுத முடிந்தது. கோர்ட்டிலும் இந்த மத மாற்றக் கும்பல்களே ஜெயிக்க முடிந்தது. இந்த விஷச் செடிகளின் காற்றுப்பட்டு குப்பையான நம் மனசு மத மாற்றங்கள் நன்மையே தரும் என்று கருதுகிறது, எழுதுகிறது. உண்மை அறியா மனஸு.

Thursday, May 18, 2006

தெய்வங்களின் வன்முறை

ஸ்ரீ ஜயராமனின் வலைப்பதில்(http://virudu.blogspot.com/2006/05/blog-post.html) இட்ட கருத்து. மற்றவருடைய கேள்விகளும் கருத்துக்களும் >>>> <<<< என்ற குறியீடுகளுக்கிடையில் கொடுக்கப்பட்டுள்ளது.

>>>> தீவிரவாத கொடுமை அக்கிரமங்களால் துரத்தப்படுதல், அகதி முகாம்களில் நிலையற்ற வாழ்க்கை; சுய மதிப்பு சிறிதாவது தேற முயற்சி செய்யும் காஷ்மீர் இந்துக்கள் வாழ்வு படங்களால் மிக வெட்ட வெளிச்சமாக காட்டப்பட்டது.<<<


இது போன்ற வன்முறைகள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் நடத்த முடியவில்லை என்பதுதான் மதநல்லிணக்கவாதிகளின் (அப்படிக் கூறிக்கொள்கிறவர்களின்) உள்ளார்ந்த வருத்தமே. இது போன்ற செயல்களை செய்யவிடாமல் இருக்கச் செய்யப்படும் பாதுகாப்பு முயற்சிகள் அனைத்திற்கும் அவர்கள் கொடுத்துள்ள பெயர் ஹிந்துத்துவா.


இவை தவறில்லையா எனக் கேட்டால், தலித்துகளுக்கு நீங்கள் இதைவிட மோசமான கொடுமைகள் செய்தீர்கள் என்பர். இதில் இவர்கள் மறைக்கும் உண்மை என்னவென்றால் அவர்கள் தலித்துகளுக்கு இழைத்த, இழைத்து வரும் கொடுமைகளை மறைக்க மற்றவர்களின்மேல் பழி போடுவதுதான். அதிலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட உயர் ஜாதியினர்மேல் மட்டுமே பழி சொல்லக் காரணம் இச்சாதியினரை அழிப்பதன் மூலம் ஹிந்து மதத்தை அழித்துவிடலாம் என்று (தவறாக) முடிவு செய்து கொண்ட மிஷனரிகள்தான்.


ஒரு குறையை மற்றொரு குறையை கூறி நியாயப்படுத்துவது அவ்விரு குறைகளும் நிலைத்து நிற்கத்தான் வகை செய்யும். இவை நிலைத்து நிற்பதால் பயன் பெறுபவர்கள் இவற்றை அழிக்க விடமாட்டார்கள். மதநல்லிணக்கவாதிகள், முற்போக்குவாதிகள், பகுத்தறிவாளர்கள், வைதீகர்கள், மதத்தலைவர்கள், கம்யூனிஸ்ட்டுகள், ஸோஷியலிஸ்டுகள், காபிடலிஸ்ட்டுகள், பல்வேறு கொள்கைகளைக் கூறுகிற பல்வேறு அரசியல்வாதிகள், சமூக சீர்திருத்தவாதிகள் என்கிற வடிவங்களில் இக்கொடுமைகளைப் பாதுகாப்பதே இவர்கள் வேலையாகவிருக்கும். இதை பாதுகாக்க இவர்கள் பயன்படுத்துவது இக்கொடுமைகள் அழிய வேண்டும் என்கிற பிரச்சாரங்கள்தான் என்பது நடைமுறை முரண்.


யார் முதலில் ஆரம்பித்தார் என்பதில்தான் இவர்கள் கவனமும் கருத்தும் இருக்கும். ஏனென்றால் வரலாறு என்பது நடந்ததாக அறியப்படுகின்ற விஷயங்கள் பற்றிய கற்பனைகளும், நடைமுறை தேவைகளை அடிப்படையாகக் கொண்ட எதிர்பார்ப்புகளுமே. அதனால் பிரச்சினைகள் முடிவடையப் போவதில்லை.


இதற்கு ஒரே மாற்று, ஒரே வழி இதை ஆரம்பித்தவர்கள் யார் என்பது பற்றிக் கவலைப்படாமல், இவற்றை முடிக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துபவர்களை போஷிப்பதுதான். மீடியாக்களும் இது போன்ற மனநிலைமை கொண்டவர்களை ப்ரபல்யப்படுத்தவேண்டும். ஷபனா ஆஸ்மி போன்ற சமுதாய நடிகைகளை அல்ல.


>>> தீவிரவாதம் எப்போதும் புரட்சிக்கான தன்மை கொண்டதல்ல. இது சுதந்திரத்திற்கு எதிரான, மனித சமுதாயத்துக்கு எதிரானது. இதை எப்படியும் நியாயப்படுத்த இயலாது. <<<<

நான் சிறிது மாறுபடுகிறேன். தீவிரவாதத்தை "அனைவரும்" விட்டுவிடுவதுதான் தீவிரவாதம் போஷணையாக வளர விடாமல் தடுக்கும். இது போன்ற சூழல் இதுவரை இருந்ததில்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை. அதனால் எந்தவிதத் தீவிரவாதமும் இல்லாமல் செய்யக்கூடிய ஒரு தீவிரவாதம், ஹிம்ஸை அவஸ்யம். இத்தகைய தீவிரவாதம் சப்போர்ட் செய்யப்படவேண்டும்.

இந்த வகை தீவிரவாதம் எல்லா விதமான கருத்தியல்களிலிருந்தும், குழு மனப்பான்மையிலிருந்தும் விடுபட்டதாகவும், விலகியதாகவுமிருக்க வேண்டும். அதி முக்கியமாக இத்தீவிரவாதம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேறு எந்த வகை மாற்றங்களையும் அழிக்கும் ஒன்றாக மாறக்கூடாது. இங்கனம் நடைபெற இத்தீவிரவாதமானது ஒரே ஒரு குழுவோடு மட்டும் தங்கிவிடாமல் அனைவருக்குள்ளும் புகுந்து விடவேண்டும்.

பெரும்பாலான ஹிந்து தெய்வங்கள் அயுதங்கள் ஏந்துவதும், போர் புரிந்ததும் (புரிவதும்) இது போன்ற ஒரு வன்முறையை ஆதரிப்பதால்தான்.

இஸ்லாம்: பல கேள்விகளும், சில பதில்களும்

சுவனப்பிரியனின் வலைப்பதிவில் (http://suvanappiriyan.blogspot.com/2006/04/blog-post_114736724168527676.html) எனக்கும் மற்றவர்க்குமிடையேயான உரையாடல்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. மற்றவருடைய கேள்விகளும் கருத்துக்களும் >>>> <<<< என்ற குறியீடுகளுக்கிடையில் கொடுக்கப்பட்டுள்ளது.


>>>
'பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்' - மனு (த.சா.அ 2 சு,31)

'பிராமணர் இந்த மனு நூலைப் படிக்கலாம் மற்ற வருணத்தாருக்கு ஓதுவிக்கக் கூடாது' - மனுத.சா.அ 1.சு 103)

'சூத்திரன் பக்கத்தில் இருக்கும்போது வேதம் ஓதக்கூடாது' (மனு த.சா.அ.1 சு99)

'பல மனைவிகளை உடையவன் அவர்களின் புணர்ச்சிக்காகவும், பசு மாடுகளின் புல்லுக்காகவும், பிராமணரைக் காப்பாற்றவும் பொய சொன்னால் குற்றமில்லை' (மனு த.சா.அ.8 சு-112)

மேற் கூறிய வசனங்கள் அனைத்தும் இந்து மத சட்டங்கள் என்று நாம் ஒத்துக் கொண்டிருக்கிறோம். <<<<

எத்தனை முறை ஐயா சொல்லுவது?

ஸ்ம்ருதிகள் மாறக்கூடியவை. மாறியுமிருக்கின்றன. ஸ்ருதிகள் மட்டுமே மாறாதவை.

உதாரணத்திற்கு மனு ஸ்மிருதியே ஒவ்வொரு யுகத்திற்குமேற்றவாறு மாற்றப்படுவதுதான். ஒவ்வொரு அரசரும் ஒவ்வொரு ஸ்ம்ருதியை பின்பற்றினர். மனு ஸ்ம்ருதியை பின்பற்றியவர்கள் மிக மிகக் குறைவு. (இந்திய அரசியல் சட்டம் ஹிந்து சட்டங்களுக்கு பெரும்பாலும் எடுத்துக்கொண்டது மனு ஸ்மிருதி இல்லை. எதுவென்று கூறுபவர்க்கு பரிசு)

சரி அதை விடுங்கள். ஹிந்து மதம் ஏகத்துவத்தை இறுதி உண்மை என்று கூறுவது போல, உண்மை பல வடிவங்களில் கானப்படும் என்றும் (உதாரணத்திற்கு அல்லாவை ஒரு ஆணாக ஸல் அவர்கள் கண்டதுபோல), எந்த வடிவத்தை வணங்கினாலும் இறுதியில் உண்மையை அடையலாம் என்றும் கூறுகிறது. இஸ்லாமும் அதே போல மற்றவர்கள் தங்களின் ஆன்மீக அனுபவத்திற்கேற்ப இறையை வழிபட்டுக்கொள்ளலாம் என்று கூறுகிறதா?

----


மயூரன் அவர்களே,

>>>என்னுடைய அம்மாவும் அப்பாவும் தங்கையும் வீட்டில் இந்துசமய உருவப்படங்களை வைத்து அல்லவா வணங்கி வருகிறார்கள். அவர்கள் நரகத்துக்கா போவார்கள்? <<<

உங்களுடைய அம்மாவும் தங்கையும் மட்டுமல்ல, ஜனாப் சுவனப்பிரியனின் அம்மாவும், தங்கையும் கூட சுவனத்தை அடைய முடியாது என்று கேள்விப்படுகிறேன். ஏனென்றால் இஸ்லாமிய பெண்களுக்கு ஆத்மா கிடையாதாம்.

எந்த அளவு நிஜமென்று தெரியவில்லை. எனக்கு ஆத்மாவெல்லாம் தெரியாது. ஆஸ்த்மாதான் தெரியும்.

http://suvanappiriyan.blogspot.com/2006/04/blog-post_114736724168527676.html


>>>பொய்களைச் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்.<<<

பொய் இல்லை. அறியாமை. சில வருடங்களுக்கு முன்பு ஒரு புத்தகத்தில் படித்த இந்த பொய்யை பற்றி விளக்கமறிய நேசகுமாரிடமும் இது பற்றி கேட்டேன். அவர் என் கருத்து தவறு என்று கூறினார். தவறை திருத்தி விளக்கமளித்த தங்களுக்கும் நன்றி.

>>>பெண்களை தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டு பேசிய சங்கராச்சாரியார் பிறகு<<<

சங்கராச்சாரியார் - இந்த பெயரை அடிக்கடி கேள்விப்படுகிறேன். யார் அவர்? ;-)

>>>>மறுமை நாளில் இறைவன் முன்னால் நீங்கள் 'இறைவா! சுவனப் பிரியனுக்கு இவ்வளவு உண்மை தெரிந்திருந்தும் எங்களுக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டார்.' என்று என் மேல்் வழக்கு தொடரக் கூடாது என்பதற்காக அனைத்தையும் கூறி நான் தப்பித்துக் கொண்டேன். சொர்க்கமா நரகமா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விட்டேன். <<<<

எனக்கு சொர்க்கமும் கிடையாது. நரகமும் கிடையாது. சத்யமான அந்த பரப்ரம்மத்தோடு கலந்துவிடுவேன். அல்லது என் மனம் விரும்பினால் மீண்டும் பிறந்து ஞானத்தை அடைய முயல்வேன். அப்படி நேருமானால் ஹிந்து மதம் பற்றிய தெளிவான உண்மையை அறியும் வாய்ப்பு பெற்று, அவ்வுண்மைகளால் உய்வடைய எல்லாம் வல்ல இறையான அல்லாவை வேண்டுகிறேன். நீங்களும் எனக்கு இந்த வரத்தை தர அல்லாவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டிக்கொள்கிறேன்.

>>>>அது எப்படி பொய்களை மட்டுமே சொல்லுவேன் என்று ஏதாவது விரதமா?<<<

ஐயா எனக்கு இஸ்லாம் பற்றி அதிகம் தெரியாது. எனவே நான் கூறுவதில் தவறேதேனும் இருக்குமானால் அதை திருத்திக்கொள்வது என் ஈமான். ஒரு ஹிந்துவாகவிருப்பதால் என் பலத்தை மட்டுமல்ல பலவீனங்களையும் ஒத்துக்கொள்கிறேன். திருத்திக்கொள்ளவும் முயல்கிறேன். இதற்கு உதவி செய்தால் உங்களுக்கும் நன்றி.

>>> முகமதுநபி இறைவனை ஆணாக உருவகப் படுத்தியதாக எதில் படித்தீர்கள்? விளக்கம் தர மடியுமா?<<

இந்த கட்டுரையின் தலைப்பை பதிலாகத் தருகிறேன்:

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! (இது ஆண்பால்தானே?)

நான் பார்த்த ஒரு குரான் மொழிபெயர்ப்புகளில் அல்லாவை அவன், இவன் என்று ஆணாகவே உருவகப்படுத்தியிருந்தார்கள். அவள், இவள் என்று சொல்லவில்லை. ஹிந்து மத வேதங்களைப்போல அது, இது, இறை என்றும் குறிப்பிடவில்லை.

தங்களின் விளக்கம் இந்த விஷயத்தில் என் அறிவை பலப்படுதும் என நம்புகிறேன்.


>>>இறைவன் சொன்ன சட்டதிட்டங்களை கடை பிடித்துத் தான் மனிதர்கள் வாழ வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. <<<

இறைவன் (இதுவும் ஆண்பால்தானே? என் கண்ணிற்கு ஒன்றும் ஆகவில்லையே?) சொன்னாரா? எப்போது? எதில்? நான் சன் டிவியும், ஜெயா டிவியும் அடிக்கடி பார்ப்பேன். அதில் இது பற்றி எந்த செய்தியும் வரவில்லையே. அவருடைய அட்ரெஸ் கொடுத்தீர்களென்றால் அவரை நேரில் பார்த்து பேச விருப்பமாகவிருக்கிறது.

யாரோ ஒரு தனி மனிதர் அவருடைய அனுபவத்தைக் கூற, அது மட்டும்தான் உண்மையென்றும், எல்லா உண்மைகளும் கண்டறியப்பட்டுவிட்டதாகவும் கூறுவது நாடுகளை பிடிக்கவும், மக்களை அடிமையாக வைக்கவும் மட்டுமே உதவும். இந்த கீழ்த்தரமான செயலை உயர்வான ஒன்றாக என்னால் கருத முடியவில்லை. நாம் பின்பற்றுவதாலேயே ஒன்று உயர்ந்தது என்பது குழந்தைகளின் அறிவுத் திறனுக்கு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய விஷயம்தான். சொன்ன பேச்சைக் கேட்காவிட்டால் பூச்சாண்டி பிடித்துவிடுவான் என்பதற்கும் நான் சொன்னதை கேட்காவிட்டால் உனக்கு நரகம் என்று கூறுவதற்கும் ஒரு வித்தியாசமுமில்லை.

>>>> அவரவர் தங்களின் ஆன்மீக அனுபவத்திற்கு எற்ப இறையை வழி பட்டுக் கொள்ளலாம் என்றால் முடிவில் குழப்பம் தான் மிஞ்சும்.<<<

கண்டிப்பாக இல்லை. இதில் என்ன குழப்பமிருக்கிறது? எனக்கு வெண்மை நிறம் பிடிக்கும். என் தம்பிக்கு பச்சை நிறம் பிடிக்கும். ஒவ்வொருவருடைய குணமும், விருப்பங்களும் வேறு வேறாகவிருக்குமாறுதான் அந்த ஆதிபராசக்தி படைத்துள்ளாள். அவளின் படைப்பான நீங்கள் அல்லாவை முஹம்மதின் வழியாக வணங்க விரும்புகிறீர்கள். நானோ அல்லாவை எங்கும் நிறைந்த பரப்ரம்மமாக அறிகிறேன். என் நண்பருக்கோ கடவுளின் தேவையோ, பக்தியோ இல்லை, நாத்திகராகவும், நல்ல மனிதராகவும் இருக்க விரும்புகிறார். ஹிந்து மதம் இப்படி எல்லாம் இருக்க அனுமதிக்கிறது. இதை அனுமதிக்காதவர்களை எவ்வளவு பெரிய மத, சமூகத் தலைவராகவிருந்தாலும் இடது கையால் விலக்கிவிட்டு முன்னேறுகிறது.

>>>> ஒருவர் 'நான் சாய்பாபா பக்தர்' என்கிறார், மற்றொருவர் ' கல்கி விஜயகுமார்தான் என் கடவுள்' என்கிறார், வேறொருவரோ சங்கராச்சாரியாரை காலில் விழுந்து வணங்குகிறார். இதெல்லாம் உங்களுக்கு வேடிக்கையாக படவில்லையா?<<<

இஸ்லாமியர்களில் சிலர் தங்களை சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், சிலர் ஷியா குழுவென்றும், சிலரோ வகாபிகள் என்றும் கூறுகிறார்கள். சூபிக்களோ ஹிந்து மத கருத்துக்களின் உண்மையால் பாதிக்கப்பட்டு இறையை தன் காதலனாகவும், தங்களை அவரின் காதலியாகவும் காண்கிறார்கள். வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

>>>> அனைத்தையும் படைத்து பரிபாலிக்கக் கூடியவன் ஒருவன் இருக்கிறான். இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அவ்வப்போது ஒவ்வொரு சமூகத்துக்கும் வேதங்களையும் இறைவன் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.<<<

"அவ்வப்போது" கொடுத்துக் கொண்டிருக்கிறானா (மீண்டும் ஆண்பால்)? அப்படியானால் இறுதி வேதம் என்ற ஒன்று இல்லை என்கிற உண்மை உங்களுக்கும் தெரியுமா? உங்களின் மனத்தெளிவு சந்தோஷமளிக்கிறது.

>>> இதை எல்லாம் தூர எறிந்து விட்டு 'நான் என் அனுபவத்திற்கேற்ப இறைவனை வழிபடுவேன்' என்பது இறைவனுக்கு நீங்கள் பாடம் சொல்லிக் கொடுப்பது போல் ஆகாதா? <<

ஆகாது. அல்லாவின் விருப்பப்படிதான் நாம் இயங்குகிறோம் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடில்லை. அல்லா என்னை பரப்பிரம்மத்தை வணங்க செய்கிறாள். வேறு ஒருவரை முருகப் பெருமானாக வணங்க செய்கிறாள். உங்களை குரான் கூறியபடி வணங்கசெய்கிறாள். இதை எதிர்த்து நீங்கள் வழிபடுவதாலேயே அந்த வழியைத்தான் பின்பற்றவேண்டும் என்பது அந்த ஆதிபராசக்தி, அண்டங்களை படைத்து, காத்து, மாற்றி லீலைகள் செய்பவளான அல்லாவை ஏளனம் செய்வது போலவும், (உங்கள் பாஷையில்) பாடம் சொல்லிக்கொடுக்க முயற்சி செய்வது போலவும் ஆகிவிடும்.

>>>> யஜீர் வேதத்தில் இயற்கை பொருட்களை வணங்க தடை செய்யப் பட்டுள்ளது.<<<

அந்த குறிப்பிட்ட பகுதியை இங்கே கூறுங்களேன்.

>>> ஒரே இறைவனிடமிருந்து இரண்டு கருத்துகள் எப்படி வர முடியும்? <<<

உங்கள் மகனுக்கு நீங்கள் அப்பா. தம்பிக்கோ அண்ணா. நீங்கள் ஒருவரா, பலரா?

---------

>>>'உண்மை தெரியாமல் இஸ்லாத்தை விமரிசித்து விட்டேன்' என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. குர்அன் தமிழ் மொழி பெயர்ப்பை தொடர்ந்து படித்து வாருங்கள். மூன் ப்பளிகேஷன் வெளியிட்ட பி.ஜைனுல்லாபுதீன் அவர்களின்மொழி பெயர்பப்பில் தமிழும் எளிமையாக்கப் பட்டுள்ளது. உங்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
<<<

சுவனப்பிரியன், உண்மையை அறிவதும், அறிய விழைவதும் மனித இயல்பு. அந்த வகையில் தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொள்வதுதான் கற்றுக்கொள்வதற்கான முதல்படி (ஹிந்து மதம் அப்படித்தான் கூறுகிறது). மூன் ப்பளிகேஷன் வெளியிட்ட பி.ஜைனுல்லாபுதீன் அவர்களின்மொழி பெயர்பப்பில் வெளியாகியுள்ள குரானை இங்கே பெங்களூரில் வாங்க முயற்சிப்பேன். நன்கு படிக்கவும் விரும்புகிறேன். இன்ஷா அல்லாஹ்!!

>>>இறைவன் எப்படிப் பட்டவன். அவன் ஆணா பெண்ணா என்றெல்லாம் அந்த இறைவன் சொல்லாத போது நாமாக எப்படி கற்பனை செய்து கொள்ள முடியும்? அது என்றால் உயர்திணை ஆகாது. அவர்கள் என்றால் பன்மையாகி விடும். பல கடவுள்கள் என்றாகி விடும்.'தன்னை யாரும் பெறவுமில்லை:யாராலும் பெறப்படவுமில்லை' என்று சொல்வதிலிருந்து மனிதர்களின் வாழ்க்கை முறைக்கு அப்பாற் பட்டவனே இறைவன். அப்படி ஒரு சொல் தமிழில் இல்லை. எனவே நாம் விளங்கிக் கொள்வதற்காக மொழி பெயர்ப்பாளர்கள் அவன் என்ற சொல்லை பயன் படுத்துகிறார்கள். குர்ஆனின் எந்த இடத்திலும் இறைவன் தன்னை ஆண் என்று குறிப்பிட்டுக் கொள்ளவில்லை<<

பிறகு எதற்காக எப்போதும் இறையை அவன், இவன் என்று கூற வேண்டும்? அவள் என்று ஏன் கூறவில்லை?

இதற்கு ஆணானவன் பெண்ணைவிட உயர்ந்தவன் என்ற கருத்து காரணமாக இருக்கிறதா?

தமிழில் சரியான வார்த்தை பிரயோகம் இல்லை என்று கூறுகிறீர்கள். மூல மொழியான அரபியில் கடவுளை எங்கனம் அழைக்கிறார்கள்? அவ்வார்த்தைகள் பால் அடிப்படியிலானதா, அல்லது பால் சாரா வார்த்தையா? பால் சாரா வார்த்தை என்றால் அது அஹ்றிணையைக் குறிக்கிறதா? அல்லது இறையை குறிக்க இம்மூன்றும் தாண்டிய புனிதமான வார்த்தை பிரயோகத்தை அரபி பயன்படுத்துகிறதா?

என்னுடைய கேள்விக்கு தங்கள் பதில் மழுப்பலாகத்தான் இருக்கிறது. என்னுடைய கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்றே தோன்றுகிறது. உங்களுடைய பதிலுக்கு என்னுடைய கேள்வியை பொருத்த முயற்சி செய்திருக்கிறீர்கள்.

வேறு ஒரு சந்தேகம். பெண்களுக்கும் சுவனத்தில் இடமுண்டு என்பது தெரிந்து சந்தோஷமடைந்தேன். அவர்களுக்கு ஆண்களுக்கு கிடைக்கின்ற அதே மாதிரியான சொஉகரியங்கள் கிடைக்கின்றனவா? உதாரணமாக அடிக்கடி ஹிந்துத்துவவாதிகளால் கூறப்படும் ஏZஉ அழகான, சூடான, என்றுமே கன்னியராக உள்ள, சூப்பர் சுந்தரிகள். சுவனத்தை சென்றடையும் பெண்களுக்கு அந்த அளவு அழகாக இல்லாவிட்டாலும், சுமாரான ஏழு ஆண்கள் கிடைப்பார்களா? அல்லது அவர்களுக்கும் ஏழு சுந்தரிகள்தானா?

>>>உங்கள் விருப்பத்திற்கு பல வழிகளையும் பின் பற்றாதீர்கள் வழி தவறி விடுவீர்கள் என்று இறைவன் தெளிவாக விவரிக்கிறான்.<<<

1. என்னுடைய கேள்வியே சொன்னது இறைவன் என்பதை எங்கனம் நீங்கள் நிரூபிக்கிறீர்கள்? நீங்களோ, குரானோ, அல்லது ஜெய்னுல்லாபுதீனோ கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு நீங்கள் தரும் அத்தாக்ஷி என்ன? இது நம்பிக்கையின் அடிப்படையில் செய்ய வேண்டிய விஷயம் என்றால், "அல்லா என்று ஒரு கடவுள் இல்லை" என்பதும் ஒரு நம்பிக்கைதானே?

2. ஏறத்தாழ இதே கருத்தைத்தானே வேறு சில மதங்களும் கூறுகின்றன. அப்படியிருக்கையில் உங்களுடையது மட்டுமே சரியானது என்பதை தாங்கள் நடைமுறையில் எங்கனம் வலியுறுத்தி, நிச்சயம் செய்கிறீர்கள்?

3. இதை நடைமுறைப்படுத்த தாங்கள் (இஸ்லாம்) மேற்கொள்ளும் வழிமுறைகள் என்னென்ன?

4. இக்கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சமுதாயத்தில் (பூலோகத்தில்) எங்கனம் நடத்தப்படவேண்டும் என இஸ்லாம் கூறுகிறது?

>>>> தமிழகத்தில் இருந்தால் விண் டிவியிலும் அய்ரோப்பா அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் நீங்கள் இருந்தால் டான் டிவியிலும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழச்சி ஒளிபரப்பப் படுகிறது. அதை தொடர்ந்து பார்த்து வாருங்கள். பல உண்மைகள் விளங்கும்.<<<

நான் இருக்கும் பெங்களூரின் ஒரு பகுதியில் இவை தெரிவதில்லை. ஆனால், க்யூ டிவி தெரிகிறது. அவ்வப்போது பார்க்கிறேன். ஒரு மார்க்க அறிஞர் பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். பிரமிக்க வைக்கும் நினைவாற்றல். எல்லா மத நூல்களிலிருந்தும் அத்தியாயம், பக்கம் முதலான தகவல்களைக் கூட, அம்மதக் கருத்துக்களோடு கூறுகிறார். ரசிக்கும்படியாகவும், நம்முடைய புத்தியை உபயோகிக்க ஒரு நொடி மறந்தாலும் அவர் கூறுவதை நம்பிவிடக்கூடிய அபாயத்துடனும் அது நன்றாகவே இருக்கிறது. என்ன, அவர் சொல்லுகிற பதில் தவறானது என்று கூற வாய்ப்பில்லை என்பது தெரியாமல் நடத்திவருகிறார்கள்.

>>> மூன் பப்ளிகேஷன், இரண்டாவது மாடி,போஸ்ட் ஆபீஸ் தெரு, மண்ணடி,சென்னை௬00001 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பி.ஜெய்னுல்லாபுதீன் அவர்களை நேரிலும் சந்தித்து மார்க்க விளக்கங்கள் பெறலாம்.<<

நான் கடவுளின் அட்ரெஸ் கேட்டதற்கு நீங்கள் கொடுத்த பதில் இது. ஹிந்துக்களில் சிலர் ஷிர்டி, புட்டபர்த்தி சாயி பாபாக்களையும், கல்கியையும் வணங்குவதை குறை கூறும் தாங்கள் கடவுளின் அட்ரெஸ்ஸாக பி.ஜெய்னுல்லாபுதீனின் அட்ரெஸ்ஸைக் கொடுத்துள்ளீர்கள்.

எந்த மதத்தவராகவிருந்தாலும் மனித மனம் ஒன்று போலத்தான் சிந்திக்கிறது. செயல்படுகிறது. ஆனால் ஒரே டிஸ்ட்ரிப்யூட்டரிடமிருந்து, ஒரே விதமான அரிசியை, ஒரே விதமான விலையில் வாங்கும் இரு வேறு கடைக்காரர்கள் தங்கள் கடை அரிசிதான் சிறந்தது என்று கூறுவதற்கும், நீங்கள் இஸ்லாம் "மட்டுமே" சிறந்தது என்று கூறுவதற்கும் வித்யாசம் இல்லை. யார் நன்கு மார்கெட்டிங் செய்கிறார்களோ (இந்த மார்கெட்டிங்கில் பலவகை உண்டு) அவர்களிடம் மக்கள் செல்கிறார்கள். அதிக மக்கள் செல்வதாலேயே ஒரு கடையின் அரிசி மற்ற கடையை விட உயர்வானது என்று கூறுவது அறிவீனம்.

------

>>> ஷியா,சன்னி,வகாபி,சூஃபி என்ற பிரிவுகள் இருந்தாலும் அனைவருக்கும் குர்ஆன் ஒன்றுதான்.இறைத் தூதர் முகமது நபிதான். பிறகு ஏன் பிரிவு என்றால் முகமது நபி குர்ஆனுக்கு கொடுத்த விளக்கத்தை முறையாக விளங்காமல் தங்கள் இஷ்டத்துக்கு விளங்கிக் கொண்டதனாதல் வந்த விளைவுகளே நாம் மேலே பார்த்தது.

ஆனால் இந்து மதத்தில் உள்ள பிரிவில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடவுள். அத்தனைப் பேருக்கும் கொள்கைகளிலும் மிகுந்த வேறுபாடு. <<<

அதாவது பல புத்தகங்களாலும், பல கடவுள்களாலும், பல குருமார்களாலும், பல்வேறுபட்ட கருத்துக்களாலும் (உங்கள் கருத்துப்படி) ஏற்படும் குழப்பங்கள் நீக்கப்படவேண்டும். தவிர்க்கப்படவேண்டும்.

ஆனால், ஒரே புத்தகத்தையும், ஒரே கடவுளையும், ஒரே இறைத்தூதரையும் வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது சரியானது. விரும்பவேண்டியது. சரிதான்.

>>> ஆனால் இந்த பல தெய்வக் கொள்கையை இந்து மத வேதங்கள் கண்டிக்கின்றன. <<<

இல்லை. இருப்பது ஒன்றுதான் என்று கூறுவதோடு, அதை பல வடிவங்களிலும் வணங்குவது ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்றுதான் ஹிந்து மதம் கூறுகிறது.

>>> எனவே மதத்தின் அடிப்படையையே பெரும்பான்மையானவர்கள் மறந்து விட்டார்கள்.<<<

உண்மை. மதத்தின் அடிப்படையை பெரும்பாலானாவர்கள் மறந்து விட்டார்கள். அதனால்தான் இந்த சமூகம் பலவீனமடைந்து தங்களின் மத கருத்துக்களைப்பற்றி ஒன்றும் தெரியாமல் கீழ்த்தரமான சில பழக்கங்களுக்கு இடம் கொடுத்துவிட்டது. பிற மத கருத்துக்களின் ஆதிக்கத்தால் தன் மதக் கருத்துக்களில் மாற்றக்கூடியவைகளைக்கூட மாற்றக்கூடாது என அடம் பிடிக்கும் குழந்தையாகவுள்ளது.

>>இதற்கு காரணம் மத விவகாரங்களில் கொடுக்கப் பட்ட அளவுக்கதிகமான சுதந்திரம்.<<<

நீங்கள் ஆபிரகாமிய மதங்களின் அடிப்படையில் ஹிந்து மதத்தை அணுகுகிறீர்கள். ஹிந்து மதத்தில் தனிமனித சுதந்திரம் இருப்பதால்தான் அது இந்த அளவு நுணுக்கமாகவுள்ளது. ஆனால் சமுதாயமானது பிற ஆதிக்க மதங்களின் பாதிப்பால் குறுகிய கருத்துக்கள் தன்னை பாதுகாக்கும் என்ற தவறான எண்ணத்தில் சுருங்கியுள்ளது. அதை விரிவடையச் செய்யவும், உண்மையை விளக்கவும்தான் ஷங்கரர், ராமானுஜர், மத்வர், விவேகானந்தர், ஜெ கிருஷ்னமூர்த்தி, ரமண மகரிஷி, மேல்மருவதூர் அடிகள், நாராயண குரு போன்றோர் அவதரிக்கின்றார்கள். அவர்களின் காலில் ஹிந்துக்கள் விழுவதால் அவர்கள் மனமும் விசாலமாகிறது.

என்னுடைய சந்தேகங்களுக்கு கோபம் கொள்ளாமல் பதிலளித்தது எனக்கு சந்தோஷமளிக்கிறது. அனைத்து கேள்விகளும் பதிலை கண்டடையவில்லை என்றாலும், சில கேள்விகளுக்காவது பதிலளித்ததற்கு மிக்க வந்தனங்கள்.

-------

>>>> 1.அவ்வாறு செயல்பட குர்ஆன் முஸ்லிம்களுக்கு கட்டளை இடுகிறது. குர்ஆன் இறை வேதம் தான் என்று நான் நம்புகிறேன்.

2.மற்றவையும் இறை வேதம் என்றாலும் அவற்றில் மனிதக் கரங்கள் புகுந்து விட்டதாக குர்ஆன் சொல்கிறது. அது உண்மைதான் என்றும் விளக்கியும் இருக்கிறேன். <<<<

இரண்டுமே நம்பிக்கை சார்ந்த விஷயங்கள்தான்.

>>>> 4.'உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு' <<<

பிறகு மத மாற்றம் எதற்கு?

>>> அப்பாவிகளை குண்டு வைத்து தகர்ப்பவர்கள் கண்டிப்பாக நரகவாசிகளே! <<<

உங்களது தைரியத்தைப் பாராட்டுகிறேன். மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்களே என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்.

Tuesday, May 16, 2006

அனைவரும் அர்ச்சகராகலாம்

இட்லிவடையின் வலைப்பதிவில் (http://idlyvadai.blogspot.com/2006/05/blog-post_114776860438638361.html)இட்ட கருத்து:

யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்பது வரவேற்பிற்குரியதே. ஆனால் அதை நடைமுறை படுத்த உண்மையிலேயே அரசியல் கட்ஷிகளுக்கு ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. ரிஸர்வேஷன் மாதிரி இது ஒரு ஸ்டண்டாக முடிய வாய்ப்புகள் அதிகம்.

அர்ச்சகர் ஆவதற்கு சில தகுதிகள் உள்ளன. மிக பெரிய கோயில்களுக்கு அர்ச்சகராக வேண்டுமென்றால் நீங்கள் அதிக புலமை உடையவராகவிருக்க வேண்டும். சாதாரண கோயில்களில் அர்ச்சகர் ஆவதற்கும் தகுதிகள் தேவைப்படும்.

இந்த தகுதியை அனைவரும் அடைய முதலில் வழி செய்ய வேண்டும். இதற்கு அனைவரும் கற்பதற்குத் தேவையான வேத பாட சாலைகளை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.

தகுதியில்லாமல் பதவி பெறுவது அவமானத்தை தரும், கசப்புணர்வை வளர்க்கும்.


>>>தேவாரம், திருவாசகத்தை தானே சொல்கிறீர்கள் ? <<<

தேவாரம், திருவாசகங்கள் பண் எனும் வகையைச் சேர்ந்தவை. இவையும் கோயில்களில் ஓதப்படுகின்றன. இப்பண்ணிணை இசைப்பவர்கள் "ஓதுவார்கள்" என அழைக்கப்படுகின்றனர்.

அர்ச்சகராவதற்கு சொல்லித்தரும் பாடங்கள் வேறு. "அவையும்" அனைவருக்கும் சொல்லித்தரப்பட வேண்டும்.

எந்த காரணத்தாலும் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டுமுறை அழிக்கப்படக்கூடாது.

கிருத்துவர்கள் லத்தீன் மொழியிலும், இஸ்லாமியர்கள் அரபி மொழியிலும் வணங்க அனுமதிக்கப்பட வேண்டும். வேறு ஒரு முறையில் வழிபட விரும்புபவர்கள் தங்களுக்கென்று தனியாக ஒரு கோயில் கட்டி வழிபடலாமே.

ஒரு பிரச்சினைக்கன முடிவை நடைமுறைபடுத்தும்போது, அப்பிரச்சினையால் பலன் பெறுபவர்கள் பிரச்சினை தீராமலிருக்க காலம் காலமாக பின்பற்றிவரும் ஒரு மெதாட் வேறு ஒரு பிரச்சினையை தேவையில்லமல் நுழைத்து பிரச்சினை தீராமலிருக்கச் செய்வதுதான்.

>>>வேதததால் இந்த நிலமை தமிழனுக்கு அதை வேறு சொல்லித்தர வேண்டுமா என்ன? <<<

உங்களுக்கு வேதம் பற்றி எதுவும் தெரியாது என்பது இதிலிருந்து தெரிகிறது.

>>>IIT, IIME IIM போன்றவற்றில் "தகுதி,திறமை" பற்றி
பேசுபவர்கள் இதில் மட்டும் எதிர்ப்பு காட்டுவது ஏன்? <<<

அந்த "தகுதி,திறமை" பற்றி பேசுபவர்களில் நானும் ஒருவன். எதிர்ப்பு தெரிவிப்பவர் பற்றிய உங்கள் கற்பனை உண்மையிலிருந்து வெகுவாக விலகியிருக்கிறது.

>>>இட ஒதுக்கீடு முறையில் என்ன Stunt நடந்தது என்று விளக்க முடியுமா?.
நீங்கள் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் உள்ளது. <<<

இல்லை. தொழிற்கல்விகூடங்களிலும், உயர்கல்விகூடங்களிலும் ரிஸர்வேஷன் காரணமாக ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. காரணம் எம்மக்கள் பள்ளியிறுதியைகூட எட்ட முடியாத நிலையை உடையவர்களாக உள்ளனர்.

இதற்கு பதிலாக பொருளாதார அடிப்படையிலும், ஸ்பெஷல் கோச்சிங் முறைகளாலும் அவர்களால் மற்ற உயர் சாதி ஆட்களோடு தகுதி அடிப்படையில் போட்டி போட முடியும். சுய பெருமிதம் கொள்ளவும் முடியும்.

ரிஸர்வேஷன் என்பது ஜாதி அழியாமலிருக்க சில உயர்சாதி மக்களால் செய்யப்பட்ட ஏமாற்று வேலைதான்.

அன்பு அனானி,

>>>எங்கே காலியென்று சொல்லுங்கள் எனக்கு தெரிந்தவர்களை விண்ணப்பிக்க சொல்கிறேன்...<<<

தயவு செய்து உங்களுக்கு தெரிந்தவர்களை விண்ணப்பிக்க சொல்லுங்கள்.

ஆதாரம் கேட்டிருந்தீர்கள். என் வாழ்க்கையில் நடந்ததை சொல்லுகிறேன். பி எஸ் ஸி முடித்து விட்டு பெரும்பாலானோர் எம் ஸி ஏவிற்கு விண்ணப்பித்த காலம். கூட்டத்தோடு கோவிந்தா போட நானும் போட்டிருந்தேன். என்னுடன் படித்த சில மாணவர்களுக்கு அவர்களுடைய உயர்சாதியின் காரணமாக கிடைக்கவில்லை.

என்னுடன் கல்லூரிக்கு வந்த (அவர் படித்ததே இல்லை)ஒரு தலித் நண்பரை வலிந்து வலிந்து எம் ஸி ஏ இண்டர்வ்யூவிற்குக் கூப்பிட்டிருந்தார்கள். இன்டெர்வியூவில் கேட்கப்பட்ட கேள்விகளாக அவர் என்னிடம் கூறியதும், அதற்கு அவர் சொன்ன பதில்களும்:

நியூட்டனின் மூன்றாவது விதி தெரியுமா?

தெரியாது.

சரி விடு. பாரதிதாசன் தெரியுமா?

........ [பதிலில்லை]

தமிழ்தாய் வாழ்த்தின் முதல் இரண்டு வரிகளை சொல்லுப்பா.

அதெல்லாம் ஸ்கூல்ல சொன்னது. இப்போ ஞாபகம் இல்லை.

சரி. சரி. யூ ஆர் ஸெலெக்டட்.

ஏனென்றால் அந்த துறையில் அப்ளை செய்திருந்தது அவர் ஒருவர் மட்டுமே. ஸீட்டை நிரப்ப அவர்களுக்கும் வேறு வழி தெரியவில்லை.

இந்த நண்பர் கல்லூரியில் நடந்த அத்தனை போராட்டங்களிலும் கலந்து, கல்லெறி குழுவிற்கு தலைமை தாங்கினார். எம் ஸி ஏ முடிக்கவேயில்லை.

அதே சமயத்தில் என்னோடு எட்டாம் வகுப்பில் படித்த பக்கத்து வீட்டு மகேசுவரி என்னும் தலித் பெண் ஞாபகம் வருகிறார். அவருடைய வீட்டில் எல்லாருமே நன்றாக படிக்கிற பெண்கள். இந்த பெண் எப்போதுமே கணக்கில் 100 % மதிப்பெண்கள் எடுப்பவர்.

அருணும் ஞாபகத்திற்கு வருகிறார். தலித் மாணவரான இவர்தான் எங்கள் வகுப்பில் முதல் மதிப்பெண் எப்போதும் எடுப்பார். அன்பானவர். தொழிற் கல்விக்கான நுழைவுத் தேர்வில் ரிஸர்வ்ட் குழுவில் போட்டியிடாமல் பொது குழுவில் போட்டியிட்டார். கேட்டதற்கு இங்கனம் செய்வதன் மூலம் வேறு ஒருவருக்கு வாய்ப்பு அளிப்பதாகக் கூறினார்.

மேலே சொன்ன மூவருமே ஒரே மாதிரியான குடும்ப பிண்ணணி உள்ளவர்கள்.

Monday, May 15, 2006

புருஷ ஸூக்தத்தில் புண்ணாக்கு

தங்கமணியின் பதிவிலிட்ட (http://bhaarathi.net/ntmani/?p=215#comments)கருத்து பின்வருமாறு:

தங்கமணி,

புருஷ சூக்தம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நூல் என்று சமுத்ரா கூறுவது ஆச்சரியமளிக்கிறது. உண்மையில் புருஷ சூக்தத்தில் உள்ள தாங்கள் குறிப்பிட்ட ஸ்லோகத்திற்கு தற்காலத்தில் நீங்கள் வழிமொழியும் வியாக்யானம்தான் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை.

மனு ஸ்ம்ருதியையோ, அல்லது புருஷ சூக்தத்தையோ நேரடியாகப் படிக்காமலும், ஹிந்து தத்துவ புத்தகங்களை படிப்பதற்கு முன்னால் அவை எந்த தளத்திலிருந்து படிக்கப்படவேண்டும் என்பது பற்றிய ஹிந்து மதப் பெரியவர்கள் கூறும் கருத்துக்கள் பற்றியோ எதுவும் தெரியாமல், ஒரு சார்பு கருத்துக்கள் கொண்டவர்களின் விளக்கத்தை நம்புவது தற்காலத்தில் தங்களை அறிவாளிகளாகக் காட்டிக்கொள்ள பெரும்பாலானோர் செய்யும் சமுதாய எடிகுவட். உங்களுக்கு இதை எழுதுவது அயற்சியாய் இருந்ததில் எனக்கு வியப்பில்லை.

ராமானுஜ தத்தாச்சாரியார் எழுதியதை சில நக்கீரன் பத்திரிக்கைகளில் படித்தேன். ஜாலியாக இருந்தது. நக்கீரன் படிப்பது விடலை பருவத்திற்கே ஒருவரை அழைத்து சென்றுவிடக்கூடிய அனுபவம். ஆனால் இப்போது வயசாகிவிட்டது. நக்கீரனையோ அதில் வரும் கதைகளையோ (ஹி…ஹி..) ரசிக்கமுடிவதில்லை. படிக்க வேண்டும் என்று தோன்றினால் சரோஜா தேவியின் கதைகளோடு நிறுத்திக் கொள்கிறேன்.
சரோஜா தேவி புத்தகங்களுக்கும் கீழான புத்தகங்களை படிக்க சற்று அயற்சியாயிருக்கிறது எனக்கும்.

இதுவரை இடப்பட்ட காமென்ட்களில் ரவி ஸ்ரீனிவாஸினுடைய கருத்து அவர் விஷயங்களை பற்றி ஓரளவு தெரிந்து, புரிந்து பதிலளித்திருக்கிறார் என்பதை தெளிவுபடுத்தியது.

Friday, May 12, 2006

தமிழகத்தின் புதிய ரெமோ

Tuesday, May 09, 2006

தமிழகத்திற்கு பொற்காலம் பிறந்துவிட்டது

கலைஞர் கொண்டுவந்த திட்டங்களுக்கு அம்மா சாவு மணி அடித்து வருவதும், அம்மா கொண்டுவந்த திட்டங்களுக்கு கலைஞர் மூடு விழா நடத்திவருவதும் நாம் அறிந்ததே. இதனால் எந்த நன்மையும் கிடைக்காமல் கருணாநிதி குடும்பதாருக்கு அம்மாவாலும், அம்மாவின் குடும்பத்தாருக்கு கலைஞராலும் பிரச்சினைகள் தொடர்ந்தன. இந்த ஒற்றுமையின்மையின் காரணமாக தமிழகத்திற்கு முழுமையாக இவர்களால் சேவை (வேறென்ன மொட்டையடிப்பதுதான்) செய்ய இயலாததால் இரு வீட்டுப் பெரியவர்களும் ரகஸியமாக சந்தித்து இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டுள்ளார்கள். அதன் விளைவை கீழ்கண்ட படத்தில் காணலாம்.

பின் குறிப்பு: இத்திருமணத்திற்கு நானே காரணமென்று திருவாளர் ஸுப்பிரமணியன் ஸ்வாமி கூறிக்கொள்கிறார்.

திருமண வாழ்த்துப் பாடலை சமீபத்தில் வெளிவந்து ஹிட்டான பாடலின் மெட்டிலேயெ எழுதியதாக இப்பாடலை எழுதிய கவிஞர் கூறியுள்ளார். அவர் யாரென்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு ஜாக்பாட் காத்திருக்கிறது.

க்ளூ: அந்த திரைப்படப் பாடலை எழுதியவரும் இதே கவிஞர்தான்.

Friday, May 05, 2006

அக்ஞானத்தால் விளையும் சுய-ஏளனம்

திரு. ஜெயக்குமாரின் வலைப்பதிவுகளில் நான் பதிந்த என்னுடைய கருத்துக்களும், பதில்களும் இங்கே தனிப்பதிவாக இடப்படுகிறது. இந்த பதிவு பேராயர் ஸ்ரீலஸ்ரீ எஸ்ராவையும், மதுரை ஆதினகர்த்தரையும் சமனப்படுத்திய முயற்சிகளின் விளைவு. மற்றவர்களின் கேள்விகளும், கருத்துக்களும் >>>> <<<< இது போன்ற அடைப்பு குறிகளுக்குள். அதற்கு எம் பதில்கள் இப்பதிவாகிறது.

முழு விவரங்களுக்கு http://jeyakumar777.blogspot.com/2006/04/blog-post_26.html.

-------------------------------------------------------------------------------------

>>>>>

மாயவரத்தான்... said...

இதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை ஜெயக்குமார். மதுரை ஆதினம் செய்யலாம், எஸ்ரா செய்யக் கூடாதா?

<<<<<<

>>>>

ஜெயக்குமார் said...
//அண்ணாச்சி:
எஸ்றாவை கவனிச்சு பதிவு போடறீங்க, மதுரை ஆதீனத்தை கண்டுக்காம விட்டுட்டீங்களே. ஏஏஏஏஎஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்...........//<<<<<<

>>>>>

D The Dreamer said...
அண்ணாச்சி:

.... ஆனா, இப்போ எஸ்றாவை வாரற மாதிரி ஏன் ஆதீனத்தோட அரசியல கேள்வி கேக்கலை?
நீங்க இங்க எஸ்றாவை கேட்கற ஒவ்வொரு கேள்வியையும் (கொஞ்சம் கொஞ்சம் மாத்தி) ஆதீனத்துக்கிட்ட கேக்க முடியும். அதையும் பதிவா போடுங்க நீங்க நடுநிலைவாதின்னு ஒத்துக்குறோம்.

<<<<<<<

>>>>>

இன்னொரு விதத்தில் மதுரை ஆதீனத்தைக்காட்டிலும் எஸ்றா நேர்மையானவர். அவர் ரகசிய பிரச்சாரம் செய்வதில்லை. உள்வேலைகளிலும் ஈடுபடுவதில்லை.வெளிப்படையாகவே தான் சார்ந்த கட்சியை அறிவித்துள்ளார்.

by
Ganesh
<<<<<<<<<<<<




எஸ்ரா மிகப் பெரும்பான்மையான கிருத்துவர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளின் முகம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், மதுரை ஆதீனம்........?

காஞ்சி மடாதிபதிக்கு நடந்ததில் ஒரு 2 அல்லது 3 சதவீதமாவது எஸ்ராவுக்கு செய்ய முடியுமா? அல்லது குறைந்த பக்ஷம் ஏழ்மையில் வாடும் குழந்தைகளை வன்புணர்ச்சி செய்யும் யாருமே அறியாத ஒரு பாதிரியின் மேல் ஒரு FIRஆவது பதிவு செய்ய முடியுமா?

மதுரை ஆதீனம் பற்றி நமது பத்திரிக்கைகள் நக்கலாகவே எழுதுகின்றன. அவர் நடத்தும் ஜோக்குகளுக்கு இந்த மரியாதைதான் கிடைக்கும். ஆனால் இதுபோன்ற ஜோக்கர்கள் கிருத்துவ மதத்திலோ, இஸ்லாமிய மதத்திலோ இல்லையா. டென்மார்க் கார்ட்டூன் பிரச்சினையின் போது உ.பியை சேர்ந்த ஒரு மந்திரி பத்வா அறிவித்தார். ராஜ் டிவியின் காலை, மாலை நிகழ்ச்சிகளில் "ஆண்டவரை பற்றி" பிரசங்கம் செய்பவர் "கல்லையும், உருவப் பொம்மைகளையும்" வணங்கும் "காட்டுமிராண்டிகள்" "பிசாசுகளை" வழிபடுவாதாக "அன்பையும்" "அறிவையும்" புகட்டுகிறார். இது பற்றி யாராவது சொல்கிறார்களா? சொன்னால் உடனே அவருக்கு ஹிந்துத்துவவாதி என்றோ, அல்லது பார்ப்பான் என்றோ முத்திரை குத்தி விடுகிறார்கள். இதனால் நடுநிலமையானவர்கள்கூட பேச பயப்படுகிறார்கள்.

காஞ்சி மடாதிபதி கைது செய்யப்பட்ட போது எல்லா ஊடகங்களும் எப்படி அதை வெளியிட்டன? திரிபுராவில் பாதிரியார்கள் நடத்திவரும் வன்முறை வெறியாட்டத்தைப் பற்றி எந்த பத்திரிக்கையாவது இதுவரை எழுதியுள்ளதா? (மேலதிகத் தகவல்களுக்கு http://www.thinnai.com/?module=displaystory&story_id=206042110&format=html படிக்கவும்.) இணையம் இவர்களின் கண்ட்ரோலில் இல்லாததால் இது பற்றி எழுத முடிகிறது. இன்னொரு விஷயம் தெரியுமா? உலகத்தின் அழிவைப் போல கிருத்துவ மதம் முன்வைக்கும் மற்றொரு நம்பிக்கை சாத்தான். அவனுடைய எண் 666. அதை செமிடிக் மொழி ஒன்றில் மொழி பெயர்த்தால் வருவது என்ன தெரியுமா? WWW. வேல்ட் வொய்ட் வெப். இணையம்தான். மற்ற புரளிகள் போல இப்படியும் ஒரு புரளி.

>>>>

Anonymous said...
நண்பர் muse என்ன சொல்ல வருகிறார்?

........
.........
பாதிரியார் ஜான் ஜோசப் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை பெற்று சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். திருச்சியில் ஒரு பாதிரியார் சிறுவர்களுடன் வன்புணர்ச்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

.......
........
.......

இவர்களுக்கெல்லாம் எந்த முன்னாள் ஜனாதிபதிகளும் சிபாரிசுக்கு அலையவில்லை.

......
........

muse உங்கள் சொற்களில் அந்த வெறி அப்பட்டமாகத் தெரிகிறது.

by
Ganesh
<<<<<<<<


நண்பர் கணேஷ் அவர்களே,


ஒரு முன்னாள் ஜனாதிபதி சிபாரிசுக்கு அலைந்தார் என்பது உங்களுக்கு எப்படி தெரிய வந்தது?

- மீடியாக்களின் மூலம். நல்லது.

மாட்டிக் கொண்டுவிட்ட இந்த இரண்டு பேருக்காகவும் யாரும் சிபாரிசுக்கு அலையவில்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?

- ஏனென்றால் எந்த மீடியாவும் அது பற்றி வெளியிடவில்லை.

மீடியாக்களின் மூலம் உலகை பார்ப்பதற்கு பதிலாக நீங்கள் உங்கள் தெருவில் என்ன நடக்கிறது என தயவுசெய்து பாருங்கள்.

நான் நீங்கள் கருதுவது போல வெறியனல்ல. நான் ஒரு ஹிந்து. எல்லா தெய்வங்களையும் என்னால் வழிபட முடியும். க்ருஷ்ணனின் மேல் எவ்வளவு பக்தியோ அவ்வளவு பக்தியோடு நான் ஏசுவையும், அல்லாவையும் வணங்குகிறேன். ஒரு கடவுளை வணங்க பக்தி செய்ய ஒரு மதத்திற்கு மாற வேண்டியதில்லை என்பது என் மதம் சொல்லித் தரும் கருத்து. அனைத்து மனிதர்களிலும் தெய்வங்களை காண முயற்சி செய்கிறேன். எல்லா மனிதர்களும் ஒன்றுதான் என்பது என் புரிதல்.

செயின்ட் த்ரேஸா ஆப் அஸிஸி முதல் சமீப காலம் வரை வாழ்ந்த அன்டோனி டி மெல்லோ வரை எனக்கு கிருத்துவ புனிதர்கள் மேல் பக்தியுண்டு.

ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்தவரை மட்டும் மீடியாக்களும் அரசியல்வாதிகளும் தாக்குவது எனக்கு உடன்பாடல்ல.

நீங்கள் ஜான் ஜோசப் பற்றி ஞாபகம் வைத்துள்ளது சந்தோஷமாக உள்ளது. மீடியாக்களில் போலிச்சாமியார்களுக்கு கொடுக்கப்படும் பெயர் "ப்ரேமானந்தா" "ஜான் ஜோசப்" அல்ல. மீண்டும், மீண்டும், மறுபடியும் மீண்டும் பிரபலப்படுத்தப்படும் பெயர் "ப்ரேமானந்தா" "ஜான் ஜோசப்" அல்ல. மக்களுக்கு ஜான் ஜோசப் ஞாபகம் இல்லை. ஞாபகமில்லாத விஷயம் நடக்காத விஷயமாகிறது.

பெரும்பாலான பொதுஜன திரைப்படங்களில் போலி சாமியார்களாகக் காட்டப்படுவது ஹிந்து சாமியார்களே. எங்கேனும் இஸ்லாமிய, கிருத்துவ மதத்தை சார்ந்த போலிகளை திரைப்படங்கள் ஒளிபரப்ப முடியுமா?

தன்னை ஒரு பகுத்தறிவுவாதியாக காட்ட விரும்பிய நடிகர் மன்சூர் அலி கான் ஒரு படத்தில் ஒரு போலி சாமியாராக நடித்தர். (வேறு படங்களிலும் நடித்திருக்கலாம்). அதில் தலைவரை சுற்றி எப்போது பார்தாலும் இள வயசு குட்டிகள்தான். இந்த லட்ஷணத்தில் அந்த நடிகருடைய உடை அலங்காரம் அப்படியே ஸ்வாமி விவேகானந்தரின் உடை. இந்தியாவிலுள்ள ஏழை மக்களுக்காக "உண்மையாகவே" பாடுபட்டு தன் வாழ்வை, சுகத்தை தியாகம் செய்த அந்த புனிதரை ஞாபகப்படுத்தும் உடை. இது ஒரு உதாரணம்தான். இது போல் பல படங்களை என்னால் அடுக்க முடியும். உங்களால் கிருத்துவ, இஸ்லாமிய சாமியார்களை பற்றி இதுபோல் கூறுகின்ற ஏதேனும் ஒரு திரைபடத்தை கூற முடியுமா? ஒரே ஒரு தமிழ்படம். நீங்கள் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.


ஒரு விளையாட்டிற்கு இந்த முயற்சி செய்து பாருங்களேன். கூகிளில் போய் முதலில் ப்ரேமானந்தா என்று டைப் செய்து தேடிப்பாருங்கள். எத்தனை பக்கங்கள் வருகின்றன என்பதையும் எவ்வளவு பொருத்தமானவையாக அவை இருக்கின்றன என்பதையும் கணக்கிடுங்கள். பின் ஜான் ஜோஸப் என டைப் செய்து தேடவும். எத்தனை பக்கங்கள் வருகின்றன என்பதையும் எவ்வளவு பொருத்தமானவையாக அவை இருக்கின்றன என்பதையும் கணக்கிடுங்கள். முடிவு என்ன என்பதை நீங்கள் எனக்கு சொல்ல வேண்டாம்.

உண்மையில் இதை நான் இதுவரை முயற்சி செய்ததில்லை. இந்த பதிலை உங்களுக்கு அளித்துவிட்டு இந்த சோதனையை நானும் செய்து பார்க்கப் போகிறேன்.

ஒரு திருச்சி சாமியாரைப் பற்றி பொதுப்படையாகக் கூறினீர்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே பலருக்கு தெரியாது. அவரது பெயர்கூட உங்களுக்கு இதை டைப் செய்யும்போது ஞாபகம் வரவில்லை.

ஞாபகமில்லாத விஷயம் நடக்காத விஷயமாகிறது.

>>>>>>>>>

பெரியார் said...
நண்பர் ம்யூஸ் அவர்களே எங்கே பெரும்பான்பையானவர்கள் ஒரு மதத்தைப் பின்பற்றுகிறார்களோ அங்கே அம்மதத்தினைப் பற்றிய கேலிகள் கிண்டல்கள் உள்ளன என்பது கண்கூடு ! நம் நாட்டில் இந்துக்கள்.இதேபோல் ஏசுவை கிண்டல் செய்து கிறுஸ்துவ பாதிரிகளை கிண்டல் செய்து ஏகப்பட்ட ஆங்கில திரைப்படங்கள் வந்துள்ளனவே !

<<<<<<<<<

ஸ்ரீமான் பெரியார்ஜி,

பெயருக்கேற்ற பதில் சொல்லியிருக்கிறீர்கள். இந்தியாவில் பெரும்பான்மையாக பின்பற்றப்படும் மதங்களில் ஹிந்து மதமும் ஒன்று. பெரும்பான்மை மதங்களில் அதிக அளவில் உள்ளது ஹிந்து மதம் என எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அது மட்டும்தான் பெரும்பான்மை மதம் என்பது பூசணிக்காயை வெங்காயத்தில் ஒளிப்பது. பாகிஸ்தானை விட, பங்களாதேஷை விட இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகம். பெயருக்கேற்றபடி வேலை செய்கிறீர்கள்.

மற்ற நாடுகளில் ஒரே ஒரு பெரும்பான்மை மதம்தான் உள்ளது.

நீங்கள் பெரும்பான்மையை எண்ணிக்கை அளவில் பார்க்கிறீர்கள். அப்படியே பார்த்தாலும் ஒரே குழுவாக ஹிந்துக்கள் இல்லை. தனி மனித மெய்ஞான விடுதலையை முக்கியமாக்குவதால் இந்த மதத்தில் பெரும்பான்மையாக ஒரு குறிப்பிட்ட மனிதரையோ, புத்தகத்தையோ வழிபடுவதில்லை. குழுக்களின் அளவில் கணக்கிடுவீர்களானால் இது உண்மையில் பல சிறுபான்மையினர் உள்ள ஒரு பெரும்பான்மை மதம். உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் ஒரு ஒற்றுமையில்லாத கூட்டணி கட்சி. ஜெயலலிதாவை மரியாள் போல போஸ்டர் வைத்ததற்கு இந்தியா முழுவதும் கிருத்துவர்கள் ஒரு குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமையில் மணியடித்தது போலவோ, எங்கோயிருக்கும் டென்மார்க்கில் ஒரு பத்திரிக்கை தன்னுடைய பத்திரிக்கை சுதந்திரத்தை உறுதி செய்து கொள்ள வெளியிட்ட கார்டூனுக்காக இந்தியா முழுவதும் பற்றி எரிந்தது போலவோ, அதில் நான்கு அப்பாவி பொதுமக்கள் (ஹிந்துக்கள்) கொல்லப்பட்டது போலவோ நடந்துகொள்வார்களா ஹிந்துக்கள். இதெல்லாம் ஹிந்து மதத்தை அவமானப்படுத்துவதால் நடக்காது. ஜெயலலிதாவை அன்னை பராசக்தியாக உருவகித்து நீங்கள் இன்னமும் கட் அவுட் வைத்து கொண்டுதான் இருக்கிறீர்கள். போஸ்டர்கள் அடிக்கப்படுகின்றன.

உடனே நீங்கள் குஜராத்தை இழுப்பீர்கள். அதில் என்னவோ முஸ்லீம்கள் மட்டும்தான் கொல்லப்பட்டதாகக் காட்டும் மீடியாக்களின் செய்திகளை உதாரணம் சொல்வீர்கள். உண்மையில் அந்த மதக் கலவரத்தில் இறந்த முஸ்லீம்களின் எண்ணிக்கை, ஹிந்துக்களின் எண்ணிக்கையைவிட அதிகம். அதனால் இதை ஒருவகையில் முஸ்லீம்களின் தோல்வியாகத்தான் அம்மதத்திலுள்ள தீவிரவாதிகள் கருதுகிறார்கள். அதை சரிகட்டத்தான் அத்தனை களேபரமும்.

அதை அப்படியே ஏற்றுக்கொண்டு கண்டனம் செய்த, செய்கிற, வன்மையாகக் கண்டிக்கிற ஹிந்துக்கள் இந்த வன்முறையை ஆதரிக்கும் மனிதர்களை விட எண்ணிக்கையிலும், பலத்திலும் அதிகம். ஒரு கேள்வி கேட்கிறேன். இதுவரை எந்த ஒரு மௌல்வியாவது, அல்லது இஸ்லாமிய தலைவராவது காஷ்மீரிலும், பம்பாயிலும், கோயம்புத்தூரிலும் குண்டு வைத்து சம்பந்தமேயில்லாத அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த தீவிரவாதிக்கு எதிராக பத்வா அறிவித்ததுண்டா? அட, பத்வா கூட வேண்டாம். அந்த தீவிரவாதிகள் எல்லோரும் நரகத்திற்கு போவார்கள் என்றாவது சொல்லட்டுமே. அது கூட வேண்டாம். மதத்தின் பெயரால் பொது மக்களை கொன்ற "எல்லா" மதத் தீவிரவாதிகளும் நரகத்திற்குத்தான் போவர்கள் என்றாவது அனைவரும் அறியும்படி ஒரு அறிக்கையை ஒரு இஸ்லாமிய மதத் தலைவர் (அட அதுவும் வேண்டாம் ஒரு சாதாரண இஸ்லாமியர்) அறிவிப்பரா?



ஒற்றுமையாய் ஒரே குழுவாய் செயல்படுகின்ற ஒரு மதமாக ஹிந்து மதத்தை கருத முடியாது. ஆனால் கிருத்துவ இஸ்லாமிய மதங்கள் அங்கனம் செயல்படுகின்றன. அந்த வகையில் பார்த்தால் கிருத்துவ இஸ்லாமிய மதங்கள்தான் பெரும்பான்மை மதங்கள்.

எந்த அரசியல் கட்சியாவது பெரும்பான்மை ஹிந்துக்களின் ஓட்டுக்களை பற்றி கவலைப்படுகின்றனவா? இல்லை. அவை குறி வைப்பது ஜாதி வோட்டுக்களைத்தான். இங்கே ஒவ்வொரு ஜாதியும் ஒரு மதம்போல் செயல்படுகின்றது. அதே சமயத்தில் பிஜேபி உட்பட கட்சிகள் கவலைப்படுவது சிறுபான்மையினரின் (கிருத்துவ இஸ்லாமிய) ஓட்டுக்களுக்குத்தான். ஏனென்றால் அவை நிஜமான உலகத்தில் பெரும்பான்மை மதங்கள். வெறும் பெரும்பான்மை மட்டும் அல்ல. பலமுள்ள பெரும்பான்மை. ஏதேனும் எதிர்த்தால் காயடித்துவிடுவார்கள். அதனால்தான் அவற்றைப் பற்றி யாரும் கேலி செய்ய அஞ்சுகிறார்கள். நீங்களும்தான்.

இங்கே கிருத்துவ பள்ளிகளில், கல்லூரிகளில் இடம் கிடைக்க நீங்கள் கிருத்துவராக இருந்தால் வாய்ப்பு அதிகம். ஏதேனும் ஒரிரு ஹிந்துக்களை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அவர்களும் மிக மிக நன்றாக படிப்பவர்களாக இருக்க வேண்டும். ஒருவித அறிவிக்கப்படாத கோட்டாவை இவர்கள் பின்பற்றுபவர்களாகவிருக்கிறார்கள்.

நீங்கள் பெரும்பான்மை மதம் பின்பற்றப்படும் நாடுகள் என எழுதியபோது அமெரிக்காவையும், இங்கிலாந்தையும், யூரோப்பிய நாடுகளையும் மனதில் வைத்துள்ளீர்கள் என நினைக்கிறேன். அங்கே கிருத்துவ மதத்தை மட்டுமல்ல, மற்ற மதங்களையும் கிண்டல் செய்து நீங்கள் படம் எடுக்கலாம். படங்கள் உண்டு. இதே ஹிந்து மதத்தையும், புத்த மதத்தையும் கேலி செய்தும் அங்கே ஆங்கில படங்கள் எடுத்துள்ளார்கள். இந்தியாவை போல ஒரே ஒரு சோப்ளாங்கியை மட்டும் அவர்கள் கேலி செய்வதில்லை. டென்மார்க் பத்திரிக்கையை இந்த விஷயத்தில் எடுதுக்காட்டாக கொள்ளலாம்.

நான் ஒரே ஒரு தமிழ் படத்தை பற்றி கேட்டல் நீங்கள் ஆங்கில படத்தை பற்றி கூறுகிறீர்கள். எங்களூர் குப்பனும், சுப்பனும் தரமான ஆங்கில படங்களையா பார்க்கிறார்கள்? அவர்கள் பார்க்கும் ஆங்கில படங்களில் முக்கலும், முனகலும்தான் அதிகம். வசனம் குறைவு. கதையை ஒரு ஸ்டாம்பின் பின்னால் நீங்கள் எழுதிவிடலாம்.

கலைக்கான சுதந்திரம் என்ற பெயரில் ஒரு ஹுசைன் ஸரஸ்வதியையும், பாரத மாதாவையும் ஆபாசமாக வரையலாம். ஆனால் அதே ஆள் கிருத்துவ இஸ்லாமியத்தில் உயர்வாகக் கருதப்படும் பெண்டிரை அதேபோல் வரைய மாட்டார். நீங்கள் சொல்லலாம் உங்கள் கோயில் சிற்பங்கள் தெய்வங்களை நிர்வாணமாக வைத்துள்ளனவே என்று. அந்த காலத்தில் மனிதர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே தெய்வங்களும் வடிவமைக்கப்பட்டார்கள். இஸ்லாமிய கிருத்துவ ஆதிக்கங்களின் விளைவாக தற்காலத்தில் ஹிந்துக்களும் தங்கள் தெய்வங்களை மரியாதைக்குரிய ஆடை கலாச்சாரத்துடந்தான் வணங்குகிறார்கள். தற்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் தெய்வங்களை தற்கால ஒழுக்க விதிகளுக்கேற்ப ஆடைகளோடுதான் படைக்கிறோம், வணங்குகிறோம்.



நான் சொல்வதெல்லம் ஹிந்து மதத்தை கேலி செய்யாதீர்கள் என்பதில்லை. அந்த மதத்தை மட்டும் கேலி செய்வதை விடுங்கள். எந்த மதத்தையும் கேலி செய்யாதீர்கள். அல்லது எல்லா மதங்களையும் கேலி செய்யுங்கள். என்னுடைய கருத்தின்படி ஆன்மீகத்தை அழித்து அரசியல் செய்வதே மதங்கள். அவை எந்த வடிவில் இருந்தாலும் அவற்றிலுள்ள முட்டாள்தனமான, கீழ்த்தரமான விஷயங்கள் விமர்சனம் செய்யப்படவேண்டும்.

அதுவன்றி ஹிந்து மதம் மாறுதல்களை ஏற்று கொள்ளுகின்ற ஒரு மதம். மாறுதல்களை ஏற்றுக் கொள்ளாமல் அதை ஒரு இறுகிய அமைப்பாக மாற்ற நடத்திய முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. கிருத்துவ இஸ்லாமிய ஆட்சிகளின் விளைவால் அம்மதங்களை போன்றே ஹிந்து மதத்தையும் ஒரு இறுகிய அரசியல் அமைப்பாக மாற்ற தற்காலத்தில், மக்களின் ஆதரவில்லாமல் நடந்துவரும் முயற்சிகளும் தோல்வியில் முடியும் (அதுவரை இந்த மதம் தப்பிப் பிழைத்தால்).

அதெல்லாம் சரி தலைவரே. அரேபிய, வளைகுடா நாடுகளை விட்டுத் தள்ளுங்கள். ஜனநாயகத்தை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும், உண்மையாகவே முஸ்லீம்கள் "பெரும்பான்மையாகவுள்ள" பங்களாதேஷிலோ, மலசியாவிலோ இஸ்லாமையோ, நபிகள் நாயகத்தையோ கேலி செய்து ஏன் ஒரு பத்திரிக்கையோ, திரைப்படமோ வரவில்லை?


>>>உங்கள் மத பெரியவரிடம் சொல்லிப்பருங்கள் !!!<<<

நான் என்ன சொல்வது? இதை என்னிடம் சொன்னவரே என் மதத் தலைவர்தான். அவருக்கு ராமக்ருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், பரமஹம்ஸ யோகானந்தர், குருஜி கோல்வல்கர், ரிஷிகேஷ் ஷிவானந்தர், ஷிர்டி ஸாய் பாபா, புட்டபர்த்தி சாய்பாபா, ராமானுஜர், ஸ்வாமி ராம்தாஸ், ரமண மகரிஷி, ஸ்வாமி சித்பவானந்தர், ஜே க்ருஷ்ணமூர்த்தி, ஆதி ஷங்கரர், சுப்ரமண்ய பாரதி, ஸ்வாமி சுகபோதானந்தா, ஸ்வாமி ரங்கனாதானந்தர், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்,............. என்று பல பெயர்கள்.

பதிலுக்கு ஒரு கேள்வி. நான் மேலே சொன்ன அனைவரும் அல்லாவையும், ஏசுவையும், ஜெஹோவாவையும் வழிபட்டு ஒருவர் வாழ்க்கையிலும், ஆன்மீகத்திலும் முன்னேற முடியும் என்று வெளிப்படையாகக் கூறுபவர்கள். அதே போல எஸ்ரா கூறுவாரா?


>>>>இன்னும் கூட கோயில்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் மக்களுக்கு உங்கள் பதில்? <<<<

எந்த கோயிலில் மக்களை அவர்களது ஜாதிக்காக அனுமதிக்க மறுக்கிறார்கள்? எல்லாருக்கும் கோயில்களில் அனுமதியுண்டு.

ஆனால் நீங்கள் கூறுவது கோயில் கருவறை என்றால் அது ஓரளவு சரி. அங்கே பூசாரிகளுக்கு மட்டும்தான் அனுமதி. வேறு யாருக்கும் அவர் எந்த உயர் ஜாதியை சார்ந்தவராகவிருப்பினும் அனுமதி கிடையாது. இதுவும் தென்னிந்தியாவில் மட்டும்தான். இங்கு தெய்வங்கள் அணிந்திருக்கும் நகைகள் விலைமதிக்க முடியாதவை. வட இந்தியாவில் எல்லாரும் கர்ப்ப க்ருஹம்வரை சென்று தெய்வத்தை வணங்கலாம். கட்டியணைக்கவும் செய்யலாம்.

சில ஹிந்து கோயில்களில் பிற மதத்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அனுமதி இல்லை என்று போர்டுகள் தொங்குகிறது. இதற்கு காரணம் அந்த கோயிலை, தெய்வத்தை அவமானப் படுத்திவிடக் கூடாது என்ற காரணம்தான். பிற மதத்தவர்கள் அங்கனம் செய்யமாட்டேன் என்று எழுதி கொடுத்தால் அவர்களும் மற்றவர்களோடு அனுமதிக்கப்படுவார்கள். இவையெல்லாம் தற்கால சட்டங்களின் அடிப்படையில் எழுந்தது. நடைமுறையில் பிற மதத்தவர்கள் இந்த போர்டுகளை அலட்சியம் செய்துவிட்டு உள்ளே சுற்றி பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். நானே மதுரை மீனாக்ஷி அம்மனின் கோயிலில் பலமுறை பார்த்திருக்கிறேன். உதாரணத்திற்கு நான் பார்த்தவைகளில் ஒன்று. ஒரு கிருத்துவ பெண் துறவி (ஸிஸ்டர் என அழைக்கிறோமே அவர்) பள்ளியில் பயிலும் பெண்களை (சுமார் 50, 60 பேர்) அழைத்துக்கொண்டு "மற்ற மதத்தவருக்கு" தடை செய்யப்பட்ட பகுதிக்குள் புகுந்து சுற்றி வந்தார். அங்கிருக்கும் சிற்பங்களை பார்ப்பதற்காக இல்லை. அவர் அந்த உருவ பொம்மைகளையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர் முகத்தில் அந்த போர்டை ஏளனம் செய்துவிட்ட த்ருப்திதான் தெரிந்தது. அந்த குழுவில் இருந்த ஒரு பெண் "கோயிலுக்குள் சென்று அம்மனை பார்த்துவிடலாம்" என்று சொன்னதற்கு அவருடைய தோழி "வேண்டாம் ஸிஸ்டர் திட்டுவாங்க" என்று கூறி விட்டாள். ஏறத்தாழ 50, 60 பெண்கள். ஹிந்து பெண்கள் தன் மாத விலக்கு நாட்களில் கோயிலுக்கு வருவதில்லை. இந்த பெண்களில் ஏதேனும் ஒரு பெண் இந்த காரணத்திற்காக வர மறுத்திருந்தால், ஸிஸ்டர் திட்டியே கொன்றிருப்பார்கள்.

என்னுடைய நீண்ட நாள் ஆசை இது. ஒரு மஸூதியில் போய் என் தெய்வம் அல்லாவை மற்ற இஸ்லாமியர்களோடு நின்று வழிபட வேண்டும். அதற்கு என்ன செய்வது என்று விவரமறிந்தவர்களை கேட்டு சொல்வீர்களா? தயவு செய்து. ஒரு இஸ்லாமியனாக மாறுவதைத் தவிர்த்து அனைத்து இஸ்லாமிய சடங்குகளையும் செய்ய நான் தயாராகவுள்ளேன்.

>>>>ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் அவர்களுக்கு சமூகப்புரட்சியையும் பெரும் மாற்றத்தினையும் ஏற்படுத்திய ஒரு மதம் கிருஸ்தவம்!<<<

அதனால்தான் கிருத்துவ நாடார்களுக்கும், கிருத்துவ முதலியார்களுக்கும் கொடுக்கப்படும் மரியாதையை தலித் கிருத்துவர்களுக்கு சர்ச்கள் கொடுக்க மறுக்கின்றன. சில சர்ச்சுகளில் தலித் மற்றும் மீனவ கிருத்துவர்கள் பின்னால்தான் உட்கார வேண்டும். கிருத்துவம் இந்தியாவில் தோன்றி ஏறத்தாழ 400 - 500 வருடங்கள் இருக்கும். இதுவரை பிஷப்பாக ஒரு தலித் கிருத்துவர்கூட ஆனதில்லை.

நம்முடைய மதத்தையும் தெரிந்து கொள்ளாமல், மற்ற மதங்களைப்பற்றியும் தெரிந்து கொள்ளாமல் நாம் இருப்பதால்தான் பிரச்சினைகளே.