தெய்வங்களின் வன்முறை
ஸ்ரீ ஜயராமனின் வலைப்பதில்(http://virudu.blogspot.com/2006/05/blog-post.html) இட்ட கருத்து. மற்றவருடைய கேள்விகளும் கருத்துக்களும் >>>> <<<< என்ற குறியீடுகளுக்கிடையில் கொடுக்கப்பட்டுள்ளது.
>>>> தீவிரவாத கொடுமை அக்கிரமங்களால் துரத்தப்படுதல், அகதி முகாம்களில் நிலையற்ற வாழ்க்கை; சுய மதிப்பு சிறிதாவது தேற முயற்சி செய்யும் காஷ்மீர் இந்துக்கள் வாழ்வு படங்களால் மிக வெட்ட வெளிச்சமாக காட்டப்பட்டது.<<<
இது போன்ற வன்முறைகள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் நடத்த முடியவில்லை என்பதுதான் மதநல்லிணக்கவாதிகளின் (அப்படிக் கூறிக்கொள்கிறவர்களின்) உள்ளார்ந்த வருத்தமே. இது போன்ற செயல்களை செய்யவிடாமல் இருக்கச் செய்யப்படும் பாதுகாப்பு முயற்சிகள் அனைத்திற்கும் அவர்கள் கொடுத்துள்ள பெயர் ஹிந்துத்துவா.
இவை தவறில்லையா எனக் கேட்டால், தலித்துகளுக்கு நீங்கள் இதைவிட மோசமான கொடுமைகள் செய்தீர்கள் என்பர். இதில் இவர்கள் மறைக்கும் உண்மை என்னவென்றால் அவர்கள் தலித்துகளுக்கு இழைத்த, இழைத்து வரும் கொடுமைகளை மறைக்க மற்றவர்களின்மேல் பழி போடுவதுதான். அதிலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட உயர் ஜாதியினர்மேல் மட்டுமே பழி சொல்லக் காரணம் இச்சாதியினரை அழிப்பதன் மூலம் ஹிந்து மதத்தை அழித்துவிடலாம் என்று (தவறாக) முடிவு செய்து கொண்ட மிஷனரிகள்தான்.
ஒரு குறையை மற்றொரு குறையை கூறி நியாயப்படுத்துவது அவ்விரு குறைகளும் நிலைத்து நிற்கத்தான் வகை செய்யும். இவை நிலைத்து நிற்பதால் பயன் பெறுபவர்கள் இவற்றை அழிக்க விடமாட்டார்கள். மதநல்லிணக்கவாதிகள், முற்போக்குவாதிகள், பகுத்தறிவாளர்கள், வைதீகர்கள், மதத்தலைவர்கள், கம்யூனிஸ்ட்டுகள், ஸோஷியலிஸ்டுகள், காபிடலிஸ்ட்டுகள், பல்வேறு கொள்கைகளைக் கூறுகிற பல்வேறு அரசியல்வாதிகள், சமூக சீர்திருத்தவாதிகள் என்கிற வடிவங்களில் இக்கொடுமைகளைப் பாதுகாப்பதே இவர்கள் வேலையாகவிருக்கும். இதை பாதுகாக்க இவர்கள் பயன்படுத்துவது இக்கொடுமைகள் அழிய வேண்டும் என்கிற பிரச்சாரங்கள்தான் என்பது நடைமுறை முரண்.
யார் முதலில் ஆரம்பித்தார் என்பதில்தான் இவர்கள் கவனமும் கருத்தும் இருக்கும். ஏனென்றால் வரலாறு என்பது நடந்ததாக அறியப்படுகின்ற விஷயங்கள் பற்றிய கற்பனைகளும், நடைமுறை தேவைகளை அடிப்படையாகக் கொண்ட எதிர்பார்ப்புகளுமே. அதனால் பிரச்சினைகள் முடிவடையப் போவதில்லை.
இதற்கு ஒரே மாற்று, ஒரே வழி இதை ஆரம்பித்தவர்கள் யார் என்பது பற்றிக் கவலைப்படாமல், இவற்றை முடிக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துபவர்களை போஷிப்பதுதான். மீடியாக்களும் இது போன்ற மனநிலைமை கொண்டவர்களை ப்ரபல்யப்படுத்தவேண்டும். ஷபனா ஆஸ்மி போன்ற சமுதாய நடிகைகளை அல்ல.
>>> தீவிரவாதம் எப்போதும் புரட்சிக்கான தன்மை கொண்டதல்ல. இது சுதந்திரத்திற்கு எதிரான, மனித சமுதாயத்துக்கு எதிரானது. இதை எப்படியும் நியாயப்படுத்த இயலாது. <<<<
நான் சிறிது மாறுபடுகிறேன். தீவிரவாதத்தை "அனைவரும்" விட்டுவிடுவதுதான் தீவிரவாதம் போஷணையாக வளர விடாமல் தடுக்கும். இது போன்ற சூழல் இதுவரை இருந்ததில்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை. அதனால் எந்தவிதத் தீவிரவாதமும் இல்லாமல் செய்யக்கூடிய ஒரு தீவிரவாதம், ஹிம்ஸை அவஸ்யம். இத்தகைய தீவிரவாதம் சப்போர்ட் செய்யப்படவேண்டும்.
இந்த வகை தீவிரவாதம் எல்லா விதமான கருத்தியல்களிலிருந்தும், குழு மனப்பான்மையிலிருந்தும் விடுபட்டதாகவும், விலகியதாகவுமிருக்க வேண்டும். அதி முக்கியமாக இத்தீவிரவாதம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேறு எந்த வகை மாற்றங்களையும் அழிக்கும் ஒன்றாக மாறக்கூடாது. இங்கனம் நடைபெற இத்தீவிரவாதமானது ஒரே ஒரு குழுவோடு மட்டும் தங்கிவிடாமல் அனைவருக்குள்ளும் புகுந்து விடவேண்டும்.
பெரும்பாலான ஹிந்து தெய்வங்கள் அயுதங்கள் ஏந்துவதும், போர் புரிந்ததும் (புரிவதும்) இது போன்ற ஒரு வன்முறையை ஆதரிப்பதால்தான்.
10 Comments:
தங்கள் கருத்துக்களை ஏற்கனவே படித்து பதில் அளித்திருந்த போதிலும், இந்த பதிவு மனதை கவர்ந்தது.
அற்புதமான படங்கள் நான் இதுவரை கண்டிராதவை (முகம்மது கார்ட்டூன் தவிர....) அவை பார்வைக்கு அதிர்ச்சி தருவையாக இருக்கின்றன. யார் மனதையும் புண்படுத்தாது என்று நம்புகிறேன்.
நன்றி
பி.கு : என்னை ஸ்ரீ என்று அடைமொழியிட்டு அழைப்பது என்னவோ சாமியார் மாதிரி இருக்கிறது. ஜயராமன் என்றே அழையுங்கள். நன்றி
ததாஸ்து. :-)
This comment has been removed by a blog administrator.
ciao
>>>> are some photos absolutely necessary for your post? <<<
இல்லை. அவை ஒரு வித சாய்வையும் கொடுத்து சொல்லப்படுகின்ற கருத்துக்களின் தீவிரத்தையும், நோக்கத்தையும் குறைக்கின்றன.
ஆனால் இது போன்ற படங்களை போடுவதே தவறு என்பது போன்ற ஒரு உணர்வு நம்மையுமறியாமல் ஏற்படுகிறதே. அந்த உணர்வை நமக்கு அடையாளங்காட்டவும், அந்த உணர்வு சரிதானா என நம்மை நாமே கேள்வி கேட்கவும் இவை உதவியாகவிருக்கும் என்பதால்தான் இந்த படங்களை போட்டேன்.
அடையாளங்களை அர்தத்திலிருந்து பிரிப்பது கடினம்தான். ஆனால் அவசியம்.
thank you for explaining
Muse,
எனது சமீபத்திய இடுகையில், மனிதனின் வன்முறை பற்றிய என் கவிதையைப் படித்தீர்களா?
எதார்த்தமான உண்மையான பதிவு
அன்பிற்குரிய புதுமை விரும்பி,
தங்களை நான் இத்தனை நாளாய் மிஸ் செய்துவிட்டேனே என்று வருந்துகிறேன். விரலை ஒடித்து பின் வீணை வாஸிப்பதுபோல பலர் கவிதைகள் இருக்கும்போது, தரமான கவிதைகளைத் தேடிப் பிடிப்பது என்பது கடினமான வேலையாக இதுவரை இருந்தது.
இனி இல்லை. நான் தங்களுடைய வலைப்பதிவிற்கு வந்து ஸரஸ்வதியின் வீணையிஸையைக் கேட்டுக்கொள்வேன், எப்போது வேண்டுமானாலும். தாங்கள் தொடர்ந்து கவிதைகள் படைக்க வேண்டும்.
ஹம்மா என்று அலறுகிற ஸுகம் உங்கள் கவிதை படிக்கும்போது எழுகிறது.
என்னார் அவர்களே,
தங்களது பாராட்டிற்கு மிக்க நன்றி. தங்களைப் போன்ற ஸீனியர் வலைப்பதிவர்கள் பாராட்டு ஸந்தோஷமளிக்கிறது.
Post a Comment
<< Home