Friday, May 05, 2006

அக்ஞானத்தால் விளையும் சுய-ஏளனம்

திரு. ஜெயக்குமாரின் வலைப்பதிவுகளில் நான் பதிந்த என்னுடைய கருத்துக்களும், பதில்களும் இங்கே தனிப்பதிவாக இடப்படுகிறது. இந்த பதிவு பேராயர் ஸ்ரீலஸ்ரீ எஸ்ராவையும், மதுரை ஆதினகர்த்தரையும் சமனப்படுத்திய முயற்சிகளின் விளைவு. மற்றவர்களின் கேள்விகளும், கருத்துக்களும் >>>> <<<< இது போன்ற அடைப்பு குறிகளுக்குள். அதற்கு எம் பதில்கள் இப்பதிவாகிறது.

முழு விவரங்களுக்கு http://jeyakumar777.blogspot.com/2006/04/blog-post_26.html.

-------------------------------------------------------------------------------------

>>>>>

மாயவரத்தான்... said...

இதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை ஜெயக்குமார். மதுரை ஆதினம் செய்யலாம், எஸ்ரா செய்யக் கூடாதா?

<<<<<<

>>>>

ஜெயக்குமார் said...
//அண்ணாச்சி:
எஸ்றாவை கவனிச்சு பதிவு போடறீங்க, மதுரை ஆதீனத்தை கண்டுக்காம விட்டுட்டீங்களே. ஏஏஏஏஎஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்...........//<<<<<<

>>>>>

D The Dreamer said...
அண்ணாச்சி:

.... ஆனா, இப்போ எஸ்றாவை வாரற மாதிரி ஏன் ஆதீனத்தோட அரசியல கேள்வி கேக்கலை?
நீங்க இங்க எஸ்றாவை கேட்கற ஒவ்வொரு கேள்வியையும் (கொஞ்சம் கொஞ்சம் மாத்தி) ஆதீனத்துக்கிட்ட கேக்க முடியும். அதையும் பதிவா போடுங்க நீங்க நடுநிலைவாதின்னு ஒத்துக்குறோம்.

<<<<<<<

>>>>>

இன்னொரு விதத்தில் மதுரை ஆதீனத்தைக்காட்டிலும் எஸ்றா நேர்மையானவர். அவர் ரகசிய பிரச்சாரம் செய்வதில்லை. உள்வேலைகளிலும் ஈடுபடுவதில்லை.வெளிப்படையாகவே தான் சார்ந்த கட்சியை அறிவித்துள்ளார்.

by
Ganesh
<<<<<<<<<<<<




எஸ்ரா மிகப் பெரும்பான்மையான கிருத்துவர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளின் முகம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், மதுரை ஆதீனம்........?

காஞ்சி மடாதிபதிக்கு நடந்ததில் ஒரு 2 அல்லது 3 சதவீதமாவது எஸ்ராவுக்கு செய்ய முடியுமா? அல்லது குறைந்த பக்ஷம் ஏழ்மையில் வாடும் குழந்தைகளை வன்புணர்ச்சி செய்யும் யாருமே அறியாத ஒரு பாதிரியின் மேல் ஒரு FIRஆவது பதிவு செய்ய முடியுமா?

மதுரை ஆதீனம் பற்றி நமது பத்திரிக்கைகள் நக்கலாகவே எழுதுகின்றன. அவர் நடத்தும் ஜோக்குகளுக்கு இந்த மரியாதைதான் கிடைக்கும். ஆனால் இதுபோன்ற ஜோக்கர்கள் கிருத்துவ மதத்திலோ, இஸ்லாமிய மதத்திலோ இல்லையா. டென்மார்க் கார்ட்டூன் பிரச்சினையின் போது உ.பியை சேர்ந்த ஒரு மந்திரி பத்வா அறிவித்தார். ராஜ் டிவியின் காலை, மாலை நிகழ்ச்சிகளில் "ஆண்டவரை பற்றி" பிரசங்கம் செய்பவர் "கல்லையும், உருவப் பொம்மைகளையும்" வணங்கும் "காட்டுமிராண்டிகள்" "பிசாசுகளை" வழிபடுவாதாக "அன்பையும்" "அறிவையும்" புகட்டுகிறார். இது பற்றி யாராவது சொல்கிறார்களா? சொன்னால் உடனே அவருக்கு ஹிந்துத்துவவாதி என்றோ, அல்லது பார்ப்பான் என்றோ முத்திரை குத்தி விடுகிறார்கள். இதனால் நடுநிலமையானவர்கள்கூட பேச பயப்படுகிறார்கள்.

காஞ்சி மடாதிபதி கைது செய்யப்பட்ட போது எல்லா ஊடகங்களும் எப்படி அதை வெளியிட்டன? திரிபுராவில் பாதிரியார்கள் நடத்திவரும் வன்முறை வெறியாட்டத்தைப் பற்றி எந்த பத்திரிக்கையாவது இதுவரை எழுதியுள்ளதா? (மேலதிகத் தகவல்களுக்கு http://www.thinnai.com/?module=displaystory&story_id=206042110&format=html படிக்கவும்.) இணையம் இவர்களின் கண்ட்ரோலில் இல்லாததால் இது பற்றி எழுத முடிகிறது. இன்னொரு விஷயம் தெரியுமா? உலகத்தின் அழிவைப் போல கிருத்துவ மதம் முன்வைக்கும் மற்றொரு நம்பிக்கை சாத்தான். அவனுடைய எண் 666. அதை செமிடிக் மொழி ஒன்றில் மொழி பெயர்த்தால் வருவது என்ன தெரியுமா? WWW. வேல்ட் வொய்ட் வெப். இணையம்தான். மற்ற புரளிகள் போல இப்படியும் ஒரு புரளி.

>>>>

Anonymous said...
நண்பர் muse என்ன சொல்ல வருகிறார்?

........
.........
பாதிரியார் ஜான் ஜோசப் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை பெற்று சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். திருச்சியில் ஒரு பாதிரியார் சிறுவர்களுடன் வன்புணர்ச்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

.......
........
.......

இவர்களுக்கெல்லாம் எந்த முன்னாள் ஜனாதிபதிகளும் சிபாரிசுக்கு அலையவில்லை.

......
........

muse உங்கள் சொற்களில் அந்த வெறி அப்பட்டமாகத் தெரிகிறது.

by
Ganesh
<<<<<<<<


நண்பர் கணேஷ் அவர்களே,


ஒரு முன்னாள் ஜனாதிபதி சிபாரிசுக்கு அலைந்தார் என்பது உங்களுக்கு எப்படி தெரிய வந்தது?

- மீடியாக்களின் மூலம். நல்லது.

மாட்டிக் கொண்டுவிட்ட இந்த இரண்டு பேருக்காகவும் யாரும் சிபாரிசுக்கு அலையவில்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?

- ஏனென்றால் எந்த மீடியாவும் அது பற்றி வெளியிடவில்லை.

மீடியாக்களின் மூலம் உலகை பார்ப்பதற்கு பதிலாக நீங்கள் உங்கள் தெருவில் என்ன நடக்கிறது என தயவுசெய்து பாருங்கள்.

நான் நீங்கள் கருதுவது போல வெறியனல்ல. நான் ஒரு ஹிந்து. எல்லா தெய்வங்களையும் என்னால் வழிபட முடியும். க்ருஷ்ணனின் மேல் எவ்வளவு பக்தியோ அவ்வளவு பக்தியோடு நான் ஏசுவையும், அல்லாவையும் வணங்குகிறேன். ஒரு கடவுளை வணங்க பக்தி செய்ய ஒரு மதத்திற்கு மாற வேண்டியதில்லை என்பது என் மதம் சொல்லித் தரும் கருத்து. அனைத்து மனிதர்களிலும் தெய்வங்களை காண முயற்சி செய்கிறேன். எல்லா மனிதர்களும் ஒன்றுதான் என்பது என் புரிதல்.

செயின்ட் த்ரேஸா ஆப் அஸிஸி முதல் சமீப காலம் வரை வாழ்ந்த அன்டோனி டி மெல்லோ வரை எனக்கு கிருத்துவ புனிதர்கள் மேல் பக்தியுண்டு.

ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்தவரை மட்டும் மீடியாக்களும் அரசியல்வாதிகளும் தாக்குவது எனக்கு உடன்பாடல்ல.

நீங்கள் ஜான் ஜோசப் பற்றி ஞாபகம் வைத்துள்ளது சந்தோஷமாக உள்ளது. மீடியாக்களில் போலிச்சாமியார்களுக்கு கொடுக்கப்படும் பெயர் "ப்ரேமானந்தா" "ஜான் ஜோசப்" அல்ல. மீண்டும், மீண்டும், மறுபடியும் மீண்டும் பிரபலப்படுத்தப்படும் பெயர் "ப்ரேமானந்தா" "ஜான் ஜோசப்" அல்ல. மக்களுக்கு ஜான் ஜோசப் ஞாபகம் இல்லை. ஞாபகமில்லாத விஷயம் நடக்காத விஷயமாகிறது.

பெரும்பாலான பொதுஜன திரைப்படங்களில் போலி சாமியார்களாகக் காட்டப்படுவது ஹிந்து சாமியார்களே. எங்கேனும் இஸ்லாமிய, கிருத்துவ மதத்தை சார்ந்த போலிகளை திரைப்படங்கள் ஒளிபரப்ப முடியுமா?

தன்னை ஒரு பகுத்தறிவுவாதியாக காட்ட விரும்பிய நடிகர் மன்சூர் அலி கான் ஒரு படத்தில் ஒரு போலி சாமியாராக நடித்தர். (வேறு படங்களிலும் நடித்திருக்கலாம்). அதில் தலைவரை சுற்றி எப்போது பார்தாலும் இள வயசு குட்டிகள்தான். இந்த லட்ஷணத்தில் அந்த நடிகருடைய உடை அலங்காரம் அப்படியே ஸ்வாமி விவேகானந்தரின் உடை. இந்தியாவிலுள்ள ஏழை மக்களுக்காக "உண்மையாகவே" பாடுபட்டு தன் வாழ்வை, சுகத்தை தியாகம் செய்த அந்த புனிதரை ஞாபகப்படுத்தும் உடை. இது ஒரு உதாரணம்தான். இது போல் பல படங்களை என்னால் அடுக்க முடியும். உங்களால் கிருத்துவ, இஸ்லாமிய சாமியார்களை பற்றி இதுபோல் கூறுகின்ற ஏதேனும் ஒரு திரைபடத்தை கூற முடியுமா? ஒரே ஒரு தமிழ்படம். நீங்கள் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.


ஒரு விளையாட்டிற்கு இந்த முயற்சி செய்து பாருங்களேன். கூகிளில் போய் முதலில் ப்ரேமானந்தா என்று டைப் செய்து தேடிப்பாருங்கள். எத்தனை பக்கங்கள் வருகின்றன என்பதையும் எவ்வளவு பொருத்தமானவையாக அவை இருக்கின்றன என்பதையும் கணக்கிடுங்கள். பின் ஜான் ஜோஸப் என டைப் செய்து தேடவும். எத்தனை பக்கங்கள் வருகின்றன என்பதையும் எவ்வளவு பொருத்தமானவையாக அவை இருக்கின்றன என்பதையும் கணக்கிடுங்கள். முடிவு என்ன என்பதை நீங்கள் எனக்கு சொல்ல வேண்டாம்.

உண்மையில் இதை நான் இதுவரை முயற்சி செய்ததில்லை. இந்த பதிலை உங்களுக்கு அளித்துவிட்டு இந்த சோதனையை நானும் செய்து பார்க்கப் போகிறேன்.

ஒரு திருச்சி சாமியாரைப் பற்றி பொதுப்படையாகக் கூறினீர்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே பலருக்கு தெரியாது. அவரது பெயர்கூட உங்களுக்கு இதை டைப் செய்யும்போது ஞாபகம் வரவில்லை.

ஞாபகமில்லாத விஷயம் நடக்காத விஷயமாகிறது.

>>>>>>>>>

பெரியார் said...
நண்பர் ம்யூஸ் அவர்களே எங்கே பெரும்பான்பையானவர்கள் ஒரு மதத்தைப் பின்பற்றுகிறார்களோ அங்கே அம்மதத்தினைப் பற்றிய கேலிகள் கிண்டல்கள் உள்ளன என்பது கண்கூடு ! நம் நாட்டில் இந்துக்கள்.இதேபோல் ஏசுவை கிண்டல் செய்து கிறுஸ்துவ பாதிரிகளை கிண்டல் செய்து ஏகப்பட்ட ஆங்கில திரைப்படங்கள் வந்துள்ளனவே !

<<<<<<<<<

ஸ்ரீமான் பெரியார்ஜி,

பெயருக்கேற்ற பதில் சொல்லியிருக்கிறீர்கள். இந்தியாவில் பெரும்பான்மையாக பின்பற்றப்படும் மதங்களில் ஹிந்து மதமும் ஒன்று. பெரும்பான்மை மதங்களில் அதிக அளவில் உள்ளது ஹிந்து மதம் என எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அது மட்டும்தான் பெரும்பான்மை மதம் என்பது பூசணிக்காயை வெங்காயத்தில் ஒளிப்பது. பாகிஸ்தானை விட, பங்களாதேஷை விட இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகம். பெயருக்கேற்றபடி வேலை செய்கிறீர்கள்.

மற்ற நாடுகளில் ஒரே ஒரு பெரும்பான்மை மதம்தான் உள்ளது.

நீங்கள் பெரும்பான்மையை எண்ணிக்கை அளவில் பார்க்கிறீர்கள். அப்படியே பார்த்தாலும் ஒரே குழுவாக ஹிந்துக்கள் இல்லை. தனி மனித மெய்ஞான விடுதலையை முக்கியமாக்குவதால் இந்த மதத்தில் பெரும்பான்மையாக ஒரு குறிப்பிட்ட மனிதரையோ, புத்தகத்தையோ வழிபடுவதில்லை. குழுக்களின் அளவில் கணக்கிடுவீர்களானால் இது உண்மையில் பல சிறுபான்மையினர் உள்ள ஒரு பெரும்பான்மை மதம். உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் ஒரு ஒற்றுமையில்லாத கூட்டணி கட்சி. ஜெயலலிதாவை மரியாள் போல போஸ்டர் வைத்ததற்கு இந்தியா முழுவதும் கிருத்துவர்கள் ஒரு குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமையில் மணியடித்தது போலவோ, எங்கோயிருக்கும் டென்மார்க்கில் ஒரு பத்திரிக்கை தன்னுடைய பத்திரிக்கை சுதந்திரத்தை உறுதி செய்து கொள்ள வெளியிட்ட கார்டூனுக்காக இந்தியா முழுவதும் பற்றி எரிந்தது போலவோ, அதில் நான்கு அப்பாவி பொதுமக்கள் (ஹிந்துக்கள்) கொல்லப்பட்டது போலவோ நடந்துகொள்வார்களா ஹிந்துக்கள். இதெல்லாம் ஹிந்து மதத்தை அவமானப்படுத்துவதால் நடக்காது. ஜெயலலிதாவை அன்னை பராசக்தியாக உருவகித்து நீங்கள் இன்னமும் கட் அவுட் வைத்து கொண்டுதான் இருக்கிறீர்கள். போஸ்டர்கள் அடிக்கப்படுகின்றன.

உடனே நீங்கள் குஜராத்தை இழுப்பீர்கள். அதில் என்னவோ முஸ்லீம்கள் மட்டும்தான் கொல்லப்பட்டதாகக் காட்டும் மீடியாக்களின் செய்திகளை உதாரணம் சொல்வீர்கள். உண்மையில் அந்த மதக் கலவரத்தில் இறந்த முஸ்லீம்களின் எண்ணிக்கை, ஹிந்துக்களின் எண்ணிக்கையைவிட அதிகம். அதனால் இதை ஒருவகையில் முஸ்லீம்களின் தோல்வியாகத்தான் அம்மதத்திலுள்ள தீவிரவாதிகள் கருதுகிறார்கள். அதை சரிகட்டத்தான் அத்தனை களேபரமும்.

அதை அப்படியே ஏற்றுக்கொண்டு கண்டனம் செய்த, செய்கிற, வன்மையாகக் கண்டிக்கிற ஹிந்துக்கள் இந்த வன்முறையை ஆதரிக்கும் மனிதர்களை விட எண்ணிக்கையிலும், பலத்திலும் அதிகம். ஒரு கேள்வி கேட்கிறேன். இதுவரை எந்த ஒரு மௌல்வியாவது, அல்லது இஸ்லாமிய தலைவராவது காஷ்மீரிலும், பம்பாயிலும், கோயம்புத்தூரிலும் குண்டு வைத்து சம்பந்தமேயில்லாத அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த தீவிரவாதிக்கு எதிராக பத்வா அறிவித்ததுண்டா? அட, பத்வா கூட வேண்டாம். அந்த தீவிரவாதிகள் எல்லோரும் நரகத்திற்கு போவார்கள் என்றாவது சொல்லட்டுமே. அது கூட வேண்டாம். மதத்தின் பெயரால் பொது மக்களை கொன்ற "எல்லா" மதத் தீவிரவாதிகளும் நரகத்திற்குத்தான் போவர்கள் என்றாவது அனைவரும் அறியும்படி ஒரு அறிக்கையை ஒரு இஸ்லாமிய மதத் தலைவர் (அட அதுவும் வேண்டாம் ஒரு சாதாரண இஸ்லாமியர்) அறிவிப்பரா?



ஒற்றுமையாய் ஒரே குழுவாய் செயல்படுகின்ற ஒரு மதமாக ஹிந்து மதத்தை கருத முடியாது. ஆனால் கிருத்துவ இஸ்லாமிய மதங்கள் அங்கனம் செயல்படுகின்றன. அந்த வகையில் பார்த்தால் கிருத்துவ இஸ்லாமிய மதங்கள்தான் பெரும்பான்மை மதங்கள்.

எந்த அரசியல் கட்சியாவது பெரும்பான்மை ஹிந்துக்களின் ஓட்டுக்களை பற்றி கவலைப்படுகின்றனவா? இல்லை. அவை குறி வைப்பது ஜாதி வோட்டுக்களைத்தான். இங்கே ஒவ்வொரு ஜாதியும் ஒரு மதம்போல் செயல்படுகின்றது. அதே சமயத்தில் பிஜேபி உட்பட கட்சிகள் கவலைப்படுவது சிறுபான்மையினரின் (கிருத்துவ இஸ்லாமிய) ஓட்டுக்களுக்குத்தான். ஏனென்றால் அவை நிஜமான உலகத்தில் பெரும்பான்மை மதங்கள். வெறும் பெரும்பான்மை மட்டும் அல்ல. பலமுள்ள பெரும்பான்மை. ஏதேனும் எதிர்த்தால் காயடித்துவிடுவார்கள். அதனால்தான் அவற்றைப் பற்றி யாரும் கேலி செய்ய அஞ்சுகிறார்கள். நீங்களும்தான்.

இங்கே கிருத்துவ பள்ளிகளில், கல்லூரிகளில் இடம் கிடைக்க நீங்கள் கிருத்துவராக இருந்தால் வாய்ப்பு அதிகம். ஏதேனும் ஒரிரு ஹிந்துக்களை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அவர்களும் மிக மிக நன்றாக படிப்பவர்களாக இருக்க வேண்டும். ஒருவித அறிவிக்கப்படாத கோட்டாவை இவர்கள் பின்பற்றுபவர்களாகவிருக்கிறார்கள்.

நீங்கள் பெரும்பான்மை மதம் பின்பற்றப்படும் நாடுகள் என எழுதியபோது அமெரிக்காவையும், இங்கிலாந்தையும், யூரோப்பிய நாடுகளையும் மனதில் வைத்துள்ளீர்கள் என நினைக்கிறேன். அங்கே கிருத்துவ மதத்தை மட்டுமல்ல, மற்ற மதங்களையும் கிண்டல் செய்து நீங்கள் படம் எடுக்கலாம். படங்கள் உண்டு. இதே ஹிந்து மதத்தையும், புத்த மதத்தையும் கேலி செய்தும் அங்கே ஆங்கில படங்கள் எடுத்துள்ளார்கள். இந்தியாவை போல ஒரே ஒரு சோப்ளாங்கியை மட்டும் அவர்கள் கேலி செய்வதில்லை. டென்மார்க் பத்திரிக்கையை இந்த விஷயத்தில் எடுதுக்காட்டாக கொள்ளலாம்.

நான் ஒரே ஒரு தமிழ் படத்தை பற்றி கேட்டல் நீங்கள் ஆங்கில படத்தை பற்றி கூறுகிறீர்கள். எங்களூர் குப்பனும், சுப்பனும் தரமான ஆங்கில படங்களையா பார்க்கிறார்கள்? அவர்கள் பார்க்கும் ஆங்கில படங்களில் முக்கலும், முனகலும்தான் அதிகம். வசனம் குறைவு. கதையை ஒரு ஸ்டாம்பின் பின்னால் நீங்கள் எழுதிவிடலாம்.

கலைக்கான சுதந்திரம் என்ற பெயரில் ஒரு ஹுசைன் ஸரஸ்வதியையும், பாரத மாதாவையும் ஆபாசமாக வரையலாம். ஆனால் அதே ஆள் கிருத்துவ இஸ்லாமியத்தில் உயர்வாகக் கருதப்படும் பெண்டிரை அதேபோல் வரைய மாட்டார். நீங்கள் சொல்லலாம் உங்கள் கோயில் சிற்பங்கள் தெய்வங்களை நிர்வாணமாக வைத்துள்ளனவே என்று. அந்த காலத்தில் மனிதர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே தெய்வங்களும் வடிவமைக்கப்பட்டார்கள். இஸ்லாமிய கிருத்துவ ஆதிக்கங்களின் விளைவாக தற்காலத்தில் ஹிந்துக்களும் தங்கள் தெய்வங்களை மரியாதைக்குரிய ஆடை கலாச்சாரத்துடந்தான் வணங்குகிறார்கள். தற்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் தெய்வங்களை தற்கால ஒழுக்க விதிகளுக்கேற்ப ஆடைகளோடுதான் படைக்கிறோம், வணங்குகிறோம்.



நான் சொல்வதெல்லம் ஹிந்து மதத்தை கேலி செய்யாதீர்கள் என்பதில்லை. அந்த மதத்தை மட்டும் கேலி செய்வதை விடுங்கள். எந்த மதத்தையும் கேலி செய்யாதீர்கள். அல்லது எல்லா மதங்களையும் கேலி செய்யுங்கள். என்னுடைய கருத்தின்படி ஆன்மீகத்தை அழித்து அரசியல் செய்வதே மதங்கள். அவை எந்த வடிவில் இருந்தாலும் அவற்றிலுள்ள முட்டாள்தனமான, கீழ்த்தரமான விஷயங்கள் விமர்சனம் செய்யப்படவேண்டும்.

அதுவன்றி ஹிந்து மதம் மாறுதல்களை ஏற்று கொள்ளுகின்ற ஒரு மதம். மாறுதல்களை ஏற்றுக் கொள்ளாமல் அதை ஒரு இறுகிய அமைப்பாக மாற்ற நடத்திய முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. கிருத்துவ இஸ்லாமிய ஆட்சிகளின் விளைவால் அம்மதங்களை போன்றே ஹிந்து மதத்தையும் ஒரு இறுகிய அரசியல் அமைப்பாக மாற்ற தற்காலத்தில், மக்களின் ஆதரவில்லாமல் நடந்துவரும் முயற்சிகளும் தோல்வியில் முடியும் (அதுவரை இந்த மதம் தப்பிப் பிழைத்தால்).

அதெல்லாம் சரி தலைவரே. அரேபிய, வளைகுடா நாடுகளை விட்டுத் தள்ளுங்கள். ஜனநாயகத்தை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும், உண்மையாகவே முஸ்லீம்கள் "பெரும்பான்மையாகவுள்ள" பங்களாதேஷிலோ, மலசியாவிலோ இஸ்லாமையோ, நபிகள் நாயகத்தையோ கேலி செய்து ஏன் ஒரு பத்திரிக்கையோ, திரைப்படமோ வரவில்லை?


>>>உங்கள் மத பெரியவரிடம் சொல்லிப்பருங்கள் !!!<<<

நான் என்ன சொல்வது? இதை என்னிடம் சொன்னவரே என் மதத் தலைவர்தான். அவருக்கு ராமக்ருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், பரமஹம்ஸ யோகானந்தர், குருஜி கோல்வல்கர், ரிஷிகேஷ் ஷிவானந்தர், ஷிர்டி ஸாய் பாபா, புட்டபர்த்தி சாய்பாபா, ராமானுஜர், ஸ்வாமி ராம்தாஸ், ரமண மகரிஷி, ஸ்வாமி சித்பவானந்தர், ஜே க்ருஷ்ணமூர்த்தி, ஆதி ஷங்கரர், சுப்ரமண்ய பாரதி, ஸ்வாமி சுகபோதானந்தா, ஸ்வாமி ரங்கனாதானந்தர், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்,............. என்று பல பெயர்கள்.

பதிலுக்கு ஒரு கேள்வி. நான் மேலே சொன்ன அனைவரும் அல்லாவையும், ஏசுவையும், ஜெஹோவாவையும் வழிபட்டு ஒருவர் வாழ்க்கையிலும், ஆன்மீகத்திலும் முன்னேற முடியும் என்று வெளிப்படையாகக் கூறுபவர்கள். அதே போல எஸ்ரா கூறுவாரா?


>>>>இன்னும் கூட கோயில்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் மக்களுக்கு உங்கள் பதில்? <<<<

எந்த கோயிலில் மக்களை அவர்களது ஜாதிக்காக அனுமதிக்க மறுக்கிறார்கள்? எல்லாருக்கும் கோயில்களில் அனுமதியுண்டு.

ஆனால் நீங்கள் கூறுவது கோயில் கருவறை என்றால் அது ஓரளவு சரி. அங்கே பூசாரிகளுக்கு மட்டும்தான் அனுமதி. வேறு யாருக்கும் அவர் எந்த உயர் ஜாதியை சார்ந்தவராகவிருப்பினும் அனுமதி கிடையாது. இதுவும் தென்னிந்தியாவில் மட்டும்தான். இங்கு தெய்வங்கள் அணிந்திருக்கும் நகைகள் விலைமதிக்க முடியாதவை. வட இந்தியாவில் எல்லாரும் கர்ப்ப க்ருஹம்வரை சென்று தெய்வத்தை வணங்கலாம். கட்டியணைக்கவும் செய்யலாம்.

சில ஹிந்து கோயில்களில் பிற மதத்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அனுமதி இல்லை என்று போர்டுகள் தொங்குகிறது. இதற்கு காரணம் அந்த கோயிலை, தெய்வத்தை அவமானப் படுத்திவிடக் கூடாது என்ற காரணம்தான். பிற மதத்தவர்கள் அங்கனம் செய்யமாட்டேன் என்று எழுதி கொடுத்தால் அவர்களும் மற்றவர்களோடு அனுமதிக்கப்படுவார்கள். இவையெல்லாம் தற்கால சட்டங்களின் அடிப்படையில் எழுந்தது. நடைமுறையில் பிற மதத்தவர்கள் இந்த போர்டுகளை அலட்சியம் செய்துவிட்டு உள்ளே சுற்றி பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். நானே மதுரை மீனாக்ஷி அம்மனின் கோயிலில் பலமுறை பார்த்திருக்கிறேன். உதாரணத்திற்கு நான் பார்த்தவைகளில் ஒன்று. ஒரு கிருத்துவ பெண் துறவி (ஸிஸ்டர் என அழைக்கிறோமே அவர்) பள்ளியில் பயிலும் பெண்களை (சுமார் 50, 60 பேர்) அழைத்துக்கொண்டு "மற்ற மதத்தவருக்கு" தடை செய்யப்பட்ட பகுதிக்குள் புகுந்து சுற்றி வந்தார். அங்கிருக்கும் சிற்பங்களை பார்ப்பதற்காக இல்லை. அவர் அந்த உருவ பொம்மைகளையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர் முகத்தில் அந்த போர்டை ஏளனம் செய்துவிட்ட த்ருப்திதான் தெரிந்தது. அந்த குழுவில் இருந்த ஒரு பெண் "கோயிலுக்குள் சென்று அம்மனை பார்த்துவிடலாம்" என்று சொன்னதற்கு அவருடைய தோழி "வேண்டாம் ஸிஸ்டர் திட்டுவாங்க" என்று கூறி விட்டாள். ஏறத்தாழ 50, 60 பெண்கள். ஹிந்து பெண்கள் தன் மாத விலக்கு நாட்களில் கோயிலுக்கு வருவதில்லை. இந்த பெண்களில் ஏதேனும் ஒரு பெண் இந்த காரணத்திற்காக வர மறுத்திருந்தால், ஸிஸ்டர் திட்டியே கொன்றிருப்பார்கள்.

என்னுடைய நீண்ட நாள் ஆசை இது. ஒரு மஸூதியில் போய் என் தெய்வம் அல்லாவை மற்ற இஸ்லாமியர்களோடு நின்று வழிபட வேண்டும். அதற்கு என்ன செய்வது என்று விவரமறிந்தவர்களை கேட்டு சொல்வீர்களா? தயவு செய்து. ஒரு இஸ்லாமியனாக மாறுவதைத் தவிர்த்து அனைத்து இஸ்லாமிய சடங்குகளையும் செய்ய நான் தயாராகவுள்ளேன்.

>>>>ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் அவர்களுக்கு சமூகப்புரட்சியையும் பெரும் மாற்றத்தினையும் ஏற்படுத்திய ஒரு மதம் கிருஸ்தவம்!<<<

அதனால்தான் கிருத்துவ நாடார்களுக்கும், கிருத்துவ முதலியார்களுக்கும் கொடுக்கப்படும் மரியாதையை தலித் கிருத்துவர்களுக்கு சர்ச்கள் கொடுக்க மறுக்கின்றன. சில சர்ச்சுகளில் தலித் மற்றும் மீனவ கிருத்துவர்கள் பின்னால்தான் உட்கார வேண்டும். கிருத்துவம் இந்தியாவில் தோன்றி ஏறத்தாழ 400 - 500 வருடங்கள் இருக்கும். இதுவரை பிஷப்பாக ஒரு தலித் கிருத்துவர்கூட ஆனதில்லை.

நம்முடைய மதத்தையும் தெரிந்து கொள்ளாமல், மற்ற மதங்களைப்பற்றியும் தெரிந்து கொள்ளாமல் நாம் இருப்பதால்தான் பிரச்சினைகளே.

4 Comments:

At May 05, 2006 11:22 PM, Blogger Geetha Sambasivam Said ...

மிக நல்ல பதிவு. நீங்கள் எழுதுவது முத்து-தமிழினியின் பதிவிலிருந்து தான் தெரிந்து கொண்டேன். நன்றாகப் பதில் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் புரிந்து கொள்ள மறுப்பவர்கள்தான் அதிகம்.

 
At May 07, 2006 10:05 PM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

கீதா,

உங்களின் கருத்து சந்தோஷமளிக்கிறது.

>>>புரிந்து கொள்ள மறுப்பவர்கள்தான் அதிகம்.<<<

சத்யமான வார்த்தைகள். ஆனால் நான் புரிந்து கொள்கிற உங்களை போன்றவர்களுக்குத்தான் எழுதுகிறேன். இங்கனம் நான் எழுதுவது விஷயங்களை நான் புரிந்து கொள்ள எனக்கு உதவும் என்கிற என்கிற நம்பிக்கையில்தான். எதிர் கருத்துக்கள் புரிதலை அதிகப்படுத்தலாம்.

 
At May 16, 2006 4:28 AM, Blogger வஜ்ரா Said ...

//
ிருத்துவ இஸ்லாமிய ஆட்சிகளின் விளைவால் அம்மதங்களை போன்றே ஹிந்து மதத்தையும் ஒரு இறுகிய அரசியல் அமைப்பாக மாற்ற தற்காலத்தில், மக்களின் ஆதரவில்லாமல் நடந்துவரும் முயற்சிகளும் தோல்வியில் முடியும் (அதுவரை இந்த மதம் தப்பிப் பிழைத்தால்).
//

This causes frustration and takes a new form called "Assertive Hinduism". And to the surprise of many its gaining popularity and acceptance.

இந்த ஆபிரஹாமிய மதங்கள் இந்தியாவில் அடிக்கும் கொட்டத்தை அடக்காவிடில் இந்தியா இருக்காது என்பது திண்ணாம்.

இந்த Assertive hindusim என்பது வேறேதுமில்லை, ஹிந்துத்வா தான். அதனால் தான், கிறுத்தவப் பாதிரியார்கள், முல்லாக்கள், அரிவாள், சுத்தி கோஷ்டி எல்லாம் ஹிந்துத்வாவைத் திட்டித் தீர்கின்றன.

அக்ஞானத்தால் வரும் சுய ஏளனம் என்பதற்கு உதாரணம் இந்துவாக உள்ள ஆரிவாள் சுத்தி கேஸ்..!

சரியா?

வஜ்ரா ஷங்கர்.

 
At May 18, 2006 3:01 AM, Blogger Muse (# 01429798200730556938) Said ...

மிக மிக சரி ஷங்கர்.

 

Post a Comment

<< Home