Wednesday, June 21, 2006

கோயில்கள் இடிப்பை நியாயப்படுத்தும் முயற்சிகள்

ஸ்ரீ நல்லடியாரின் வலைப்பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கு (http://athusari.blogspot.com/2006/06/blog-post_115054777610832660.html) என் பதில்கள். மற்றவருடைய கேள்விகளும் கருத்துக்களும் >>>> <<<< என்ற குறியீடுகளுக்கிடையில் கொடுக்கப்பட்டுள்ளது.

நல்லடியார்,

>>>> பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டெய்லி டைம்ஸ், “லாகூர் கிருஷ்ணர் கோவில் இடிக்கப் படவில்லை" என்று பாகிஸ்தானின் சமய நடவடிக்கைகள் அமைச்சர் இஜாஸுல் ஹக் தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளது. <<<<

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீது நடந்து வரும் கொடுமைகளுக்கு நடுவில் இது போன்ற ஒரு செய்தி வருமானால் அதன் உண்மை என்னவென்று ஆராய்ந்து பார்க்கத் தோன்றாமல் போய் விடுகிறது. உண்மையை வெளிப்படுத்தியதற்கு நன்றிகள். நீங்கள் வெளியிட்டுள்ள இந்த உண்மையால் பாகிஸ்தானில் நல்ல விஷயங்களும் நடைபெறும் என்பதை அறிய முடிந்தது. இது போன்ற நல்ல விஷயங்களை வெளியிடுவதால் பாகிஸ்தான் (அது ஒரு இஸ்லாம் தேசம் என்பதாலேயே) வெறுக்கும் போக்கு மறைந்து நல்லவற்றை பாராட்டவும், அல்லாதவற்றை மட்டும் ஒறுக்கவும் வலைப்பதிவர்களுக்கு வசதியாகி விடும்.

அதே சமயத்தில் வேறொன்று.

1995 அல்லது 96ல் இந்தியா டுடே இதழானது (அப்போதைய விபி ஸிங்கின் புகழ் பாடுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தது வேறு விஷயம்) காஷ்மீரில் கோயில்கள் இடிக்கப்பட்டன என்று வெளிவந்திருந்த மற்றொரு பத்திரிக்கையின் கட்டுரையை மறுத்து கோயில்களின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. அப்புகைப்படங்களில் கோயில்கள் சிதிலமடையாமல் எப்படி இருந்தனவோ அப்படியே இருந்தன. இது போன்ற உண்மையை வெளியிட்ட இன்டியா டுடே இதழின் மேல் நன்மதிப்பும், பொய்செய்திகளை பரப்புகிறார்களே என்று மற்றொரு பத்த்ரிக்கையின் மேல் கோபமும், வேதனையும் அடைந்தேன் - அந்த மற்றொரு இதழின் அடுத்த மாத வெளியீட்டை பார்க்கும் வரை.

அப்பத்திரிக்கையின் அடுத்த மாத இதழில் இந்தியா டுடேயின் பத்திரிக்கை தர்மம் வெட்ட வெளிச்சமாயிருந்தது. இந்திய டுடே படம் பிடித்திருந்தது இடிக்கப் படாமல் (அல்லது இடிக்க விட்டுப்போயிருந்த) பகுதிகளைத்தான். அதற்குப் பின்னால் இந்தியா டுடே அது பற்றி எதுவும் பேசவில்லை.

இதே போல சமீபத்தில் குஜராத்தில் ஒரு பெண் உட்பட சிலர் சுட்டுக் கொல்லப்பட்டபோது அனைத்துப் பத்திரிக்கைகளும் குஜராத்தின் பாஸிஸ மோடியின் ஆட்ஷியின் அராஜகத்தை வெட்ட வெளிச்சமாக்கின. அப்பாவியான அந்தப் பெண்ணை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற மத வெறித்தனத்தை கண்டித்தன. ஏழ்மையான அப்பெண்ணின் குடும்பத்திற்கு பண உதவி செய்ய சமூக நல்லமைப்புகள் முன் வந்தன. அந்தப் பெண்ணோடு சுட்டுக் கொல்லப்பட்ட மற்ற அனைவரும் தீவிரவாதிகள் என்பதை இதே பத்திரிக்கைகள் லேஸாக சுட்டியிருந்தாலும் முக்கிய கவனம் அந்தப் பெண்ணினை கொன்றதே பெற்றது.

முடிவு. கடைசியில் அந்தப் பெண்ணும் தீவிரவாதி என்பது ஊர்ஜிதமாயிற்று. பத்திரிக்கைகள் அதைப் பற்றி எதுவும் சொல்லாமல் உலக அழகிப் போட்டிகள் இந்திய கலாச்சாரத்திற்கு நன்மையே தீமையா, கணவனுக்குத் தெரியாமல் இந்தியாவில் உள்ள எல்லாப் பெண்களும் "ஜாலி" செய்வதற்குக் காரணங்கள் என்ன என்பது போன்ற தேவையான விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டன. இந்த சூழ்நிலையில் ஸ்ரீ. மாயவரத்தாரை மட்டும் குறை சொல்லுவது சரியா?

>>>>>>நன்றி ம்யூஸ்,

பாகிஸ்தானில் ஏதாவது நடந்தால் அதனை ஒட்டு மொத்த இஸ்லாத்தோடும் அல்லது இந்திய முஸ்லிம்களோடும் தொடர்பு படுத்தி துவேச நெருப்பேற்றி குளிர் காய்வதில் சிலருக்கு அலாதி இன்பம். அந்த வகையில்தான் இந்தச் செய்தியை முந்திக் கொண்டு அல்லது அரைகுறையான தகவல்களுடன் வெளியிட்டுள்ள தினமலர் மற்றும் மாயவரத்தானின் அவசரம் இருக்கின்றது.

பிறமத வழிபாட்டுத்தளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்! பிற மதக் கடவுளகளை ஏசக்கூடாது என்பது குர்ஆன் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள கட்டளையாகும். இந்த அடிப்படையில் செயல்படுவததகச் சொல்லும் எந்த அரசும் இதைக் கடை பிடிக்க வேண்டும்

இந்தியாவில் இருப்பதைப்போல் பாகிஸ்தானிலும் மதவெறி பிடித்த விஷமிகள் இருக்கிறார்கள் என்பதிலும் அவர்கள் எங்கு இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.

கோவில் இடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட செய்தியை வெளியிடும் அவசரம், அது இடிக்கப்படவில்லை என்ற செய்தியையும் வெளியிட இல்லை என்பதிலிருந்து இவர்களின் எண்ணம் (திட்டமிட்ட சதி!) வெளிப்படுகின்றதுதானே? posted by நல்லடியார் : 6/19/2006 12:02 PM <<<<<<

>>>> கோவில் இடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட செய்தியை வெளியிடும் அவசரம், அது இடிக்கப்படவில்லை என்ற செய்தியையும் வெளியிட இல்லை <<<<

மாயவரத்தார் பதிவில் அவர் அப்படி சொல்லவில்லை என்று கூறுகிறார். அவர் கூற்றும் கோயிலை இடிக்கும் "அறிவிப்பைப்" பற்றியதாகவே இருக்கிறது. மேலும் அங்கு வரவிருக்கும் கடைகளைப் பற்றியும் கூறியிருக்கிறார். அந்தத் தகவலும் பொய்யானதா? இந்தத் தகவலின் உண்மையையும் வெளியிட்டால் உங்களுக்கு மிக்க வந்தனம்.

அதுவுமன்றி, கோயில்களில் கடைகள் கட்டி வியாபரத் தலமாக்குவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. அரசு நடத்தும் தமிழ்நாட்டுக் கோயில்கள் அப்படித்தானே இருக்கின்றன. (இங்கே நடக்கும் அரசிற்கும், பாகிஸ்தானிய அரசிற்கும் அதிக வித்தியாசம் இல்லை என்ற வகையில் ஒரு பொது அரசாங்கம்தான் இந்த இரு நாடுகளையும் நடத்தி வருகின்றது.) அதே சமயம் தனியார்களால் நடத்தப்படும் ஹிந்துக் கோயில்கள் அப்படி வியாபரத் தலமாக இல்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்தான்.
# posted by Muse (# 5279076) : 6/19/2006 12:21 PM

>>>> பாகிஸ்தான் லாகூர் நகரில் வணிக வளாகம் ஒன்றை கட்டுவதற்காக அங்கிருந்த கிருஷ்ணர் கோயிலை இடிக்க அரசு அனுமதித்துள்ளதாம்.

இதற்கு இது வரை நம்மூர் நடுநிலைவா(ந்)திகளிடமிருந்து ஆதரித்தோ/எதிர்த்தோ பதிவு எதுவும் வரவில்லை - மாயவரத்தான்

//மாயவரத்தார் பதிவில் அவர் அப்படி சொல்லவில்லை என்று கூறுகிறார். அவர் கூற்றும் கோயிலை இடிக்கும் "அறிவிப்பைப்" பற்றியதாகவே இருக்கிறது.//

மேலெயுள்ள வரிகள் அவரின் பதிவிலுள்ளன. பாகிஸ்தானிலுள்ள பிறமதத்தவரின் பொதுச்சொத்துக்களை பாதுக்கப்பது EPTB என்ற அமைப்பாகும். கோவிலிருந்து 300 மீட்டர் தூரமுள்ள சிறு நிலப்பகுதியில் வணிகவளாகத்திற்கு நடைபாதையை விஸ்தரிக்க வேண்டி செய்து கொண்ட ஒப்பந்தப்படியே கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவ்விசயத்தில் எதற்கு நடுநிலையாளர்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்?

பாபர் மசூதியை இடிக்க முன்நின்று, இடிக்கப்பட்டதும் கூடியிருந்த பெண் துறவியை (!?) கட்டிப்பிடித்து சந்தோசத்தை பகிர்ந்து கொண்டு விட்டு, பின்னர் நீதிமன்ற வழக்கிலிருந்து தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தப்பித்த அத்வானிஜி, இடிக்கப்படாத கிருஷ்ணர் கோவிலுக்காக கண்டணம் தெரிவிப்பதுதான் "அப்பன் குதிருக்குள் இல்லை" என்பதுபோல் இருக்கிறது.
# posted by நல்லடியார் : 6/19/2006 2:18 PM <<<<<<<

>>>>>>>ராம பக்தியை பற்றி இறைநேசன் நீட்டி முழக்கி கதைத்து நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

இறைவன் எங்கும் நிறைந்தவன். அவனை உலோகத்தில் படைத்து அழகு பார்ப்பதும் ஒன்றுதான், அவனை உறுக்கினால் ராம்பக்தி இல்லாமல் போய்விடுமா? அதற்காக அத்வானி இராம்பக்தர் என்று சொல்லவில்லை.

உருவ வழிபாட்டாளர்கள் காட்டுமிராண்டிகள். அவர்கள் சிலைகளும் கோவில்களும் தகர்க்கப்பட வேண்டும் என்று உங்கள் குரான் சொல்லுகிறதா இல்லையா? நேரிடையாக பதில் சொல்லவும். ஏனென்றால், இவ்வாறு சொல்லிதான் பாமியான் புத்த கருவூலங்களை தலிபான்கள் சிதைத்தார்கள்.

இப்போது என்னவோ சமரச வேடம் போட்டு பசப்புகிறார்கள், இந்த துலுக்கர்கள்.

இவர்கள் சமரச வேடம் போடவேண்டுமானால், இவர்கள் குரானை மீற வேண்டும்.

இதுதான் இவர்களுக்கு இருக்கும் இக்கட்டு.

எத்தனை சந்தனத்தில் மூழ்கினாலும் காட்டுக்கள்ளி மணக்குமா என்ன, அது எப்போதும் விஷம்தான். ஆனால், அந்த விஷத்தை நான் மறைத்துவிட்டேன், நல்ல வேஷம் போடுகிறேன் என்று வேணால் இந்த துலுக்கர்கள் சொல்லிக்கொள்ளலாம்.

நன்றி
# posted by jothi : 6/19/2006 11:11 AM <<<<<<<

ஜோதி,

>>>இப்போது என்னவோ சமரச வேடம் போட்டு பசப்புகிறார்கள், இந்த துலுக்கர்கள்.<<<

மொன்னையாக குற்றம் சொல்லாதீர்கள் ஜோதி. தங்களது குற்றச்சாட்டிற்கானக் காரணங்களை முன்வையுங்கள். "துலுக்கர்கள்" என்பது போன்ற வார்த்தை ப்ரயோகங்கள் எல்லாம் மட்டமான வார்த்தைகள்.

>>>> இவர்கள் சமரச வேடம் போடவேண்டுமானால், இவர்கள் குரானை மீற வேண்டும். <<<<

அவசியமில்லை என்று தோன்றுகிறது. அதே குரானில் மற்றவர்களை மதிக்க வேண்டும் என்கிறமாதிரிக் கருத்துக்களும் உள்ளன. எந்த மாதிரி கருத்துக்கள் பின்பற்றப்படுகின்றன என்பது அம்மதத்தில் எந்த மாதிரித் தலைவர்கள் வருகின்றனர் என்பதைப் பொறுத்தது.

பெரும்பாலும் மற்ற மதத்தினரை மதித்த இஸ்லாம் மதத் தலைவர்கள் அதிகம் வரவில்லை என்பதும் உண்மையே. நீங்கள் அதைப் பற்றிப் பேசியிருக்கலாம்.
# posted by Muse (# 5279076) : 6/19/2006 12:12 PM

நல்லடியாரே,

>>> பெரும்பான்மையாக இருந்தவர்களால் அந்நிய கொள்ளைக் கூட்டத்தை தடுத்து விரட்டியிருக்க முடியாதா? <<<<

அப்போதும் முடியவில்லை. ஒற்றுமை இன்மையே காரணம்.

பி.கு. நான் ஜோதி அவர்களின் மறுமொழியைக் கண்டித்து தங்கள் பதிவில் பதிந்தது கிடைத்ததா?
# posted by Muse (# 5279076) : 6/20/2006 1:27 PM

நல்லடியார்,

>>>> மதசார்பற்ற இந்தியா ஏனய்யா பிருத்விராஜன் பெயரைச் சூட்டியது? <<<

ஏவுகணையின் பெயர் "ப்ருத்விராஜன்" இல்லை. அதன் பெயர் "ப்ருத்வி".

"ப்ருத்வி" என்றால் பூமி என்று பொருள். இந்தியா தயாரித்த ஏவுகணைகளுக்கு பஞ்ச பூதங்களின் பெயர்களான அக்னி, ப்ருத்வி என்ற பெயர்களை வைத்தது.

>>>> ஏவுகணையில் கூட மதவெறியைத் திணித்த பெருமை நம்நாட்டு இந்துத்துவ சிந்தனை கொண்டவர்களால் தான் எழுந்தது. <<<<

"பூமி" என்பதுதான் பொருளாக இருக்கும்போது இதில் ஹிந்துத்துவம் எங்கு வந்தது?


>>>> இந்தியாவின் ‘பிருத்வி’ ஏவுகனைக்குப் போட்டியாக பாகிஸ்தான் பிருத்விராஜுடன் போரிட்ட ‘கோரி’ பெயரை ஏவுகனைக்குச் சூட்டியுள்ளது.

நீங்களே கூறி விட்டீர்கள், கோரி என்ற பெயர் போட்டிக்கு இடப்பட்டது என்று. இப்போது சொல்லுங்கள், எந்த நாட்டிற்கு மத வெறி அதிகம்?

தங்களது வாதங்களைப் படிக்கும்போது இந்திய அரசாங்கத்திற்கு எதிராக பாகிஸ்தான் செய்பவற்றை நியாயப்படுத்தும் போக்கு உள்ளதாகப் படிப்பவர்களுக்குத் தோன்றக் கூடும். அந்த பிம்பமானது ஏற்கனவேயுள்ள "இஸ்லாமியர்கள் பாகிஸ்தானிய ஆதரவாளர்கள்" என்ற பிம்பத்திற்கு வலு சேர்த்துவிடக் கூடும்.

>>>> இதற்கிடையில் பேரழிவு ஆயுதங்களுக்கு ‘கோரி’ பெயர் வைக்கக்கூடாது என்று ஆப்கானிஸ்தான் எதிர்ப்புத் தெரிவித்தைச் சொன்னால், சமுத்திரா போன்ற நியாயவான்கள் நான் தாலிபான்களுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்பார்கள் <<<<

இதுபோன்ற விஷயங்களை முன்வைப்பது "இஸ்லாமியர்கள் பாகிஸ்தானிய ஆதரவாளர்கள்" என்ற பிம்பத்தின் வலுவை இழக்கச் செய்யும். இதைப்பற்றி தாங்கள் கட்டாயம் பேசவேண்டும். அங்கனம் விளக்கும்போது ‘கோரி’ பெயர் வைக்கக்கூடாது என்று கூறியவர்கள் தலிபான்கள் இல்லை என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.
# posted by Muse (# 5279076) : 6/20/2006 5:09 PM

நல்லடியார்,

>>>> ஒரு பக்கம் சிலவடிவிலிருக்கும் அவரின் தெய்வங்களை மதிக்காமல், இன்னொரு பக்கம் அவற்றிற்காக போராடுவதாகக்கட்டிக் கொள்வது கடைந்தெடுத்த அரசியல்தானே? <<<<

அதை போன்ற இன்னொரு ஜோக் அவரது ஸுதேஸி ப்ரச்சார யாத்திரை. இந்தியப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்ற அவர் பிரச்சாரம் செய்யப் பயன்படுத்தியது வெளிநாட்டுக் கம்பனியின் கார்.
# posted by Muse (# 5279076) : 6/19/2006 12:24 PM

>>>>>>> //இஸ்லாமுக்கும் கோவில் இடிப்புக்கும் நிறைய சம்பந்தம் உள்ளது.//

இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்:

1089-1101 AD: King Harsha of Kashmir of the first Lohara dynasty indulged in ruthlessly looting the treasures of the temples of Bhimasai and also systematically confiscated and defiled the metallic statues of Gods by outcasts throughout the Kashmir valley in order to obtain the valuable material. He even imposed tax on the night soil.

(Ref. Kalhana, Rajataran-gini, Vol. 1, sec. 5, Motilal Banarsidas, page 113)

• 642 AD: Pallava king Narasimhavarman I looted the image of Ganesha from the Chalukyan capital of Vatapi (present day Badami in Belgaum dist.)

• 692 AD: Chalukyas invaded North India and brought back to the Deccan what would appear to be images of Ganga and Yamuna looted from defeated powers.

• 8th century AD: Bengali troops sought revenge on King Lalithaditya’s kingdom in Kashmir by destroying what they thought was an image of Vaikunta the state deity of Kashmir kingdom.

• 9th century AD: Rashtrakuta king Govinda III invaded and occupied Kanchipuram which so intimidated the King of Sri Lanka that he sent Govinda (probably Buddhist) images representing the Sinhala state.

• Rashtrakuta king Indira III not only destroyed the temple of Kalapriya at Kalpa near the Jamuna river, patronized by their deadly enemies, the Pratiharas, but they took special delight in recording the fact.

• 9th century AD: Pandyan King Srimara Srivallabha also invaded Sri Lanka and took back to his capital golden Buddha image.

• Early 10th century, Pratihara King, Hermabapala, seized solid gold image of Vishnu Vaikunta when he defeated the Sahi kings of Kangra (Himachal Pradesh)

• Early 11th century: Chola King, Rajendra I furnished his capital with images he seized from several prominent neighbouring kings: Durga and Ganesha images from the Chalukyas, Bhairava, Bhairavi and Kali images from the Kalingas or Orissa as Nandi image from the Eastern Chalukyans.


(Ref: David Gilmartin and Bruce B. Lawrence (ed.), Beyond Hindu and Turk, University Press of Florida, 2000.
# posted by நல்லடியார் : 6/20/2006 4:44 PM <<<<<<

நல்லடியார்,


கோயில்கள் இடிப்பு, விக்கிரக நிந்தனை பற்றி நீங்கள் அளித்திருந்த லிஸ்ட்டில் இரண்டு நிகழ்வுகளைத்தவிர மற்ற அனைத்தும் விக்கிரகங்களை வேறொரு இடத்திலிருந்து கொண்டுவந்து தன்னுடைய நாட்டிலுள்ள கோயில்களில் ப்ரதிஷ்டை செய்தது பற்றியதே. இதனால் தெய்வத்தின் புனிதமானது எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

கோயில்கள் இடிப்பு, விக்கிரக நிந்தனை நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவங்கள் பற்றி ஒரு முடிவுக்குவர முழு உண்மையும் தேவைப்படுகிறது. இருந்த போதிலும் இச்செயல்கள் ஹிந்துமதப் போதனைகளுக்கு எதிராக நடந்தனவேயன்றி ஒத்துப் போனவயில்லை. இதுபோன்ற சம்பவங்கள் ஹிந்து மதத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்திருந்தாலும், அவை பரவாமலிருந்ததற்குக் காரணம் இது போன்ற செயல்கள் ஹிந்து மதத்திற்கு எதிரானவை என்பதாலேயே. ஆனால், இஸ்லாம் பற்றி இங்கனம் கூறமுடியாது.

ஒரு இஸ்லாமிய அரசர், மற்றொரு இஸ்லாமிய அரசரினால் கட்டப்பட்ட மஸூதியை உடைப்பது வழக்கமே. அதுவுமன்றி இஸ்லாமிய ஸ்தலங்களல்லாத மற்ற மதத் தெய்வங்களின் விக்கிரகங்களையும், கோயில்களையும் இழிவு செய்வதும் இஸ்லாமிய மதத்தாலேயே பாராட்டப்பட்ட செயல்கள்தான்.

நீங்கள் கூறியிருந்த விஷயங்கள் உண்மையானவையானாலும் அதை ஹிந்து மதம் கண்டிக்கிறது. இதுபோன்ற செயல்கள் ஹிந்துக்கள் கேள்வியேபடாதவை. இது போன்ற கேள்வியே படாத விஷயங்களை முன்வைத்து இது போன்ற செயல்களை நியாயப்படுத்தும் தங்களது முயற்சி இதுபோன்ற கீழ்த்தர செயல்களை நீங்களும், தாங்கள் மதமும் பெருமையாகப் பார்க்கிறது என்பதை உறுதி செய்வதாகவே அமைகிறது.

இதுபோன்று ஒரு செயலை ஒரு காஷ்மீர அரசன் செய்தான் என்ற குற்றச்சாட்டிற்குத் திண்ணையில் ஸ்ரீ. அரவிந்தன் நீலகண்டன் முழு விளக்கம் அளித்திருந்தார். இதற்குக் காரணம் அந்த அரசன் முஸ்லீம்களை திருப்திப்படுத்த விரும்பினான் என்ற உண்மையை அவர் வெளியிட்டிருந்தார். காசு பணத்திற்காகவும், வேறு சில கீழ்த்தரமான இன்பங்களுக்காகவும் அந்தக் காலம் முதல் தற்காலம்வரை இந்தியாவில் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். தற்காலத்தில் அவர்களுக்கு திம்மித்துவவாதிகள் என்று பெயர்.

Monday, June 19, 2006

கல்கிதான் முகமது

ஸ்ரீ ஷங்கர நாராயணணின் வலைப்பதிவில் கேட்டிருந்த கேள்விக்கு (http://sankarmanicka.blogspot.com/2006/06/blog-post_11.html) என் பதில். மற்றவருடைய கேள்விகளும் கருத்துக்களும் >>>> <<<< என்ற குறியீடுகளுக்கிடையில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஷங்கர்,


>>>> புத்தர் கூட விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று <<<<

"மதம்" என்னும் வார்த்தை பற்றி பெரும்பாலோனோர் செய்யும் தவறான புரிதலைத்தான் நீங்களும் செய்திருக்கிறீர்கள். இதை இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில்தான் புரிந்து கொள்ளவேண்டும். ஆபிரகாமிய மதங்களின் அடிப்படயிலல்ல. இங்கே மதம் என்பது ஒரு பிரிவு, உண்மையைத் தேடும் ஒரு வழிமுறை. இயற்பியலுக்கு வேதியியல் போல. எதிரான, அழிக்கப்படவேண்டிய குழுவல்ல.

சித்தார்த்தர் ஒரு ஹிந்து. அவர் திருத்திய மக்களும் ஹிந்துக்களே. அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் அது ஒரு தனி மதமாகிவிட்டது. சைவ மதம், வைஷ்ணவ மதம், ஸௌர மதங்கள் போல அதுவும் ஒரு மதம். தங்களோடு பிறந்த ஒரு ஞானியை விஷ்ணுவாக வழிபடுவது ஒரு இயல்பான விஷயம்.

இந்த நிகழுவுக்கு எதிரிடையான விஷயத்தையும் ஹிந்துக்களால் ஏற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக அங்கோர்வாட் கோவில் (உலகிலேயே மிகப்பெரிய ஹிந்து கோயில்) ஹிந்து அரசர்களால் கட்டப்பட்டது. புத்த மதம் பரவியபோது விஷ்ணு, சிவ விக்கிரகங்களோடு புத்தருடைய விக்கிரகங்களும் வழிபடப்பட்டன. ஒன்றை ஒன்று காம்ப்ளிமென்ட்தான் செய்துகொண்டன. இதன் விளைவு மதங்களுக்கு இடையே எந்தவிதமான திட்டவட்ட இடைவெளியும் இல்லாமல் போனது. இது இந்த நிலத்தில் இதுவரை இருந்துவரும் மதங்கள் அனைத்திற்கும் (ஆபிரகாமிய மதங்களைத் தவிர்த்து) பொருந்தும். விளைவு. தந்தை துர்க்கையின் உபாஸகர். தாய் புத்தமத நெறியாளர். பிள்ளை வீர சைவன்.

இந்த சூழ்நிலை இல்லாத, அல்லது வேறு மதங்கள் அதிகம் இல்லாத இடங்களுக்குப் பரவிய புத்த மதம் அங்கே தன்னுடைய திட்டவட்ட எல்லையை உறுதியாக நிலை நிறுத்திக் கொண்டது. அதனாலேயே, புத்த மதம் இந்தியாவில் அழிந்துவிட்டது என்றும், மற்ற நாடுகளில் மட்டும் அது வாழ்வது போன்றதுமான தோற்றம். உண்மையில் தற்காலத்தில் ஹிந்து மதங்கள் பின்பற்றிவரும் பல வழிபாட்டு முறைகள், சடங்குகள், நம்பிக்கைகள் எல்லாம் புத்த, ஜைன மதப் பழக்கங்களே (உதாரணமாக விக்கிரக வழிபாடு).

>>>> கல்கி தான் முகமது என சொல்லுபவர்கள் கல்கி கோயிலுக்கு போக தயாரா<<<<

நல்ல கேள்வி. ஷிர்டி பாபா அல்லாவின் புகழை ஓதியவர்தான். ஆனால் அவரை மரியாதை செய்பவர்கள் ஹிந்துக்கள் மட்டும்தான்.

வேறொன்றும் ஞாபகம் வருகிறது.

இந்திய தொலைக்காட்சிகளில் தரமான ப்ரோக்ராம் கொடுப்பது தூர்தர்ஷன் என்பதால் அதை விரும்பி பார்ப்பதுண்டு. தூர்தர்ஷனில் (பொதிகை) இரவு 11.30 மணியளவில் தொடராக வரும் ஒரு ப்ரோக்ராமை பல நாட்களுக்கு முன்னால் பார்த்தேன். அந்த ப்ரோக்ராமின் பெயர் மத நல்லிணக்கம். அந்த கலந்துரையாடலை நடத்துபவர் ஒரு முஸ்லீம். அடடே மத நல்லிணக்கம் பற்றி ஒரு இஸ்லாமியர் வெளிப்படையாக பேசுகிறாரே, பார்க்கலாம் என்று முடிவு செய்து பார்க்க ஆரம்பித்தேன். விருந்தினர் ஒரு புத்த மதத் துறவியார். அவருடைய பேச்சிலிருந்தே ஸம்ஸ்க்ருத, பாலி மொழிகளில் புலமை வாய்ந்தவர் என்பதும், நன்கு கற்றறிந்தவர் என்பதும் தெரிந்தது. அப்போது அந்த பேட்டியாளர் கேட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும் (என் நினைவிலிருந்து):

புத்த மதத்தில் சித்தார்த்த புத்தருக்குப் பின் போதிசத்துவர் தோன்றுவார் என்றும் அவர் மக்களை வழிநடத்துவார் என்ற கருத்து உள்ளதே?

ஆம்.

இதை நீங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் பார்க்கிறீர்களா, அல்லது வரலாற்றின் அடிப்படையிலிருந்து பார்க்கிறீர்களா?

ஒரு விஷயம் நம்பிக்கையா, வரலாறா என்பது பற்றி ஆராய்வதைவிட அது புத்த மத வழிகாட்டலின்படியான ஆன்மீக அனுபவங்களுக்கு எந்த அளவு பொருந்தியிருக்கிறது என்றே என்போன்றவர்கள் பார்க்க வேண்டும். அப்படியே நாங்கள் பார்க்கிறோம்.

ஆ ஆ, சரி. ஆனா இந்த போதிசத்துவர் இருக்காருல்ல. இவர் வந்து ஆசியாவில்தான் தோன்றுவார் என்று கூறப்படுகிறதே. அது பற்றிய தங்கள் கருத்து என்ன?

ஆசியா என்று கூறுவதைவிட, பரத கண்டத்தில் தோன்றுவார் என்பதே நம்பிக்கை.

பரத கண்டம். ஆங்க். பரத கண்டம். அதாவது பாரத நாட்டுக்கு பக்கத்தில் இருக்கக் கூடிய ஆசிய கண்டத்தை சேர்ந்த நாட்டில் தோன்றுவார் என்கிறீர்கள்.

(துறவி தாம்தான் ஏதேனும் தவறுதலாகக் கூறிவிட்டோமோ என்ற குழப்பமான பாவனை சிந்தும் முகத்துடன்) இல்லையே. பரத கண்டம் என்றுதான் கூறியிருக்கிறது.

ஆஆங்க். அதைத்தான் நானும் சொல்லுகிறேன். அதாவது பரத கண்டம் என்பது இந்தியாவிலிருந்து, அரேபிய கண்டம்வரை பரந்திருக்கும் இடந்தானே. அங்கே ஒரு இறைத் தூதர் வந்து மக்களை வழி நடத்துவதை நாம் அறிவோமே. அவரையே போதிசத்துவர் என்று புனித நூல்கள் குறிப்பிடுகின்றன. அப்படித்தானே?

(கேள்வியின் போக்கை புரிந்து கொட்டுவிட்ட துறவிக்கு சிரிப்பு வந்து விடுகிறது. கூடவே இந்த இடத்தில் வந்து மாட்டிக் கொண்டு விட்டொமே என்கிற சங்கடமும்) இல்லை ஐயா. பரத கண்டம் என்பது அக்காலத்தில் நாவலந் தீவு என்று அழைக்கப்பட்டது. அதாவது நாவல் மரங்கள் எங்கெல்லாம் விளைகிறதோ அதுவரை இருப்பது பரத கண்டம். எனவே அந்த வகையில் பரத கண்டம் என்று அழைக்கப்படும் நிலத்தில் போதிசத்துவர் தோன்றுவார் என்கிற நம்பிக்கையை பௌத்தர்கள் மனத்தில் கொண்டிருக்கிறார்கள்.

பேட்டியாளர் எதோ முணு முணுக்கிறார். பின்னர், அதாவதுங்க அரேபியவிலயும் இந்த பேரிச்சை மாதிரியான மரங்கள் எல்லாம் வளருதுங்க. அப்ப ஒரு காலத்தில அங்கே நாவல் மரம் மட்டும் இருந்திருக்காதுன்னு சொல்ல முடியுங்களா? இந்த தீர்க்கதரிசனம் சொல்லப்பட்ட காலத்தில அங்க நாவல் மரம் இருந்திருக்கலாமே?

(துறவியின் முகம் பேஸ்த் அடித்தாற்போல் எனக்குத் தோன்றியது.)

நாம் நமது பெரியோர்கள் கண்டுணர்ந்ததுபற்றி மட்டும்தானே சொல்ல முடியும்.

இதற்குப் பின்னால் துறவியின் பதில்கள் பெரும்பாலும், அப்படியா (5 முறை), நீங்கள் கூறுவது புதுமையாக இருக்கிறது (2 முறை), புத்த மதக் கருத்துக்கள் இப்படி சொல்லுவதாக எனக்குத் தெரியவில்லை (8 முறை) என்கிற வகையில் அமைந்தன. மற்ற கேள்விகளுக்கெல்லாம் ஆஹாம், அடடே, ம் ம், என்கிற வகையில் பதில்கள்.

இதற்கிடையில் என் மருமாள் தூக்கத்திலிருந்து எழுந்து, மாமா! எப்பப் பாத்தாலும் ஒரே ஹீரோ, அந்த ஹீரோவுக்கு ஒரே ஒரு ஃப்ரெண்ட், அவங்க சொன்ன பேச்சை கேட்டு மக்கள் அரக்கர்களை கொல்றா, இத விட்டா சொல்றதுக்கு வேற கதையே ஓங்ககிட்ட இல்லையா. வேற கதை சொல்லுங்கோ மாமா என்றாள். குழந்தைகளுக்குகூட ஒரே மாதிரியான கதைகள் போரடித்துவிடுகின்றன.

அந்த ப்ரோக்ராம் பார்த்த விளைவில் "பேசாமல் போய் தூங்கிறியா. இல்லைன்ன ஒன்னை ரெண்டு கண்ணண் பிடிச்சிண்டு போய்டுவான்" என்று சொன்னேன்.

(அந்த ப்ரோக்ராமை முடிந்தால் பாருங்கள். மத நல்லிணக்கத்திற்காக நடந்துவரும் அந்த ப்ரோக்ராமை தயாரித்த, ஒளிபரப்பிய, தொகுத்த, வாகனமோட்டிய, லைட்பாய் - அனைவருடைய பெயரையும் அந்த ப்ரோக்ராம் முடிவில் காட்டுவார்கள். எல்லாருமே முஸ்லீம்கள், முஸ்லீம்கள், முஸ்லீம்கள் மட்டுமே. யா அல்லாஹ். நல்ல மதநல்லிணக்கம்!)

Friday, June 02, 2006

ஹிந்து மதம் - சில குற்றச்சாட்டுக்கள்

ஸ்ரீ ஷங்கர நாராயணணின் வலைப்பதிவில் போனாபர்ட் கேட்டிருந்த கேள்விகளுக்கு (http://sankarmanicka.blogspot.com/2006/05/blog-post_114821496380658358.html) என் பதில்கள். மற்றவருடைய கேள்விகளும் கருத்துக்களும் >>>> <<<< என்ற குறியீடுகளுக்கிடையில் கொடுக்கப்பட்டுள்ளது.

போனபார்ட் என்ற பெயரில் எழுதும் ஹிந்து நண்பரே,

>>>> சரி இந்து மதத்தின் பிரச்சனைகளாக என்ன உள்ளன? <<<

>>>> - உதாரணத்திற்க்கு ராமேஸ்வரம் கோயிலில் - இங்கு பிராமணர்களை தவிர பிறருக்கு அனுமதி இல்லை என்ற போர்டு தொங்கும் அவமானச் சின்னம்.<<<<

கர்ப்ப க்ரஹத்தின் முன்னால் பர்த்திருப்பீர்கள். அங்கே பூசாரிகளுக்கு மட்டும்தான் அனுமதி. வேறு யாருக்கும் அவர் எந்த உயர் ஜாதியை சார்ந்தவராகவிருப்பினும் அனுமதி கிடையாது.

இதுவும் தென்னிந்தியாவில் மட்டும்தான். இங்கு தெய்வங்கள் அணிந்திருக்கும் நகைகள் விலைமதிக்க முடியாதவை. வட இந்தியாவில் எல்லாரும் கர்ப்ப க்ருஹம்வரை சென்று தெய்வத்தை வணங்கலாம். கட்டியணைக்கவும் செய்யலாம்.

சில ஹிந்து கோயில்களில் பிற மதத்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அனுமதி இல்லை என்று போர்டுகள் தொங்குகிறது. இதற்கு காரணம் அந்த கோயிலை, தெய்வத்தை அவமானப் படுத்திவிடக் கூடாது என்ற காரணம்தான். பிற மதத்தவர்கள் அங்கனம் செய்யமாட்டேன் என்று எழுதி கொடுத்தால் அவர்களும் மற்றவர்களோடு அனுமதிக்கப்படுவார்கள். இவையெல்லாம் தற்கால சட்டங்களின் அடிப்படையில் எழுந்தது. நடைமுறையில் பிற மதத்தவர்கள் இந்த போர்டுகளை அலட்சியம் செய்துவிட்டு உள்ளே சுற்றி பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். நானே மதுரை மீனாக்ஷி அம்மனின் கோயிலில் பலமுறை பார்த்திருக்கிறேன். உதாரணத்திற்கு நான் பார்த்தவைகளில் ஒன்று. ஒரு கிருத்துவ பெண் துறவி (ஸிஸ்டர் என அழைக்கிறோமே அவர்) பள்ளியில் பயிலும் பெண்களை (சுமார் 50, 60 பேர்) அழைத்துக்கொண்டு "மற்ற மதத்தவருக்கு" தடை செய்யப்பட்ட பகுதிக்குள் புகுந்து சுற்றி வந்தார். அங்கிருக்கும் சிற்பங்களை பார்ப்பதற்காக இல்லை. அவர் அந்த உருவ பொம்மைகளையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர் முகத்தில் அந்த போர்டை ஏளனம் செய்துவிட்ட த்ருப்திதான் தெரிந்தது. அந்த குழுவில் இருந்த ஒரு பெண் "கோயிலுக்குள் சென்று அம்மனை பார்த்துவிடலாம்" என்று சொன்னதற்கு அவருடைய தோழி "வேண்டாம் ஸிஸ்டர் திட்டுவாங்க" என்று கூறி விட்டாள். ஏறத்தாழ 50, 60 பெண்கள். ஹிந்து பெண்கள் தன் மாத விலக்கு நாட்களில் கோயிலுக்கு வருவதில்லை. இந்த பெண்களில் ஏதேனும் ஒரு பெண் இந்த காரணத்திற்காக வர மறுத்திருந்தால், ஸிஸ்டர் திட்டியே கொன்றிருப்பார்கள்.

மேலும் எல்லா பார்ப்பனர்களும் பூஜாரிகளாவதில்லை. ஸ்மார்த்த பிராமணர்களில் பட்டர், முக்காணியர் என்கிற இரு பிரிவுகளை சேர்ந்தோர் மட்டுமே பூஜாரிகளாகின்றனர்.

மற்ற பார்ப்பனர்கள் பூஜாரிகளாக இருக்கும் கோயில்களும் உண்டு. அது போன்ற கோயில்களில் யார் வேண்டுமானாலும் பூஜாரி ஆகலாம். இது நடைமுறை.

அதுமட்டுமல்ல. தமிழகத்திலுள்ள சில பழம் பெருமை வாய்ந்த கோயில்களில் ஸிவாச்சாரியார்கள் மட்டுமே பூஜாரிகளாக முடியும். இவர்கள் பார்ப்பனர்கள் இல்லை. பூமி உள்ளளவும் இவர்களே பூஜை செய்ய வேண்டுமென்பது விதி. இங்கே பார்ப்பனர்கள் பூஜை செய்ய முடியாது.

>>> தமிழில் குடமுழுக்கு செய்தால் தீட்டு.<<<

எல்லாக் கோயில்களிலுமா?

எங்கெல்லாம் நெடுங்காலமாக ஸம்ஸ்க்ருத பாஷையில் வழிபாடு நடக்கிறதோ அங்கே எதிர்ப்பு இருந்திருக்கலாம்.

தமிழில் வழிபாடு நடந்து வரும் இடத்தில் ஸம்ஸ்க்ருதத்திலும், ஸம்ஸ்க்ருத வழிபாடு நடக்குமிடத்தில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்பதும் வழிபடாத, குழப்பம் மட்டுமே விளைவிக்க வேண்டும் என்கிற நோக்கத்திலிருந்தும் எழுவது. அந்த நோக்கம் தெரியாமல் அதை நீங்கள் ஆதரித்தாலும் விளைவு குழப்பம்தான்.

மற்றபடி மற்ற மதங்களோடு ஒப்பிடும்போது ஹிந்து சமூகத்தில் அதன் ஜாதிக் கொடுமைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அது உண்மையில் விசாலமான, நெகிழ்வுத் தன்மை கொண்ட சமூகம் (உண்மையில் ஹிந்து மதம் என்பதைவிட ஹிந்து மதங்கள் என்றுதான் கூறவேண்டும்). இந்த ஜாதி வேறுபாட்டினையும் களைந்துவிட்டு முன்னேற ஹிந்து மதம் முயன்றுகொண்டிருக்கிறது. இதற்குத் தடையாகவிருப்பது இந்த மதத்திலுள்ள சில அழுகிய பழங்களும், ஹிந்து மதத்தினை அழிக்கத் துடிக்கும் திம்மித்துவவாதிகளும்தான்.

இவர்களுடைய செயல்பாடு ஒருமுறை தன்னை காப்பாற்றிக் கொள்ள திருடிய, அதைத் தொடர்ந்து செய்ய விரும்பாத ஒருவரின்மேல் போலீஸ் பணத்திற்காக கேஸ் போடுவதும், சிறையில் அடைப்பதும், அவரை தூக்கில் போடத் துடிப்பதையும் ஒத்தது. ஏனெனில் திருடர்கள் இருந்தால்தானே இவர்களுக்கு பிழைப்பு நடக்கும். நல்லவர்கள் உள்ள ஊரில் போலீஸுக்கு என்ன வேலை? திம்மித்துவவாதிகளுக்கும், மதமாற்றிகளுக்கும் வயிறு, குடும்பம், வசதிகள் மேல் ஆசை உண்டே. திருடர்கள் இல்லாவிட்டல்கூட உருவாக்குவார்கள்.

>>> நாட்டார் தெய்வங்களை பார்ப்பனமாயமாக்கி மக்களிடமிருந்து பிரித்து. பூசாரி ஒருவரை நியமித்தல், பலியிடுவதை தடுப்பது. மீறி பலியிட்டால் தீட்டு கழிக்க யாகம்.<<<

பொய்யான, அரைகுறை உண்மைகளால் கட்டமைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதியுள்ளீர்கள். பார்ப்பனர்கள், நாட்டார் தெய்வங்கள் என்று திம்மித்துவவாதிகளால் கண்டுபிடிக்கப்பட்ட தெய்வங்களை வழிபடவேயில்லை என்பது பெரிய பொய். எங்கள் மாப்பிள்ளை வீட்டினரின் குலதெய்வம் கருப்பண சாமி. பூஜாரி பார்ப்பனரில்லை.

தீட்டு கழிக்க யாகம் நடத்துகிறார்கள் என்பதெல்லாம் கிருத்துவ மிஷனரிகளிடம் பிச்சை பணம் பெற சிலர் பரப்பிவரும் கதைகள்.

>>> பசு மாட்டுக்காக தோலுரிக்கப்பட்ட தலித்துகள்.<<<

இதை செய்தது பார்ப்பனர்களில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இந்த காரணம் ஒரு சால்ஜாப்புத்தான். இது சமூகப் பொருளாதார மாற்றங்களை விரும்பாத பிற்போக்குவாத மக்களால் செய்யப்படுகிறது. தலித்துகளை தோலுரித்த இவர்கள் தினமும் கோமாதா பூஜை செய்பவர்களோ, பால் கறக்காத பசுவை அடிமாடாக விற்காதவர்களோ இல்லை. மாட்டுக்கறியும் சாப்பிட்டிருக்கலாம்.

>>>> ஊத்தைவாயன், காமக் கேடி பீடையாதிபதி சங்கரனின் ஆசிரம்த்தில் பிற சாதியினருக்கு தனி பந்திகள். <<<<

1. அப்படி அவமானப்படுத்தப்படும்போது அங்கே போவானேன்?

2. ஷங்கர மடம் பார்ப்பனர்களின் மடம் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. அதுபோலவே தமிழக அதீனங்களில் பார்ப்பனர்கள் பீடாதிபதியாக முடியாது. வேளாள ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே ஆக முடியும். கேரளத்தில் உயர்ஜாதி வெறியை எதிர்த்து தெய்வ மனிதர் நாராயண குரு ஏற்படுத்திய மடத்தில் இதுவரை ஈழவர்களே மடாதிபதிகள். ஒவ்வொரு மடமும் அதனை பாதுகாத்து வரும், அதற்காக பல தியாகங்களை செய்துவரும், உழைத்துவரும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் கைகளில் இருப்பது நியாயமானதுதான். நடைமுறையில் எதிர்பார்க்கக் கூடியதுதான். தி.கவின் தலமைப் பதவியை பார்ப்பன சங்கத் தலைவர் பெற வேண்டும் என்பது போன்றதே இவ்வகை வாதங்களும். இந்த மாதிரி இல்லாஜிக்கலான வாதங்கள் எழத்தான் செய்கின்றன. சொந்தபுத்தியுள்ளவர்கள் இவற்றில் மாட்டிக்கொள்வதில்லை.

3. ஷங்கராச்சாரியாரை கேடி, ஊத்தைவாயன் என்பதும், குளியல் முதலான சுத்திகரிப்பு விஷயங்களின் மேல் வெளிப்படையாகவே வெறுப்புக் காட்டிய ராமஸாமி நாயக்கரை அதற்காக ஏளனமாகத் திட்டுவதோ அவர்கள் செய்த நல்ல காரியங்களை எள்ளளவும் குறைத்துவிடப் போவதில்லை.