Saturday, April 21, 2007

ஆறு: கோவி கண்ணனுக்காக

கோவி கண்ணன் ஆறு பற்றி எழுத வேண்டுகோள் விடுத்தபோது ஒத்துக்கொண்டேன். அது எழுதிவிட்டே வேறு பதிவுகள் என்று சொல்லியிருந்தேன்.

கல் கண்டபோது நாய் காணவில்லை. நாய் கண்டபோது கல் காணவில்லை. அதனால், இதுவரை எழுதவில்லை.

ஓடிவிட்ட காலத்தில் காத்துக்கொள்ள முடிந்ததெல்லாம் வேறு பதிவுகள் எழுத முடியாத நிலைதான். அது ப்ளாக்கர் உலகில் இருந்து இந்த ம்யூஸ் விலகுவது என்கிற முடிவுவரை நீடிக்கிறது.

பதிவுகளிலிருந்தே விலகுவது என முடிவு செய்துவிட்டு அதற்கான காரணங்களையும், அந்த முடிவையும் அறிவிக்கும் பதிவை வெளியிடப் போகிறேன். அது அடுத்த பதிவு. கடைசி பதிவு.

அதை வெளியிடும் முன்பாகவாவது என் உறுதிமொழியை நிறைவேற்ற இந்தப் பதிவு: குறைந்த பக்ஷம் தலைப்பிலாவது ஆறு.


நடந்துவருகின்ற விஷயங்களைப் பார்க்கும்போது தலைப்பில் மட்டும்தான் பதிவர்களின் வேதனை ஆற முடியும் போலிருக்கிறது.

ம்யூஸின் மனமே, விலகி ஆறு.

2 Comments:

At April 23, 2007 8:01 AM, Blogger கோவி.கண்ணன் Said ...

மறக்காமல் ஞாபகம் வச்சு போட்டதற்கு நன்றி மியூஸ் அவர்களே !

 
At April 23, 2007 9:43 PM, Anonymous Anonymous Said ...

எக்ஸ்க்யூஸ் மீ..

இது ஏதாவது ஆறிப்போனதா ? ஒரு ஆத்தாமையில கேக்குறேன் :))

 

Post a Comment

<< Home