Tuesday, April 18, 2006

கற்பு எனும் கருத்துருவாக்கம்

மதிப்பிற்குரிய டோண்டு அவர்களின் பதிவுக்கு (http://dondu.blogspot.com/2006/04/100.html) பின்னூட்டமாக இது எழுதப்பட்டது.

"வ்ருத்தா நாரி பதிவ்ரதா' என்கிற வரியைப் பற்றி வலைப் பதிவாளர்கள் பலர் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

பெண்களைப் பற்றி உயர்வான கருத்துக்களை முன்வைத்த போதும் நமது இலக்கியங்கள் பல (வட, மற்றும் தேனணைய தென்மொழிகள்) பெண்களின் கற்பை சந்தேகப்படக்கூடிய ஒன்றாகவே கருதுகின்றன. இதற்குக் காரணம் அவற்றை எழுதியவர் பெரும்பாலும் ஆண்களாகவிருந்ததுதான். பெண்கள் தற்காலத்தில் எழுதுகின்ற கதை, கட்டுரைகளில் இதே பல்லவிதான் -- ஆண்கள் ஒழுங்கீனர்களாக கருத்துருவாக்கப்படுகிறார்கள்.

ஆணோ, பெண்ணோ கற்பு என்ற கருத்து பின்வரும் காரணங்களால் இருபாலருக்கும் தேவைப்படுகிறது:

1. மனவியல் ரீதியான காரணங்கள்

பொஸெஸிவ்னெஸ் என்பது இருபாலருக்கும் பொதுவானது. எனக்கு உரிமையான ஒன்றை வேறு எவரும் உபயோகிக்கக் கூடாது என்கிற கருத்து.

2. பொருளாதார காரணங்கள்

நான் சம்பாதித்த பொருட்களை என்னுடைய ரத்தம் மட்டுமே உபயோகிக்க வேண்டுமென்ற உயிரியல் உந்துதல்.

3. சமூகக் காரணங்கள்

அ. அதிகளவு பலமும், திறமையும், அழகும், புத்திசாலித்தனமுமுள்ள ஒருவனையே/ஒருத்தியையே அனைவரும் விரும்புவர். ஒருவரது மனைவி அல்லது கணவன் வேறொரு நபரை விரும்பினால் அது சம்பந்தப்பட்ட நபருடைய இழப்பு. சம்பந்தப்பட்டவரிடம் குறையுள்ளது என்கிற கருத்து.

ஆ. சமூகக் கலப்பு ஏற்படுவதால் அச்சமூகம் தனது தனித்துவத்தை இழக்கிறது என்ற கருதுகோள். தனித்துவத்தை இழப்பதே அழிவு எனக் கருதும் ஸர்வைவல் இன்ஸ்டிங்க்ட்.

மேலே சொன்ன அனைத்து விஷயங்களும் மனிதரால் உருவாக்கப்பட்ட கருதுகோள்களாதலால் அவை உண்மையல்ல ( நிலையானதில்லை). உண்மையின் பலமுமில்லை. இயற்கையின் (தெய்வத்தின்) சக்திக்கு உட்பட்டு வேறொரு ஆணையோ, பெண்ணையோ நாடுகிறார்கள்.

சமூக, பொருளாதர, மனோமய நிறுவனங்களை (கற்பிதங்களை) உறுதி செய்யும் முயற்சிகளில் தலையானது கற்பு. இம்மூன்றுமே கருத்துருவாக்கங்கள் என்பதால் மீறுபவர்களும், மீறாதவர்களும் குற்ற உணர்வாலும், இயலாமையினாலும் துன்பமடைகிறார்கள். அடுத்தவர்களையும் துன்பப்படுத்துகிறார்கள்.


இதனால் தவறில்லையென சம்பந்தப்பட்ட அனைவரும் நினைப்பார்களானால் யாருக்கும் தொல்லையில்லை. உதாரணமாக தங்கள் துணையை விருந்தினரோடு பகிர்ந்து கொள்கிற எஸ்கிமோக்கள், நம்மூரில் கண்டும் காணாதது போலவிருக்கும் கணவன் மற்றும் மனைவியர், தங்களுடைய முதல் குழந்தை ஒரு புனிதரின் குழந்தையாக இருக்க வேண்டும் எனக் கருதுகிற தம்பதியர், காமம் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு முறை எனக் கருதி ரகசிய குழுக்களாக செயல்படும் மனிதர்கள் என இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

வாய்ப்பும், மூடும் ஒரே சமயத்தில் அமையப் பெறாதவர்கள் கற்புள்ளவர்களாக இருக்கிறார்கள். பர்த்ருஹரியின் கருத்தும் அதுவாக இருக்கலாம்.

இதில் மூட் என்பது அம்மனிதர்களின் கருத்துருவாக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. எத்தனை வாய்ப்பு கிடைத்தாலும் இதில் ஈடுபடுவது தன் துணைக்கு செய்யும் த்ரோகம் என்கிற நினைப்பவர்களும் உண்டு. இவர்களுக்கு இந்த நினைப்பே அவ்வாய்ப்பின் மேல் அருவருப்பை உருவாக்குகிறது. ஆனால், இவர்களும் எப்போதும் இந்த உணர்வோடு இருப்பார்கள் என்று கூற இயலவில்லை.

உடலால் பலர் கற்புள்ளவர்கள்தான். மனதாலும் கற்போடு இருப்பவர்கள் மிக மிக சிலரே.

99 சதவீத மனிதர்கள் கற்பற்றவர்கள். மீதி இருப்பவர்களோ பொய்யர்கள்.

இவர்களுக்கு தாங்கள் சொல்வது பொய் என்பது தெரியாமலும் இருக்கலாம்.

ஏனெனில் கற்பு என்ற ஒன்றுதான் இல்லையே.

எது நடந்தாலும் ஒரு உறவில் அன்பு நிலைத்திருக்குமானால் அதுவே சந்தோஷமானது. ஆரோக்கியமானது.

புனிதாமனது என்ற ஒன்று உலகில் இல்லை. தேவைகளே எந்த ஒரு விஷயத்திலும் அதன் தரத்தை நிர்ணயிக்கிறது.

18 Comments:

At April 18, 2006 6:59 AM, Blogger dondu(#4800161) Said ...

சிறப்பானப் பதிவு ம்யூஸ் அவர்களே. நான் ஆண் பெண் கற்புநிலை பற்றிப் போட்ட மூன்று பதிவுகளின் சாரத்தை இங்கே கொடுத்திருக்கிறீர்கள்.

பெண் கர்ப்பமடைகிறாள், ஆண் அடைவதில்லை. பெண் பெறும் குழந்தைகளுக்கு தந்தை யார் என்று சந்தேகத்துக்கிடமில்லாமல் தெரிய வேண்டியது சமுதாய நிர்ப்பந்தம். ஆகவே பெண்ணுக்கு அத்தனைக் கட்டுப்பாடுகள். உடல் உறவு என்பது குழந்தை பெறுவதற்கே என்றக் கட்டுப்பாடு. ஆகவே பெண் மேல் இருந்தக் கட்டுப்பாட்டை புரிந்து கொள்ள முடிகிறது.

அறுபதுகளில் அமெரிக்காவில் கருத்தடை மாத்திரை புழக்கத்துக்கு வந்தபோது அது வரை அடக்கி வாசித்தப் பெண்கள் உடலுறவில் தீவிரமாக ஈடுபட, ஆண்கள் திக்குமுக்காடிப் போயினர் என்பது சரித்திர உண்மையே.

இன்னொறு விஷயம் சமுதாய பழக்க வழக்கங்கள் பற்றியது. மகாபாரதத்திலேயே பல பிறப்புகள் தற்கால அளப்பீட்டின்படி முறை தவறியவையேயாகும்.

மீண்டும் பாராட்டுக்கள் ம்யூஸ் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At April 18, 2006 5:35 PM, Anonymous Anonymous Said ...

மதிப்பிற்குரிய டோண்டுவா?

ம்யூஸ் அவர்களே, நீங்களும் பாப்பானா? இல்லை பாப்பார அடிவருடியா?

பெண்பிள்ளைகளை சர்வ சுதந்திரமாக எல்லோருடனும் எப்போதும் உடலுறவு கொள்ள அனுமதிக்க வேண்டும் என எழுதியது அந்த கிழ மிருகம்.

 
At April 18, 2006 9:48 PM, Blogger Muse (# 5279076) Said ...

என்னால் மதிக்கமுடியாத கருத்துக்களைக் கூறியுள்ள மதிப்பிற்குரிய அனானிமஸ் அவர்களே,

உங்களது கேள்விகளுக்கு என் பதில்கள்,

>>>ம்யூஸ் அவர்களே, நீங்களும் பாப்பானா?>>>

ஹிந்து மத கருத்துக்களின் அடிப்படையில் நான் ஒரு வைசியன். நிச்சயமாக பார்ப்பனன் இல்லை.


>>>>இல்லை பாப்பார அடிவருடியா?
>>>>

எந்த ஒரு குறிப்பிட்ட குழுவுக்கும் அடிவருடியாகவிருக்க நான் விரும்பவில்லை. ஆனால், உயர்வான கருத்துக்களை நடைமுறையில் கடைபிடிப்பவர் எவராயினும் அவரது பாதம் பணிவது எனக்கு பெருமையே. தங்களது கருத்துக்களுக்கு மாறுபட்ட கருத்துள்ளவர்களை கீழ்த்தரமானவர்கள் என்று கருதுபவர்களிடமிருந்து ஒதுங்கி இருக்கவே விரும்புகிறேன்.


>>>> பெண்பிள்ளைகளை சர்வ சுதந்திரமாக எல்லோருடனும் எப்போதும் உடலுறவு கொள்ள அனுமதிக்க வேண்டும் என எழுதியது>>>>

நான் மதிப்பிற்குரிய திரு டோண்டுவினுடைய அனைத்து பதிவுகளையும் படித்து வருகிறேன். ஆனால் இதுவரை தாங்கள் மேலே கூறியுள்ள கருத்தை அவர் சொல்லவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.


>>>>பெண்பிள்ளைகளை சர்வ சுதந்திரமாக எல்லோருடனும் எப்போதும் உடலுறவு கொள்ள அனுமதிக்க வேண்டும் என எழுதியது >>>>

நான் மதிப்பிற்குரிய திரு டோண்டுவினுடைய அனைத்து பதிவுகளையும் படித்து வருகிறேன். ஆனால் இதுவரை தாங்கள் மேலே கூறியுள்ள கருத்தை அவர் சொல்லவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.


>>>> எழுதியது அந்த கிழ மிருகம் >>>>>

இதை நான் ஒத்துக் கொள்கிறேன். அவர் ஒரு கிழ மிருகம்தான் - தர்கத்திற்கும், அனுபவத்திற்கும் உட்பட்டு விஷயங்களை ஆராயும் ஒரு கிழ சிங்கம். இள வயதிலேயே குழப்பத்துடன் அடுத்தவர்களை துன்பப் படுத்தாமலிருப்பதே பெரும்பாடாகவிருக்கிறது. அவர் வயதில் இவ்வளவு தெளிவாகவும், திறன் மிக்க செயல்பாடு உடையவனாகவுமிருப்பதே போதுமானது என்பது என் ஆசை.

என்னுடைய ப்ளாக் எல்லாவித கருத்துக்களையும் அனுமதிக்கும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பது என் அவா. அதனாலேயே அனானிமஸ் பின்னூட்டங்களையும் அனுமதித்துள்ளேன். எதையும் சென்சார் செய்ய விருப்பமில்லை. படிப்பவர்களுக்கு புத்தியுள்ளது.

ஆயினும் மனிதர்களை பற்றி இகழ்ந்து பேசாமல் "கருத்துக்களை" பாராட்டவோ, இகழவோ செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள். தங்களிடமிருக்கும் மேன்மையான குணங்களின் பாதங்களை வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன் - நாம் கருத்துக்களைப் பற்றி மட்டும் பேசுவோமே. தயவு செய்யுங்கள்.

 
At April 19, 2006 1:17 AM, Blogger ஜயராமன் Said ...

ம்யூஸ் அவர்களுக்கு,

தங்கள் பதிப்பு ஒரே குழப்பமாய் இருக்கிறது, எனக்கு. ஒருவேளை புரியாமல் எழுதினால்தான் புலமையோ?

கற்பு நிலையை தாங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா இல்லையா என்று விளங்கவில்லை.

தங்கள் பதிவைப் பாருங்கள்:

1. ஆணோ, பெண்ணோ கற்பு என்ற கருத்து பின்வரும் காரணங்களால் இருபாலருக்கும் தேவைப்படுகிறது:

(நான்: அதாவது, கற்பு இங்கே உருவாக்கப்பட்டது என்று சொல்கிறீர்கள். அதாவது, கற்பு என்ற கான்செப்ட் இருக்கிறது)

2. உடலால் பலர் கற்புள்ளவர்கள்தான். மனதாலும் கற்போடு இருப்பவர்கள் மிக மிக சிலரே.

99 சதவீத மனிதர்கள் கற்பற்றவர்கள். மீதி இருப்பவர்களோ பொய்யர்கள்.

(நான்: அதாவது, கற்பு இருக்கிறது. அவைகளை வகையும் படுத்தி இருக்கிறீர்கள். ...)

3. ஏனெனில் கற்பு என்ற ஒன்றுதான் இல்லையே.

(நான்: போச்சுடா! போட்டு குழப்பிட்டீங்க!!)

மேலும் இந்த பதிவை நோண்டாமல் விட்டு விடுவதே நல்லது. எங்கள் எகானமி ப்ரபொஸரின் வியாசம் மாதிரி இருக்கிறது.

நன்றி

 
At April 19, 2006 3:52 AM, Blogger Muse (# 5279076) Said ...

ஸ்ரீமான் ஜெயராமன் அவர்களே,

உங்கள் பின்னூட்டத்தை நான் ரசித்தேன். இதை மேலும் நோண்ட வேண்டாம் என்று நீங்கள் சொல்லியிருப்பதால் இது பற்றி என் விளக்கத்தை கூறலாமா வேண்டாமா என்று தெரியவில்லை. ஒருவேளை இதைப் பற்றி " நீங்கள்" எதுவும் கூறப்போவதில்லை என்று கூறுகிறீர்களோ என்றும் தோன்றுகிறது.

இரண்டாவது கருத்து எனக்கு சாதகமாக இருப்பதால் அதையே எடுத்துக் கொண்டு மேலும் நோண்டுகிறேன். :-)

இதை விளக்குவதற்கு முன்னால் கற்பு பற்றிய ஒரு வரையறை செய்துகொள்வோம். கற்பு என்றால் என்ன?

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தன் துணையைத் தவிர வேறு ஒருவருடன் மனதாலோ, அல்லது உடலாலோ காமம் அனுபவிக்கக் கூடது என்பதே கற்பு. (தவறானால் தயவு செய்து திருத்துங்கள்)

நான் முன்னரே கூறியது போல கற்பு என்பது ஒரு கான்ஸெப்ட் மட்டுமே. தன்னைத் தான் உறுதி செய்யும் ஒரு விஷயமாக அது உள்ளது. அதன் இருப்பிற்கு சாக்ஷி சொல்ல வேறு ஒரு பொருளும் இல்லை.

உதாரணத்திற்கு இதைப் போலவே அரூபமான "தாய் பாசம்" என்பதை எடுத்துக்கொள்வோமே. ஒரு தாயானவள் தன் குழந்தையின் மீது உயிரையே வைத்திருக்கிறாள். அக்குழந்தை அதே போல பாசத்துடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும். அதே தாய்க்கு மேலும் பல குழந்தைகள் பிறக்கின்றது என வைத்துக் கொள்வோம். அப்போது அவளது பாசம் ஒரே ஒரு குழந்தையின் மீது மட்டும் இருப்பதில்லை. உண்மையில் அவளது பாசமானது விரிந்து கொண்டே போகிறது. எல்லாக் குழந்தைகள் மேலும் அவளால் பாசம் கொள்ளவும், அன்பு செலுத்தவும் முடிகிறது. குழந்தைகள் கூடக் கூட அவளது அன்பும் கூடுகிறது. உதாரணத்திற்கு தான் பெறாவிட்டாலும் ராமனின் மேல் தாயன்பு செலுத்திய கைகேயி. இவ்வன்பானது ஒரு குழந்தையின் மேல் கூட குறைய இருக்கலாம்; ஆனால் முற்றிலும் இல்லை எனக் கூறவே முடியாது.

இப்போது ஒரு மனைவியோ அல்லது கணவனோ ஒருவர் மேல் மட்டும்தான் அன்பையும் காமத்தையும் செலுத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த அளவு சரியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. பலதார திருமணங்கள் அனுமதிக்கப்பட்ட சில குழுக்களில் ஒரு கணவனுக்கு தன்னுடைய அனைத்து மனைவியர் மேலும் அன்பையும், பாசத்தையும் செலுத்த முடிகிறதே. விஷ்ணுவால் பூதேவி, ஸ்ரீதேவி, நீளாதேவி ஆகிய அனைவர் மேலும் அன்பு செலுத்த முடிகிறதே ! இதனிடையில் மீராக்களின் தொல்லை வேறு ! கிருஷ்ண ரூபத்தில் அதையும் சமாளிக்க வேண்டும்.

இதற்கிடையில் ஒரு தனிச் சொருகல். பலதாரம் அனுமதிக்கப்பட்ட (ஆண்களுக்கு மட்டும்தான்) சில சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒருதார மணத்தின் ஆதிக்கம் பற்றி கூறுவது இது. ஒருதார மணத்தின் ஆதிக்கத்தால் பலதார மணத்தால் விளையும் சில மென்மையான உணர்வுகளுக்கு எந்த மொழியிலும் டெர்மினாலஜி இல்லாமல் போய்விடுகிறதாம். உதாரணத்திற்கு பல பெண்களை மணம் செய்து கொண்ட ஒரு ஆண் மகன் தன் மனைவியர் ஒருவர் மேல் ஒருவர் அன்போடு இருப்பதைக் காணும்போது ஒரு வித சந்தோஷம் அடைகிறான். இந்த சந்தோஷத்தின் பெயர் என்ன? ஒருதார மணத்தின் ஆதிக்கம் இது போன்ற உணர்வுகளுக்கு ஒரு மொழியில் பெயர்கூட வைக்க விடாமல் செய்துவிட்டது என்று குறை கூறுகிறார்கள். நியாயம்தான். :-)

விஷ்ணுவோ, தசரதனோ, க்ருஷ்ணனோ, முஹம்மதுவோ செய்ததை ஒரு பெண் செய்யக் கூடாது என்று எதிர்பார்ப்பது தவறுதான். ஆனால் ரஷ்ய அரசியான காதரைன் தி க்ரேட்டை அவள் காதல் லீலைகளுக்காக சமூகம் இகழத்தானே செய்கிறது.

தெரியும். நீங்கள் மேலே சொன்ன இரண்டையும் தவறு என்கிறீர்கள் என்பது. ஆனால் நான் கேட்பது எல்லாம் ஒரு தாயால் பல குழந்தைகளின் மேல் பாசத்தோடு இருக்க முடியும்போது, கருத்தடை சுதந்திரம் உள்ள ஒரு பெண் பல ஆண்களோடு தொடர்பு கொள்ளக் கூடாது என்று கூறுவது ஏன்? இங்குதான் சமுதாய மற்றும் மனோரீதியான காரணங்கள் வருகின்றன.

ஏன் மஹாபாரதத்திலேயே இந்த சமுதாய மாற்றம் பற்றி வருகிறதே. தன் கணவனைத் தவிர்த்து பிற தேவதைகளின் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள குந்தி மறுக்கிறாள். அவளிடம் பாண்டு "ஒரு பெண் பல கணவர்களையும், காதலர்களையும் கொள்வது பண்டைக் காலத்தில் இருந்ததுதான். அதனால் எழுந்த சமுதாய குழப்பங்களைத் தவிர்க்கவே பிற்காலத்தில் அது தவறெனக் கூறப்பட்டு தண்டிக்கப்படுகிறது" என்கிறார்.

ஒரு பாஞ்சாலியால் தன் அனைத்து கணவர்கள் மேலும் அன்பும், காமமும் கொள்ள முடிந்தது.

இதையெல்லம் ஏன் கூறுகிறேன் என்றால் ஒருவர் மற்ற ஒரே ஒரு மனிதர் மேல் மட்டுமே காமம் கொள்ள முடியும் என்கிற நிதரிசனம் இல்லை என்கிற உண்மையை விளக்கவே. தாய் பாசம் போல கற்பு உண்மையான ஒன்றல்ல. அது மனத்தின் ஒரு உருவாக்கம் மட்டுமே. ஒரு மன உருவாக்கத்தைப் பெரியதாக ஆக்கலாம். ஒரு பொய்யான கற்பனைக் கதைக்கு பல பாகங்கள், பல பிரிவுகள் கொண்டு வரலாம். உதாரணத்திற்கு சிந்துபாத் கதை. எத்தனை சிந்துபாத் கதைகள், அராபிய சிந்துபாத், தினத்தந்தி சிந்துபாத், அமெரிக்க கார்ட்டூன் சேனல் சிந்துபாத்.....

இதில் எது நிஜம். எதுவமல்ல. இல்லாத ஒன்றிற்கு எத்தனை பிரிவுகள்?

இன்னும் தெளிவாக கூறப் போனால் கற்பு இந்திய கம்யூனிஸ்டுகள் கூறும் மதச்சார்பின்மை மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம்.

அதே சமயத்தில் தன் துணையை தவிர வேறு ஒரு துணையை நாடாமலிருப்பதும் இயற்கையில் சாத்தியம்தான். அதுபோல் இருப்பவர்களுக்கும் அவ்வாறு இருக்க சுதந்திரம் வேண்டும்.

இதே சுதந்திரம் துணையே வேண்டாம் என்று கூறுகிற மனிதர்களுக்கும் தரப்பட வேண்டும்.

 
At April 19, 2006 5:47 AM, Blogger Muse (# 5279076) Said ...

ராமாயணத்தில் எனக்கு எழும் ஒரு சந்தேகம். ஸ்ரீமான் ஜெயராமன் அவர்களே, நீங்கள் இதற்குப் பதில் சொல்லலாமே.

ராவணனுக்கு அவனை விரும்பாத ஒரு பெண்ணைத் தொட்டால் தலை சுக்கு நூறாகிவிடுமென்ற ஒரு சாபம் இருந்தது. அதனாலேயே அவன் சீதையை அசோக வனத்தில் வைத்து நைச்சியம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தான். தொட முடியவில்லை.

எம்பெருமான் அவனை அழித்ததற்குக் காரணம் அவன் ஒரு ஸ்த்ரீ லோலன் என்பதே. ஆனால், பெருமானின் தந்தைக்கோ ராவணன் பெற்ற சாபத்திற்கு நேரெதிரான சாபமிருந்ததாகக் கேள்வி. (சரியா என்று தெரியவில்லை.) அதாவது தசரதன் அடிக்கடி திருமணம் செய்ய வேண்டும் என்பதே அச்சாபம் (சாபமா, அல்லது வரமா? :-) ). ராமனின் தந்தையும் பல பெண்களை மணம் செய்து கொண்டவர்தான். இருவரும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தினாலும், தசரதனை வணங்கும் ராமன் ராவணனை அழிக்கிறான். இதுதான் எனக்குப் புரியவில்லை. விளக்கம் தேவை.

தன் தந்தையின் நடத்தையே தனயனை ஒரே ஒரு பெண்ணின் மேல் மட்டும் காதல் பக்தி கொள்ளத் தூண்டியதோ என்றும் தோன்றுகிறது.

 
At April 19, 2006 10:58 AM, Blogger ஜயராமன் Said ...

ம்யூஸ் அவர்களுக்கு,

தங்கள் கேள்வி விசித்திரமாய் இருக்கிறது. என்ன அடிப்படையில் கேட்கீறீர்கள் என்பது விளங்கவில்லை. கேலிக்காகவா, இல்லை நிஜமாகவே இது உங்கள் சந்தேகமா.

தசரதன் வருடத்துக்கு ஒரு தடவை மணம் புரிந்தது அவனுடைய சாய்ஸ். அது ஒரு சாபத்திலிருந்து தன்னை காக்க அவன் எடுத்த உத்தி. அவன் யாருடைய மனைவியையும் கடத்தவில்லை. யாரையும் வலுக்கட்டாயமாக கெடுக்கவில்லை. மிரட்டி அடிபணியவைக்கவில்லை. அடிமைப்படுத்தி சேவகம் புரிய வைக்கவில்லை. இந்த நான்கையும் ராவணன் செய்தான்.

பல மனைவிகளை ஏற்பது நம் கலாசாரத்துக்கு உட்பட்ட ஒரு செயல். இதில் வெட்கப்பட வேண்டியது ஒன்றும் இல்லை. (தங்களைப் போன்ற புரட்சியாளர்கள் தவிர்த்து). எத்தனையோ குடும்பங்களில் அக்காவே வற்புறுத்தி தன் தங்கையை மாமாவுக்கு மணம் செய்து வைத்ததை நான் அறிவேன். குழந்தைக்காக.

ஏன், தமிழர் காவலர்களாக தங்களை கூறிக்கொள்ளும் மூத்த தலைவர்களும் இரண்டு மனைவி வைத்துக்கொண்டு பெருமையாக சிலப்பதிகாரம் பற்றி பேசுகிறார்களே! (இரண்டாவது கல்யாணம் சட்ட விரோதம். இவர்கள் சட்டத்தை மீறியவர்கள்தான். ஆனால், முதல் மனைவியின் புகார் இல்லாமல் கைது செய்ய முடியாது என்ற அற்ப விஷயத்திற்காக இவர்கள் தோளில் துண்டு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.)

தசரதன் பெண்மையை மதித்தவன். தன் மனைவி மார்களை கலந்து ஆலோசிக்காமல் அவன் எந்த முடிவும் எடுக்க மாட்டான். மனைவி கைகேயியுடன் போருக்கு செல்லும் அளவுக்கு அவன் மனைவி மார்களுக்கு சம உரிமை வழங்கியிருந்தான்.

அவன் எங்கே! ராவணன் எங்கே. ராவணன் பார்க்கும் பெண்களை உடனே பெண்டாள நினைப்பவன். தன் அண்ணன் குபேரன் மனைவியையே கற்பழிக்க முயற்சி செய்து சாபம் வாங்கியவன். தேவ லோகத்து பெண்களை தகாது நடந்து சாபம் வாங்கினவன்.

தன் சுய லாபத்திற்காக நாட்டையே பணயம் வைத்தான். மனைவி, தம்பிகள் சொல்லியும் கேட்காமல் தேவிக்காக இலங்கையே அழித்தான். ஆனால், தசரதன் தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற அநியாய கைகேயின் கோரிக்கையும் ஏற்றுக்கொண்டவன்.

இவர்களை ஒரே தராசில் நீங்கள் காட்டுவது என்ன வருத்தமான விஷயம்!

தசரதன் நடவடிக்கைகளில் வருந்தி ராமன் ஏகபத்தினி விரதம் ஏற்றான் என்பது மிகவும் அடாதது. ராமாயணத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் ராமன் தசரதன் புகழ் பேசுகிறான். ராமனை நீ யார் என்று யாராவது கேட்டால் போதும், தசரதாட்மஜம் என்று தசரதனின் பையன் என்றுதான் சொல்லிக்கொள்வான்.

காட்டில் பரதனை பார்த்த வுடன் ராமன் கேட்கும் முதல் கேள்வியே நன் பெருமைக்குரிய அப்பா எப்படி என்றுதான். தேவியை காட்டுக்கு வராதே என்று ராமன் கெஞ்சும்போதும் என் அப்பாவுக்கு நீ சேவை செய் என்றுதான் கேட்கிறான். ஜடாயுவை கட்டிக்கொண்டு அழும் காரணமே அவர் தசரதனின் நண்பன் என்றுதான். என் அப்பாவையே தங்களிடம் பார்க்கிறேன் என்கிறான். இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.

தங்கள் பதிப்புகளில் வீச்சு இருக்கும் அளவிற்கு ஆழமும், உண்மையும் குறைந்து இருப்பது வருத்தமளிக்கிறது.

நன்றிபி.கு: தசரதனின் சாபம்: ச்ரவணின் மரணத்தால் அவன் சாக வேண்டும் என்பது. ஆனால், exception ஆக, சாஸ்திரப்படி கல்யாணம் ஆகி ஒரு வருடம் விரதம் முடியாத்தால் விலக்கு. அதனால், வருடா வருடம் புது மணம் செய்து புது மாப்பிள்ளை exemption வாங்கிக் கொண்டார் இவர்.

 
At April 19, 2006 11:04 AM, Blogger ஜயராமன் Said ...

ம்யூஸ் அவர்களுக்கு,

தங்கள் கேள்வி விசித்திரமாய் இருக்கிறது. என்ன அடிப்படையில் கேட்கீறீர்கள் என்பது விளங்கவில்லை. கேலிக்காகவா, இல்லை நிஜமாகவே இது உங்கள் சந்தேகமா.

தசரதன் வருடத்துக்கு ஒரு தடவை மணம் புரிந்தது அவனுடைய சாய்ஸ். அது ஒரு சாபத்திலிருந்து தன்னை காக்க அவன் எடுத்த உத்தி. அவன் யாருடைய மனைவியையும் கடத்தவில்லை. யாரையும் வலுக்கட்டாயமாக கெடுக்கவில்லை. மிரட்டி அடிபணியவைக்கவில்லை. அடிமைப்படுத்தி சேவகம் புரிய வைக்கவில்லை. இந்த நான்கையும் ராவணன் செய்தான்.

பல மனைவிகளை ஏற்பது நம் கலாசாரத்துக்கு உட்பட்ட ஒரு செயல். இதில் வெட்கப்பட வேண்டியது ஒன்றும் இல்லை. (தங்களைப் போன்ற புரட்சியாளர்கள் தவிர்த்து). எத்தனையோ குடும்பங்களில் அக்காவே வற்புறுத்தி தன் தங்கையை மாமாவுக்கு மணம் செய்து வைத்ததை நான் அறிவேன். குழந்தைக்காக.

ஏன், தமிழர் காவலர்களாக தங்களை கூறிக்கொள்ளும் மூத்த தலைவர்களும் இரண்டு மனைவி வைத்துக்கொண்டு பெருமையாக சிலப்பதிகாரம் பற்றி பேசுகிறார்களே! (இரண்டாவது கல்யாணம் சட்ட விரோதம். இவர்கள் சட்டத்தை மீறியவர்கள்தான். ஆனால், முதல் மனைவியின் புகார் இல்லாமல் கைது செய்ய முடியாது என்ற அற்ப விஷயத்திற்காக இவர்கள் தோளில் துண்டு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.)

தசரதன் பெண்மையை மதித்தவன். தன் மனைவி மார்களை கலந்து ஆலோசிக்காமல் அவன் எந்த முடிவும் எடுக்க மாட்டான். மனைவி கைகேயியுடன் போருக்கு செல்லும் அளவுக்கு அவன் மனைவி மார்களுக்கு சம உரிமை வழங்கியிருந்தான்.

அவன் எங்கே! ராவணன் எங்கே. ராவணன் பார்க்கும் பெண்களை உடனே பெண்டாள நினைப்பவன். தன் அண்ணன் குபேரன் மனைவியையே கற்பழிக்க முயற்சி செய்து சாபம் வாங்கியவன். தேவ லோகத்து பெண்களை தகாது நடந்து சாபம் வாங்கினவன்.

தன் சுய லாபத்திற்காக நாட்டையே பணயம் வைத்தான். மனைவி, தம்பிகள் சொல்லியும் கேட்காமல் தேவிக்காக இலங்கையே அழித்தான். ஆனால், தசரதன் தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற அநியாய கைகேயின் கோரிக்கையும் ஏற்றுக்கொண்டவன்.

இவர்களை ஒரே தராசில் நீங்கள் காட்டுவது என்ன வருத்தமான விஷயம்!

தசரதன் நடவடிக்கைகளில் வருந்தி ராமன் ஏகபத்தினி விரதம் ஏற்றான் என்பது மிகவும் அடாதது. ராமாயணத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் ராமன் தசரதன் புகழ் பேசுகிறான். ராமனை நீ யார் என்று யாராவது கேட்டால் போதும், தசரதாட்மஜம் என்று தசரதனின் பையன் என்றுதான் சொல்லிக்கொள்வான்.

காட்டில் பரதனை பார்த்த வுடன் ராமன் கேட்கும் முதல் கேள்வியே நன் பெருமைக்குரிய அப்பா எப்படி என்றுதான். தேவியை காட்டுக்கு வராதே என்று ராமன் கெஞ்சும்போதும் என் அப்பாவுக்கு நீ சேவை செய் என்றுதான் கேட்கிறான். ஜடாயுவை கட்டிக்கொண்டு அழும் காரணமே அவர் தசரதனின் நண்பன் என்றுதான். என் அப்பாவையே தங்களிடம் பார்க்கிறேன் என்கிறான். இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.

தங்கள் பதிப்புகளில் வீச்சு இருக்கும் அளவிற்கு ஆழமும், உண்மையும் குறைந்து இருப்பது வருத்தமளிக்கிறது.

நன்றிபி.கு: தசரதனின் சாபம்: ச்ரவணின் மரணத்தால் அவன் சாக வேண்டும் என்பது. ஆனால், exception ஆக, சாஸ்திரப்படி கல்யாணம் ஆகி ஒரு வருடம் விரதம் முடியாத்தால் விலக்கு. அதனால், வருடா வருடம் புது மணம் செய்து புது மாப்பிள்ளை exemption வாங்கிக் கொண்டார் இவர்.

 
At April 19, 2006 10:52 PM, Blogger Muse (# 5279076) Said ...

ஸ்ரீமான் ஜெயராமன் அவர்களே,

தங்கள் பதில் தெளிவைத் தந்தது. தசரதன் மற்றும் ராவணனுக்கு இடையேயான வித்தியாசம் தெரிய வந்தது. காதலுக்கும் காமத்துக்குமுள்ள வித்தியாசத்தை விளக்கியுள்ளீர்கள். மிக்க வந்தனம்.

மஹாபாரதத்தை ஆசை தீர (ராஜாஜியின் மூலமாக) படித்த எனக்கு ராமாயாணம் வெறும் செவி வழிக் கதையாக மட்டுமே தெரியும்.

இருவருக்கும் வித்தியாசம் ஏதும் உள்ளதா என்று அறிந்து கொள்ளும் அவாவுடனேயே கேள்வியினைக் கேட்டேன். இருவருக்கும் வித்தியாசம் ஏதுமில்லை என்று அறுதியாக நான் கூறவில்லை. நான் அங்கனம் கூறியதாகச் சொல்லியுள்ளீர்கள். நான் இது என் சந்தேகமே என்பதை இன்னும் சற்று தெளிவாக எழுதியிருக்கலாம். என் எழுத்தின் குறை.

என்னை புரட்சிக்காரனாக வர்ணித்துள்ளீர்கள். எனக்கு தேவைகளின் மேல் இருக்குமளவுக்கு புரட்சிகளின் மேல் நம்பிக்கையில்லை. தமிழ் நாட்டில் ஏற்கனவே ஒரு புரட்சித் தலைவரும், தலைவியும் உண்டு. அப்படியானால் நான் யார் - புரட்சி புடலைங்காயோ? எனக்கு சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. தங்களை புரட்சிக்காரர்களாக நம்பும் மனிதர்கள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்.


ராமன் போன்ற தெளிவான யுக புருஷர்கள் பூமியில் மிகவும் அரிது. அவன் எனக்கும் தெய்வந்தான்.

கிருபானந்த வாரியாரிடம் ஒருவர் ஏறத்தாழ இதே கேள்வியினைக் கேட்டதாகப் பல வருடங்கள் முன்பு படித்தேன். "தசரதன் மட்டும் அத்தனை மனைவியர் கொண்டிருக்கும் போது நான் மட்டும் ஒரே பெண்ணுடன் வாழ வேண்டும் என்கிறீர்களே" என்று அந்த மனிதர் கேட்டாராம். அதற்கு வாரியார் "தசரதனால் அனைத்து மனைவியரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடிந்தது. உன்னாலும் அது முடியும் என்றால் நீயும் திருமணம் செய்து கொள்ளலாம்" என்றாராம். நானும் தசரதன் எல்லா மனைவியரையும் ஸந்தோஷமாக வைத்துக் கொண்டான் என்பதை ஒரு நம்பிக்கையாக ஏற்றுக் கொள்கிறேன்.

இருந்தாலும் என்னுடையது கேவலம் மனித மனந்தானே. சந்தேகங்கள் வரத்தான் செய்கின்றன. என்னால் ராமன் போல் எல்லா விஷயங்களிலும் தெளிவுடனும், தர்ம சீலனாகவும் இருக்க முடியவில்லை. முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. என்னைச் சுற்றி இருப்பவர்களிடமோ, நான் அறிந்த மனிதர்களிலோ ராமன் போன்றவர்கள் இல்லை. இருக்கவும் முடியாது என்று தோன்றுகிறது. அப்படியே இருந்தாலும் அது ஒரு எக்ஸெப்ஷனல் கேஸ், முழுக்க முழுக்க தெய்வீகமானது. அனைவருக்கும் பொருத்த முடியாது. ஆனால் தசரதன் போன்ற மேன்மையான குணங்கள் கொண்ட மனிதர்கள் உள்ளார்கள். என் அனுபவம் இதை உறுதி செய்கிறது.

ஒரு கேள்வியினை என் மனம் என்னிடம் கேட்கிறது. தசரதன் எனும் ஒரு கணவனால் ஆயிரக் கணக்கான மனைவியரை சந்தோஷமாகவும், காதலுடனும் வைத்துக் கொள்ள முடியும்போது ஒரு மனைவியால் பல கணவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியாதா?

அப்படிச் செய்தால் கற்பு நிலை தவறுகிறாள் என அனைத்து மத நூல்களும், சமூக ஒழுக்கங்களும் கூறுகின்றனவே.

தங்களுடைய பதிலைப் படித்து இந்தக் குழப்பத்திலிருந்தும் விடுபட ஆசைப் படுகிறேன். தயவு செய்யுங்கள்.

 
At April 20, 2006 6:36 AM, Blogger ஜயராமன் Said ...

ம்யூஸ் அவர்களுக்கு,

தங்கள் மேலான பதிலுக்கு நன்றி. மிக்க மன நிறைவை கொடுத்துள்ளீர்கள்.

தங்கள் கருத்துக்கள் மிகவும் புரட்சிகரமானவைதான். எனக்கு.

என் பதிலுரை:

1. இராமாயணத்தை கேள்வி ஞானம் தான் என்கிறீர்கள். கம்ப ராமாயணத்தை ஒரு தடவையாவது வாழ்க்கையில் படிக்குமாறு கெஞ்சுகிறேன். பக்தி இலக்கியமாக இல்லாவிட்டாலும், கம்பனின் அரசாளும் தமிழுக்காகவும், அந்த பாத்திரங்களை அவன் கையாண்டுள்ள அனுபவத்திற்காகவுமாவது.

2. தசரதன் தன் மனைவி மார்களை காதலித்து சந்தோஷப்படுத்தினான் என்று நீங்கள் எந்த அர்த்தத்தில் சொன்னீர்கள். நம் கலாசாரத்தில் கணவன் மனைவி இல்லறத்தில் கடமை மேலோங்கியிருக்கும், காதல் இருந்தாலும் தெரியாது. தசரதன் மனைவி மார்கள் தசரதனின் ஆளுமையில் மயங்கி தன்னை சரண் கொடுத்த சாதாரண இந்திய பெண்கள். அவர்கள் சந்தோஷம் தசரதனின் சந்தோஷத்தில்தான். இதில் மாடர்ன் காதல் வரவில்லை.

அச்சமுதாயம் முழுக்க முழுக்க சொசைட்டியை ஒத்து வாழ்வதே இலட்சியமாக கொண்ட சமுதாயம். அதுவே பெருமை அதுவே புகழ் என்று இருந்த நிலை. அதை மனதில் கொள்ளுங்கள்.

3. ராமன் மாதிரி வாழ்வது இயலாது என்று நீங்கள் சொல்வது ராமனை வருத்தம் அடைய செய்யும். மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று காண்பிக்கவே ராமன் அவதரித்தான் என்கின்றன புராணங்கள்.

ராமன் மாதிரி வாழ்வதில் குழப்பமே இல்லை. தனக்கு என்று இஹ வாழ்க்கையில் வேண்டுவது எல்லாம் தன் தன்மானமும் கசடற்ற புகழும் என்ற ஒரே குறிக்கோள்தான் அவன் எல்லா நடவடிக்கைகளிலும் தெரிகிறது. எதைச்செய்தால் சமுதாயத்தில் மாண்போ அதை செய்வதுதான் அவன் வாடிக்கை. அதை புரிந்து கொள்வது எளிதுதான். குழப்பமில்லை. அவனைப்போல வாழ்வது வேண்டுமானால் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், அவன் வழி எல்லோருக்கும் புரிந்த குழப்பமில்லாத வழி.

4. பெண்களும் பல கணவருடன் 'சந்தோஷமாக' இருக்க முடியுமா என்கிறீர்கள். சந்தோஷம் என்று எதை நீங்கள் சொல்கிறீர்கள். கலவி சுகமா. மாடர்ன் லைப் காதலா. இவை இரண்டும் என்றால் நிச்சயம் முடியும். சந்தேகம் இல்லை.

ஆனால், பல கணவன் படைத்த பெண் வாழ்க்கையை இழக்கிறாள். அவள் தன்னை ஒருவனுக்கு கொடுக்கும்போது எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறாள். ஆண் மாதிரி பேரம் பேசுவதில்லை. தாய் மகன் உறவு ரத்த சம்பந்தத்தால் ஏற்படுவதால் அதில் பல மகன்களை தாய் தனதாக்கி கொள்ள முடிகிறது. எல்லாம் தன் உயிராகவே பார்க்கிறாள். ஆனால், ஆண் பெண்ணே ஏற்கும் போது தன் எதிர்பார்ப்புக்கு உட்பட்டு ஏற்கிறான். அதனால், ஆணால் பல பெண்களிடம் கலவி இன்பம் விகல்பம் இல்லாமல் பெற முடிகிறது. அதே அவன் மனதார ஒரு பெண்ணை - அந்த பெண்ணின் உள்ளே உள்ள ஆத்மாவை - காதலிப்பான் ஆனால், அவனாலும் வேறொருத்தியை ஏறெடுத்தும் பார்க்க தோணாது. எங்கு தன்னலமில்லா காதல் மலர்கிறதோ அங்கு அவர்கள் தங்களை இழக்கிறார்கள். வேறோரு கூட்டணிக்கு அங்கே வழியில்லை.

நன்றி

 
At April 20, 2006 7:14 PM, Blogger dondu(#4800161) Said ...

ராமகிருஷ்ண சாஸ்திரிகள் வடமொழி ஆசிரியர் தி.நகரில் ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் (மெயின் பிராஞ்ச்). அவன் காலட்சேபங்களும் செய்வார். சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் அவர்களின் சிஷ்யர்.

பீடிகை போதும், விஷயத்துக்கு வருகிறேன். ராமகிருஷ்ண சாஸ்திரிகள் கூறியது: தசரதன் அவ்வளவு திருமணங்கள் செய்து கொண்டது பரசுராமருக்கு பயந்தே. அவர் ஷத்திரியர்களை அழிக்கும் விரதம் பூண்டவர். ஆனால் அவர் ஒரு அரசன் மேல் போர் தொடுத்துச் செல்லும்போது சம்பந்தப்பட்ட அரசனது திருமணம் நடக்குமானால் ஒன்றும் செய்யாமல் போய் விடுவார். ஆகவே ஒவ்வொரு முறையும் அவர் வரும் சமயம் தசரதர் ஒரு திருமணம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று.

ம்யூஸ் அவர்களே, இன்னொரு விஷயம். ராமர் அந்த காலத்தில் ஒரு விதிவிலக்கே. அரசர்கள் பல திருமணங்கள் செய்து கொள்வது சர்வ சாதாரணம். நாமே புரிந்து கொள்ளும்போது ராமரும் புரிந்து கொள்ள மாட்டாரா. மேலும் தசரதன் யார் மனைவியையும் அபகரித்து வரவில்லை. ராவணன் அவ்வாறு செய்தான். அவ்வளவுதான் விஷயம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At April 20, 2006 9:23 PM, Blogger Muse (# 5279076) Said ...

ஸ்ரீமான் ஜெயராமன் அவர்களே,

மிக்க நன்றி. தெளிவாக பதிலளித்துள்ளீர்கள்.

நீங்கள் கூறுவது அனைத்தும் எனக்குப் புரிகிறது, ஏற்றுக் கொள்கிறேன் - கடைசி பாராவை தவிர்த்து.

>>> அவள் தன்னை ஒருவனுக்கு கொடுக்கும்போது எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறாள். ஆண் மாதிரி பேரம் பேசுவதில்லை.<<<<

நம்ப முடியவில்லை. ஒரு வேளை நீங்கள் அந்தக் காலத்திலிருந்ததாகக் கருதப்படும் அபூர்வமான பத்தினிகள் என்ற ஸ்பீஸிஸ் பற்றிக் கூறுகிறீர்கள் என நினைக்கிறேன். தற்காலத்தைச் (கலிகாலத்தை) சேர்ந்த என்னைச் சுற்றியிருக்கும் ஆண்கள், பெண்கள் அனைவரும் பேரம் பேசுகிறார்கள் (யு. எஸ். க்ரீன் கார்ட்; கை, பாக்கெட், பீரோ, வீடு, கக்கூஸ் நிறைய பணம்). "மாப்பிள்ளை மாருதி மாதிரியிருந்தாலென்ன. மாருதி எஸ்டீம் எத்தனை இருக்கு?" என்பதுதான் குறைந்த பக்ஷ பேரமே. இதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமில்லை என்றுதான் தோன்றுகிறது.

>>>>எங்கு தன்னலமில்லா காதல் மலர்கிறதோ அங்கு அவர்கள் தங்களை இழக்கிறார்கள். வேறோரு கூட்டணிக்கு அங்கே வழியில்லை.<<<<

இயற்கையில் எல்லாமே விரிந்து கொண்டு போகின்றன. ஒருவரிடம் தன்னலமற்ற காதலும், காமமும் கொண்ட ஒருவர் அவற்றை விரித்து பல பேரிடமும் கொண்டு செல்ல விரும்ப வாய்ப்பு இருக்கிறதா? கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறதே.

இவ்விரிவு ஒருவர் மேலேயே விரிந்து கொண்டு போகும் வாய்ப்பும் இருப்பதை உணர்கிறேன். ஆனால், கூட்டணியாய் ஜெயிப்பவரைவிட தனியாக நின்று ஜெயிப்பவருக்குத்தானே மரியாதை என்று சொல்லி ஜோக்கடித்து விடாதீர்கள். கேள்வியே அந்த மரியாதை ஏன் என்பதுதான்.

தசரதனை விடுங்கள். அந்தக் காலத்தில் தசரதனுக்கு இருந்தது போல சாபமில்லாத அரசர்களும், குடிமகன்களும் பல தார மணம் புரிந்துகொண்டார்களே. முதல் மனைவிக்கும் பல ஆண் குழந்தைகளிருந்தாலும் பல திருமணங்கள் செய்து கொண்டார்களே. எனக்குத் தெரிந்தவரை பல தார மணம் ஒரு சமுதாய கடமை இல்லை. இந்தக் காலத்திலும் இது தொடர்கிறதே. எதற்காக? ஏன் ஆண்களுக்கு மட்டும் இந்த உரிமை?

மீண்டும் கூறுகிறேன். என்னால் புரட்சி எல்லாம் செய்ய முடியாது. ஒருதார வாழ்க்கை முறை மீதும், கற்பு எனும் கொள்கை மீதும் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை எனக்கு உங்கள் மீது மரியாதையைத் தருகிறதே. ஏன்? ஏனென்றால் நடைமுறையில் நானும் அப்படித்தான் என்பதாலிருக்கலாம். அல்லது குறைந்தபக்ஷம் இவை உயரியவை என்று எனக்கு செய்யப்பட்ட போதனைகள் அடிமனத்தில் குடிகொண்டிருப்பதால்.

இன்னமும் தன் மனைவியை மட்டும் காதலிக்கும் டோண்டு மாமாவைப் பார்க்கும்போது பரவசமாகத்தான் இருக்கிறது. இது போன்ற தம்பதிகளை நமஸ்காரம் செய்வதே நல்ல புத்தியைத் தரும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

ஆயினும் என்னை, என் வாழ்க்கையை புரிந்து கொள்ள இவை எல்லாம் ஏன் இப்படி இருக்கின்றன என்று கேள்வி கேட்கிறேன். சில விஷயங்கள் பற்றிய புரிதல்கள் நான் ஸந்தோஷமாக இருக்கவும், உண்மையையும், நிதர்ஸனத்தையும் அறியவும் உதவுகின்றன. வாழ்க்கை பற்றி கற்றுக் கொண்டே இருக்க ஆசை.

காலமும், காலத்தால் ஏற்படும் அனுபவமும், அதை சரியாகப் புரிந்து கொள்ளும் புத்தியும் எனக்கு மேலும் கற்றுக்கொடுக்கட்டும். ஓம்.

 
At April 20, 2006 9:34 PM, Blogger Muse (# 5279076) Said ...

>>>ராமர் அந்த காலத்தில் ஒரு விதிவிலக்கே. அரசர்கள் பல திருமணங்கள் செய்து கொள்வது சர்வ சாதாரணம்.<<<

தனி மனித விருப்புகளை அதிகம் மதிக்காத, பல மனைவியரை மணம் செய்வது புகழுக்கும், ஆண்மைக்கும் அடையாளமாக நடைமுறையில் கருதப்பட்ட அந்தக் காலத்தில் (ஏன் அதற்கு பிந்தைய காலங்களிலும்) ஒருத்தியை மட்டுமே மனத்திலும் வாழ்க்கையிலும் நிறுத்திக் கொண்டு தனிமனித சுதந்திரத்தை ப்ரகடணம் செய்த ராமன் அல்லவோ நிஜமான புரட்சியாளன். இல்லையா ஜெயராமன் ஸார்?

 
At April 23, 2006 10:14 PM, Blogger Muse (# 5279076) Said ...

மதிப்புற்குரிய டோண்டு மற்றும் ஜெயராமன் அவர்களுக்கு நன்றி.

 
At April 24, 2006 4:54 AM, Blogger Arul Murugan Said ...

Dear Musings ji,
You have clearly established in your article that our society is a still a male-dominated one. I am surpirsed to see people backing up Dasaradha who had many wives. For me, he looks no more than a male-prostitude. But neither I belong to a community which say that prostitution is wrong. Anybody has freedom to do what he/she wants unless it affects others. Either the hypothesis of 'karpu' has to be eliminated or to be followed by both sex. It is true that men think about other women (than their wives) naturally (may be for a fraction of time). This comes because, no wife can be perfect and people look for perfection in others. This behaviour is applicable to women too. So, finally we can say that everybody (in both sex) is corrupted (acccording to the hypothesis 'karpu') mentally atleast for a fraction of time in their life time. So, your statement (99 percent people are corrupted) is perfectly correct. When everybody violates a rule what is the need for the rule- and hence what is the need for the hypothesis of 'karpu'? So, your question is posted perfectly!

Finally thank you very much for bringing out this issue. I need a big-brain to think about.

 
At April 24, 2006 11:34 PM, Blogger Muse (# 5279076) Said ...

Thank you Muruganji.

The problem with humanity is we cannot generalize it to have singular natural characteristics. There are certain animals and birds that remain with only one companion in their entire life. If we look at all the animals or birds of that particular species it is the natural function. So, even if an animal of that species go for multi-partner relationship we can call it as abheration.

But with human beings we cannot categorize them to a particular group having singular characteristics. Neither we can expect a natural endogamous relations from them. These things can only be forced upon them.

The reason of the caste system (for that matter racism or any type of groupism) is to group people based on some general characters claimed to be natural to them. For example, in india brahmins are supposed to be pious and honest. (Please remember that I am talking about caste by birth, not what actually hinduism emphasizes). We see in practical life that this is not so.

Problem comes in when the powerful people try to force this generalization upon people though it is neither truth nor feasible. For example, many of the current left-wing people in India say that all brahmins are bad. We see in practical life this is not so.

These concepts are forced just to exploit the people to gain or strengthen power. This is also applicable to the "chastity" forced upon women.

At the same time I agree to the need of "fidelity", which in my definition adhering to the agreement between the partners. This agreement is not something drew by the society and applied as a blanket rule for every one.

This also make those people who want to remain with single partner a freedom, choice and protection.

The matter is really complex when we say that a particular issue is painful to a person when somebody else considers this as nothing to be bothered and natural.

So when these two people comes before the society, the society wants justice to the person in pain rather than alleviating the pain. The reason is that the society cannot remove the pain. The only possibility is to give punishment of some sort. If it openly admits its inability to relieve pain its weakness will come out. Then the society will lose its face. So, it gives what it can and punishes those who unknowingly touches its weakness.

The only solution is to make these two people to understand working of their mind, their thinking process, and more importantly those beliefs and concepts based on which their thinking, mind and life revolves.

 
At April 26, 2006 12:23 AM, Anonymous மாக்கான் Said ...

கற்பு பற்றி டோண்டுவிடமா கருத்து கேட்கிறீர்கள்?

அது சிறு குழந்தைக்கும் ஆசை வந்ததால்தான் பால்ய விவாகங்கள் தோன்றின என்று சொன்னது!

பெண்பிள்ளைகளை சுதந்திரமாக எல்லோருடனும் உடலுறவு கொள்ள அனுமதிக்க வேண்டுமாம்!

 
At June 21, 2006 7:57 AM, Blogger Muse (# 5279076) Said ...

தொடர்புடையதாகவிருப்பதால் மதிப்பிற்குரிய. திரு. டோண்டு அவர்களின் பதிவிலிட்ட கருத்தை (http://dondu.blogspot.com/2005/10/2_14.html) இங்கேயும் இடுகிறேன்.

திரு. டோண்டு அவர்களின் கருத்தாக நான் புரிந்துகொண்டது பின்வருமாறு:

ஒருவர் தன் துணைக்கு மரியாதையும் பரஸ்பர நம்பிக்கையும் ஊட்டும் வகையில் நடக்கவேண்டும். ஆணோ, பெண்ணோ த்ரோகம் செய்வது தவறுதான்.

அதே சமயத்தில் வன்முறைகளின் காரணமாக விருப்பமின்றியும், துணையே இல்லாத நிலையினாலும், இயற்கையின் பலத்தினாலும் பலர் முறைசாராச் செயல்களில் ஈடுபட்டுவிடுகின்றனர். அங்கனம் ஈடுபட்டதாலேயே அவமானங்களையும், துன்பங்களையும் அவர்கள் சந்திக்க நேரிடுகிறது.

சமுதாயமானது இச்செயல்களைத் தண்டித்தாலும், கண்டித்தாலும் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க எல்லோருக்கும் ஒரு பொதுதர்மத்தை வழங்காமல் இருக்கிறது. இது சமுதாயமானது தனிமனிதர்களின் மேல் செயல்படுத்துகின்ற வன்முறை. இவ்வன்முறையால் வரம்பு மீறுபவர்களை அதே சமுதாயம் ஏளனம் செய்யவும், அவமானப்படுத்தவும், துன்புறுத்தவும் செய்கிறது.

இத்தகைய சூழ்நிலையிலிருந்து தப்ப தனிமனிதர்கள் தங்களது சுயமரியாதையையும், தன்னம்பிக்கை அளிக்கும் வாழ்வையும் பெற ஜாக்கிரதையாகவிருக்க வேண்டியது அவஸ்யமாகிறது. விஞ்ஞான வளர்ச்சி பெற்ற காலத்தில் இதற்கான வழிமுறைகளைப் பயன்படுத்துவதும் வரவேற்கத்தக்கதே.

இந்த விஷயங்கள் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு மட்டும்தானேயொழிய எல்லோருக்குமில்லை. எல்லோரும் செய்ய வேண்டும் என்றும் திரு டோண்டு அவர்களும் சொல்லவில்லை.

இந்த விஷயத்தில் பலரும் தங்களது நேர்மையை, ஒழுக்கத்தை நிலைநிறுத்த முயல்கிறார்கள். புரிந்து கொள்ளாமல் கேள்வி எழுப்புகிறார்கள்.

கேள்வி கேட்க யேஸு இல்லாதபோது, கல்லெறிபவர்கள் நியாயவான்கள்.

நான் தங்களுடைய கருத்துக்களாகப் புரிந்து கொண்டவை அனைத்தும் சரிதானே, டோண்டு சார்?

 

Post a Comment

<< Home