சுவனப்பிரியனின் வலைப்பதிவில் (http://suvanappiriyan.blogspot.com/2006/04/blog-post_114736724168527676.html) எனக்கும் மற்றவர்க்குமிடையேயான உரையாடல்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. மற்றவருடைய கேள்விகளும் கருத்துக்களும் >>>> <<<< என்ற குறியீடுகளுக்கிடையில் கொடுக்கப்பட்டுள்ளது.
>>>
'பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்' - மனு (த.சா.அ 2 சு,31)
'பிராமணர் இந்த மனு நூலைப் படிக்கலாம் மற்ற வருணத்தாருக்கு ஓதுவிக்கக் கூடாது' - மனுத.சா.அ 1.சு 103)
'சூத்திரன் பக்கத்தில் இருக்கும்போது வேதம் ஓதக்கூடாது' (மனு த.சா.அ.1 சு99)
'பல மனைவிகளை உடையவன் அவர்களின் புணர்ச்சிக்காகவும், பசு மாடுகளின் புல்லுக்காகவும், பிராமணரைக் காப்பாற்றவும் பொய சொன்னால் குற்றமில்லை' (மனு த.சா.அ.8 சு-112)
மேற் கூறிய வசனங்கள் அனைத்தும் இந்து மத சட்டங்கள் என்று நாம் ஒத்துக் கொண்டிருக்கிறோம். <<<<
எத்தனை முறை ஐயா சொல்லுவது?
ஸ்ம்ருதிகள் மாறக்கூடியவை. மாறியுமிருக்கின்றன. ஸ்ருதிகள் மட்டுமே மாறாதவை.
உதாரணத்திற்கு மனு ஸ்மிருதியே ஒவ்வொரு யுகத்திற்குமேற்றவாறு மாற்றப்படுவதுதான். ஒவ்வொரு அரசரும் ஒவ்வொரு ஸ்ம்ருதியை பின்பற்றினர். மனு ஸ்ம்ருதியை பின்பற்றியவர்கள் மிக மிகக் குறைவு. (இந்திய அரசியல் சட்டம் ஹிந்து சட்டங்களுக்கு பெரும்பாலும் எடுத்துக்கொண்டது மனு ஸ்மிருதி இல்லை. எதுவென்று கூறுபவர்க்கு பரிசு)
சரி அதை விடுங்கள். ஹிந்து மதம் ஏகத்துவத்தை இறுதி உண்மை என்று கூறுவது போல, உண்மை பல வடிவங்களில் கானப்படும் என்றும் (உதாரணத்திற்கு அல்லாவை ஒரு ஆணாக ஸல் அவர்கள் கண்டதுபோல), எந்த வடிவத்தை வணங்கினாலும் இறுதியில் உண்மையை அடையலாம் என்றும் கூறுகிறது. இஸ்லாமும் அதே போல மற்றவர்கள் தங்களின் ஆன்மீக அனுபவத்திற்கேற்ப இறையை வழிபட்டுக்கொள்ளலாம் என்று கூறுகிறதா?
----
மயூரன் அவர்களே,
>>>என்னுடைய அம்மாவும் அப்பாவும் தங்கையும் வீட்டில் இந்துசமய உருவப்படங்களை வைத்து அல்லவா வணங்கி வருகிறார்கள். அவர்கள் நரகத்துக்கா போவார்கள்? <<<
உங்களுடைய அம்மாவும் தங்கையும் மட்டுமல்ல, ஜனாப் சுவனப்பிரியனின் அம்மாவும், தங்கையும் கூட சுவனத்தை அடைய முடியாது என்று கேள்விப்படுகிறேன். ஏனென்றால் இஸ்லாமிய பெண்களுக்கு ஆத்மா கிடையாதாம்.
எந்த அளவு நிஜமென்று தெரியவில்லை. எனக்கு ஆத்மாவெல்லாம் தெரியாது. ஆஸ்த்மாதான் தெரியும்.
http://suvanappiriyan.blogspot.com/2006/04/blog-post_114736724168527676.html
>>>பொய்களைச் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்.<<<
பொய் இல்லை. அறியாமை. சில வருடங்களுக்கு முன்பு ஒரு புத்தகத்தில் படித்த இந்த பொய்யை பற்றி விளக்கமறிய நேசகுமாரிடமும் இது பற்றி கேட்டேன். அவர் என் கருத்து தவறு என்று கூறினார். தவறை திருத்தி விளக்கமளித்த தங்களுக்கும் நன்றி.
>>>பெண்களை தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டு பேசிய சங்கராச்சாரியார் பிறகு<<<
சங்கராச்சாரியார் - இந்த பெயரை அடிக்கடி கேள்விப்படுகிறேன். யார் அவர்? ;-)
>>>>மறுமை நாளில் இறைவன் முன்னால் நீங்கள் 'இறைவா! சுவனப் பிரியனுக்கு இவ்வளவு உண்மை தெரிந்திருந்தும் எங்களுக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டார்.' என்று என் மேல்் வழக்கு தொடரக் கூடாது என்பதற்காக அனைத்தையும் கூறி நான் தப்பித்துக் கொண்டேன். சொர்க்கமா நரகமா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விட்டேன். <<<<
எனக்கு சொர்க்கமும் கிடையாது. நரகமும் கிடையாது. சத்யமான அந்த பரப்ரம்மத்தோடு கலந்துவிடுவேன். அல்லது என் மனம் விரும்பினால் மீண்டும் பிறந்து ஞானத்தை அடைய முயல்வேன். அப்படி நேருமானால் ஹிந்து மதம் பற்றிய தெளிவான உண்மையை அறியும் வாய்ப்பு பெற்று, அவ்வுண்மைகளால் உய்வடைய எல்லாம் வல்ல இறையான அல்லாவை வேண்டுகிறேன். நீங்களும் எனக்கு இந்த வரத்தை தர அல்லாவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டிக்கொள்கிறேன்.
>>>>அது எப்படி பொய்களை மட்டுமே சொல்லுவேன் என்று ஏதாவது விரதமா?<<<
ஐயா எனக்கு இஸ்லாம் பற்றி அதிகம் தெரியாது. எனவே நான் கூறுவதில் தவறேதேனும் இருக்குமானால் அதை திருத்திக்கொள்வது என் ஈமான். ஒரு ஹிந்துவாகவிருப்பதால் என் பலத்தை மட்டுமல்ல பலவீனங்களையும் ஒத்துக்கொள்கிறேன். திருத்திக்கொள்ளவும் முயல்கிறேன். இதற்கு உதவி செய்தால் உங்களுக்கும் நன்றி.
>>> முகமதுநபி இறைவனை ஆணாக உருவகப் படுத்தியதாக எதில் படித்தீர்கள்? விளக்கம் தர மடியுமா?<<
இந்த கட்டுரையின் தலைப்பை பதிலாகத் தருகிறேன்:
இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! (இது ஆண்பால்தானே?)
நான் பார்த்த ஒரு குரான் மொழிபெயர்ப்புகளில் அல்லாவை அவன், இவன் என்று ஆணாகவே உருவகப்படுத்தியிருந்தார்கள். அவள், இவள் என்று சொல்லவில்லை. ஹிந்து மத வேதங்களைப்போல அது, இது, இறை என்றும் குறிப்பிடவில்லை.
தங்களின் விளக்கம் இந்த விஷயத்தில் என் அறிவை பலப்படுதும் என நம்புகிறேன்.
>>>இறைவன் சொன்ன சட்டதிட்டங்களை கடை பிடித்துத் தான் மனிதர்கள் வாழ வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. <<<
இறைவன் (இதுவும் ஆண்பால்தானே? என் கண்ணிற்கு ஒன்றும் ஆகவில்லையே?) சொன்னாரா? எப்போது? எதில்? நான் சன் டிவியும், ஜெயா டிவியும் அடிக்கடி பார்ப்பேன். அதில் இது பற்றி எந்த செய்தியும் வரவில்லையே. அவருடைய அட்ரெஸ் கொடுத்தீர்களென்றால் அவரை நேரில் பார்த்து பேச விருப்பமாகவிருக்கிறது.
யாரோ ஒரு தனி மனிதர் அவருடைய அனுபவத்தைக் கூற, அது மட்டும்தான் உண்மையென்றும், எல்லா உண்மைகளும் கண்டறியப்பட்டுவிட்டதாகவும் கூறுவது நாடுகளை பிடிக்கவும், மக்களை அடிமையாக வைக்கவும் மட்டுமே உதவும். இந்த கீழ்த்தரமான செயலை உயர்வான ஒன்றாக என்னால் கருத முடியவில்லை. நாம் பின்பற்றுவதாலேயே ஒன்று உயர்ந்தது என்பது குழந்தைகளின் அறிவுத் திறனுக்கு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய விஷயம்தான். சொன்ன பேச்சைக் கேட்காவிட்டால் பூச்சாண்டி பிடித்துவிடுவான் என்பதற்கும் நான் சொன்னதை கேட்காவிட்டால் உனக்கு நரகம் என்று கூறுவதற்கும் ஒரு வித்தியாசமுமில்லை.
>>>> அவரவர் தங்களின் ஆன்மீக அனுபவத்திற்கு எற்ப இறையை வழி பட்டுக் கொள்ளலாம் என்றால் முடிவில் குழப்பம் தான் மிஞ்சும்.<<<
கண்டிப்பாக இல்லை. இதில் என்ன குழப்பமிருக்கிறது? எனக்கு வெண்மை நிறம் பிடிக்கும். என் தம்பிக்கு பச்சை நிறம் பிடிக்கும். ஒவ்வொருவருடைய குணமும், விருப்பங்களும் வேறு வேறாகவிருக்குமாறுதான் அந்த ஆதிபராசக்தி படைத்துள்ளாள். அவளின் படைப்பான நீங்கள் அல்லாவை முஹம்மதின் வழியாக வணங்க விரும்புகிறீர்கள். நானோ அல்லாவை எங்கும் நிறைந்த பரப்ரம்மமாக அறிகிறேன். என் நண்பருக்கோ கடவுளின் தேவையோ, பக்தியோ இல்லை, நாத்திகராகவும், நல்ல மனிதராகவும் இருக்க விரும்புகிறார். ஹிந்து மதம் இப்படி எல்லாம் இருக்க அனுமதிக்கிறது. இதை அனுமதிக்காதவர்களை எவ்வளவு பெரிய மத, சமூகத் தலைவராகவிருந்தாலும் இடது கையால் விலக்கிவிட்டு முன்னேறுகிறது.
>>>> ஒருவர் 'நான் சாய்பாபா பக்தர்' என்கிறார், மற்றொருவர் ' கல்கி விஜயகுமார்தான் என் கடவுள்' என்கிறார், வேறொருவரோ சங்கராச்சாரியாரை காலில் விழுந்து வணங்குகிறார். இதெல்லாம் உங்களுக்கு வேடிக்கையாக படவில்லையா?<<<
இஸ்லாமியர்களில் சிலர் தங்களை சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், சிலர் ஷியா குழுவென்றும், சிலரோ வகாபிகள் என்றும் கூறுகிறார்கள். சூபிக்களோ ஹிந்து மத கருத்துக்களின் உண்மையால் பாதிக்கப்பட்டு இறையை தன் காதலனாகவும், தங்களை அவரின் காதலியாகவும் காண்கிறார்கள். வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
>>>> அனைத்தையும் படைத்து பரிபாலிக்கக் கூடியவன் ஒருவன் இருக்கிறான். இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அவ்வப்போது ஒவ்வொரு சமூகத்துக்கும் வேதங்களையும் இறைவன் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.<<<
"அவ்வப்போது" கொடுத்துக் கொண்டிருக்கிறானா (மீண்டும் ஆண்பால்)? அப்படியானால் இறுதி வேதம் என்ற ஒன்று இல்லை என்கிற உண்மை உங்களுக்கும் தெரியுமா? உங்களின் மனத்தெளிவு சந்தோஷமளிக்கிறது.
>>> இதை எல்லாம் தூர எறிந்து விட்டு 'நான் என் அனுபவத்திற்கேற்ப இறைவனை வழிபடுவேன்' என்பது இறைவனுக்கு நீங்கள் பாடம் சொல்லிக் கொடுப்பது போல் ஆகாதா? <<
ஆகாது. அல்லாவின் விருப்பப்படிதான் நாம் இயங்குகிறோம் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடில்லை. அல்லா என்னை பரப்பிரம்மத்தை வணங்க செய்கிறாள். வேறு ஒருவரை முருகப் பெருமானாக வணங்க செய்கிறாள். உங்களை குரான் கூறியபடி வணங்கசெய்கிறாள். இதை எதிர்த்து நீங்கள் வழிபடுவதாலேயே அந்த வழியைத்தான் பின்பற்றவேண்டும் என்பது அந்த ஆதிபராசக்தி, அண்டங்களை படைத்து, காத்து, மாற்றி லீலைகள் செய்பவளான அல்லாவை ஏளனம் செய்வது போலவும், (உங்கள் பாஷையில்) பாடம் சொல்லிக்கொடுக்க முயற்சி செய்வது போலவும் ஆகிவிடும்.
>>>> யஜீர் வேதத்தில் இயற்கை பொருட்களை வணங்க தடை செய்யப் பட்டுள்ளது.<<<
அந்த குறிப்பிட்ட பகுதியை இங்கே கூறுங்களேன்.
>>> ஒரே இறைவனிடமிருந்து இரண்டு கருத்துகள் எப்படி வர முடியும்? <<<
உங்கள் மகனுக்கு நீங்கள் அப்பா. தம்பிக்கோ அண்ணா. நீங்கள் ஒருவரா, பலரா?
---------
>>>'உண்மை தெரியாமல் இஸ்லாத்தை விமரிசித்து விட்டேன்' என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. குர்அன் தமிழ் மொழி பெயர்ப்பை தொடர்ந்து படித்து வாருங்கள். மூன் ப்பளிகேஷன் வெளியிட்ட பி.ஜைனுல்லாபுதீன் அவர்களின்மொழி பெயர்பப்பில் தமிழும் எளிமையாக்கப் பட்டுள்ளது. உங்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
<<<
சுவனப்பிரியன், உண்மையை அறிவதும், அறிய விழைவதும் மனித இயல்பு. அந்த வகையில் தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொள்வதுதான் கற்றுக்கொள்வதற்கான முதல்படி (ஹிந்து மதம் அப்படித்தான் கூறுகிறது). மூன் ப்பளிகேஷன் வெளியிட்ட பி.ஜைனுல்லாபுதீன் அவர்களின்மொழி பெயர்பப்பில் வெளியாகியுள்ள குரானை இங்கே பெங்களூரில் வாங்க முயற்சிப்பேன். நன்கு படிக்கவும் விரும்புகிறேன். இன்ஷா அல்லாஹ்!!
>>>இறைவன் எப்படிப் பட்டவன். அவன் ஆணா பெண்ணா என்றெல்லாம் அந்த இறைவன் சொல்லாத போது நாமாக எப்படி கற்பனை செய்து கொள்ள முடியும்? அது என்றால் உயர்திணை ஆகாது. அவர்கள் என்றால் பன்மையாகி விடும். பல கடவுள்கள் என்றாகி விடும்.'தன்னை யாரும் பெறவுமில்லை:யாராலும் பெறப்படவுமில்லை' என்று சொல்வதிலிருந்து மனிதர்களின் வாழ்க்கை முறைக்கு அப்பாற் பட்டவனே இறைவன். அப்படி ஒரு சொல் தமிழில் இல்லை. எனவே நாம் விளங்கிக் கொள்வதற்காக மொழி பெயர்ப்பாளர்கள் அவன் என்ற சொல்லை பயன் படுத்துகிறார்கள். குர்ஆனின் எந்த இடத்திலும் இறைவன் தன்னை ஆண் என்று குறிப்பிட்டுக் கொள்ளவில்லை<<
பிறகு எதற்காக எப்போதும் இறையை அவன், இவன் என்று கூற வேண்டும்? அவள் என்று ஏன் கூறவில்லை?
இதற்கு ஆணானவன் பெண்ணைவிட உயர்ந்தவன் என்ற கருத்து காரணமாக இருக்கிறதா?
தமிழில் சரியான வார்த்தை பிரயோகம் இல்லை என்று கூறுகிறீர்கள். மூல மொழியான அரபியில் கடவுளை எங்கனம் அழைக்கிறார்கள்? அவ்வார்த்தைகள் பால் அடிப்படியிலானதா, அல்லது பால் சாரா வார்த்தையா? பால் சாரா வார்த்தை என்றால் அது அஹ்றிணையைக் குறிக்கிறதா? அல்லது இறையை குறிக்க இம்மூன்றும் தாண்டிய புனிதமான வார்த்தை பிரயோகத்தை அரபி பயன்படுத்துகிறதா?
என்னுடைய கேள்விக்கு தங்கள் பதில் மழுப்பலாகத்தான் இருக்கிறது. என்னுடைய கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்றே தோன்றுகிறது. உங்களுடைய பதிலுக்கு என்னுடைய கேள்வியை பொருத்த முயற்சி செய்திருக்கிறீர்கள்.
வேறு ஒரு சந்தேகம். பெண்களுக்கும் சுவனத்தில் இடமுண்டு என்பது தெரிந்து சந்தோஷமடைந்தேன். அவர்களுக்கு ஆண்களுக்கு கிடைக்கின்ற அதே மாதிரியான சொஉகரியங்கள் கிடைக்கின்றனவா? உதாரணமாக அடிக்கடி ஹிந்துத்துவவாதிகளால் கூறப்படும் ஏZஉ அழகான, சூடான, என்றுமே கன்னியராக உள்ள, சூப்பர் சுந்தரிகள். சுவனத்தை சென்றடையும் பெண்களுக்கு அந்த அளவு அழகாக இல்லாவிட்டாலும், சுமாரான ஏழு ஆண்கள் கிடைப்பார்களா? அல்லது அவர்களுக்கும் ஏழு சுந்தரிகள்தானா?
>>>உங்கள் விருப்பத்திற்கு பல வழிகளையும் பின் பற்றாதீர்கள் வழி தவறி விடுவீர்கள் என்று இறைவன் தெளிவாக விவரிக்கிறான்.<<<
1. என்னுடைய கேள்வியே சொன்னது இறைவன் என்பதை எங்கனம் நீங்கள் நிரூபிக்கிறீர்கள்? நீங்களோ, குரானோ, அல்லது ஜெய்னுல்லாபுதீனோ கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு நீங்கள் தரும் அத்தாக்ஷி என்ன? இது நம்பிக்கையின் அடிப்படையில் செய்ய வேண்டிய விஷயம் என்றால், "அல்லா என்று ஒரு கடவுள் இல்லை" என்பதும் ஒரு நம்பிக்கைதானே?
2. ஏறத்தாழ இதே கருத்தைத்தானே வேறு சில மதங்களும் கூறுகின்றன. அப்படியிருக்கையில் உங்களுடையது மட்டுமே சரியானது என்பதை தாங்கள் நடைமுறையில் எங்கனம் வலியுறுத்தி, நிச்சயம் செய்கிறீர்கள்?
3. இதை நடைமுறைப்படுத்த தாங்கள் (இஸ்லாம்) மேற்கொள்ளும் வழிமுறைகள் என்னென்ன?
4. இக்கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சமுதாயத்தில் (பூலோகத்தில்) எங்கனம் நடத்தப்படவேண்டும் என இஸ்லாம் கூறுகிறது?
>>>> தமிழகத்தில் இருந்தால் விண் டிவியிலும் அய்ரோப்பா அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் நீங்கள் இருந்தால் டான் டிவியிலும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழச்சி ஒளிபரப்பப் படுகிறது. அதை தொடர்ந்து பார்த்து வாருங்கள். பல உண்மைகள் விளங்கும்.<<<
நான் இருக்கும் பெங்களூரின் ஒரு பகுதியில் இவை தெரிவதில்லை. ஆனால், க்யூ டிவி தெரிகிறது. அவ்வப்போது பார்க்கிறேன். ஒரு மார்க்க அறிஞர் பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். பிரமிக்க வைக்கும் நினைவாற்றல். எல்லா மத நூல்களிலிருந்தும் அத்தியாயம், பக்கம் முதலான தகவல்களைக் கூட, அம்மதக் கருத்துக்களோடு கூறுகிறார். ரசிக்கும்படியாகவும், நம்முடைய புத்தியை உபயோகிக்க ஒரு நொடி மறந்தாலும் அவர் கூறுவதை நம்பிவிடக்கூடிய அபாயத்துடனும் அது நன்றாகவே இருக்கிறது. என்ன, அவர் சொல்லுகிற பதில் தவறானது என்று கூற வாய்ப்பில்லை என்பது தெரியாமல் நடத்திவருகிறார்கள்.
>>> மூன் பப்ளிகேஷன், இரண்டாவது மாடி,போஸ்ட் ஆபீஸ் தெரு, மண்ணடி,சென்னை௬00001 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பி.ஜெய்னுல்லாபுதீன் அவர்களை நேரிலும் சந்தித்து மார்க்க விளக்கங்கள் பெறலாம்.<<
நான் கடவுளின் அட்ரெஸ் கேட்டதற்கு நீங்கள் கொடுத்த பதில் இது. ஹிந்துக்களில் சிலர் ஷிர்டி, புட்டபர்த்தி சாயி பாபாக்களையும், கல்கியையும் வணங்குவதை குறை கூறும் தாங்கள் கடவுளின் அட்ரெஸ்ஸாக பி.ஜெய்னுல்லாபுதீனின் அட்ரெஸ்ஸைக் கொடுத்துள்ளீர்கள்.
எந்த மதத்தவராகவிருந்தாலும் மனித மனம் ஒன்று போலத்தான் சிந்திக்கிறது. செயல்படுகிறது. ஆனால் ஒரே டிஸ்ட்ரிப்யூட்டரிடமிருந்து, ஒரே விதமான அரிசியை, ஒரே விதமான விலையில் வாங்கும் இரு வேறு கடைக்காரர்கள் தங்கள் கடை அரிசிதான் சிறந்தது என்று கூறுவதற்கும், நீங்கள் இஸ்லாம் "மட்டுமே" சிறந்தது என்று கூறுவதற்கும் வித்யாசம் இல்லை. யார் நன்கு மார்கெட்டிங் செய்கிறார்களோ (இந்த மார்கெட்டிங்கில் பலவகை உண்டு) அவர்களிடம் மக்கள் செல்கிறார்கள். அதிக மக்கள் செல்வதாலேயே ஒரு கடையின் அரிசி மற்ற கடையை விட உயர்வானது என்று கூறுவது அறிவீனம்.
------
>>> ஷியா,சன்னி,வகாபி,சூஃபி என்ற பிரிவுகள் இருந்தாலும் அனைவருக்கும் குர்ஆன் ஒன்றுதான்.இறைத் தூதர் முகமது நபிதான். பிறகு ஏன் பிரிவு என்றால் முகமது நபி குர்ஆனுக்கு கொடுத்த விளக்கத்தை முறையாக விளங்காமல் தங்கள் இஷ்டத்துக்கு விளங்கிக் கொண்டதனாதல் வந்த விளைவுகளே நாம் மேலே பார்த்தது.
ஆனால் இந்து மதத்தில் உள்ள பிரிவில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடவுள். அத்தனைப் பேருக்கும் கொள்கைகளிலும் மிகுந்த வேறுபாடு. <<<
அதாவது பல புத்தகங்களாலும், பல கடவுள்களாலும், பல குருமார்களாலும், பல்வேறுபட்ட கருத்துக்களாலும் (உங்கள் கருத்துப்படி) ஏற்படும் குழப்பங்கள் நீக்கப்படவேண்டும். தவிர்க்கப்படவேண்டும்.
ஆனால், ஒரே புத்தகத்தையும், ஒரே கடவுளையும், ஒரே இறைத்தூதரையும் வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது சரியானது. விரும்பவேண்டியது. சரிதான்.
>>> ஆனால் இந்த பல தெய்வக் கொள்கையை இந்து மத வேதங்கள் கண்டிக்கின்றன. <<<
இல்லை. இருப்பது ஒன்றுதான் என்று கூறுவதோடு, அதை பல வடிவங்களிலும் வணங்குவது ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்றுதான் ஹிந்து மதம் கூறுகிறது.
>>> எனவே மதத்தின் அடிப்படையையே பெரும்பான்மையானவர்கள் மறந்து விட்டார்கள்.<<<
உண்மை. மதத்தின் அடிப்படையை பெரும்பாலானாவர்கள் மறந்து விட்டார்கள். அதனால்தான் இந்த சமூகம் பலவீனமடைந்து தங்களின் மத கருத்துக்களைப்பற்றி ஒன்றும் தெரியாமல் கீழ்த்தரமான சில பழக்கங்களுக்கு இடம் கொடுத்துவிட்டது. பிற மத கருத்துக்களின் ஆதிக்கத்தால் தன் மதக் கருத்துக்களில் மாற்றக்கூடியவைகளைக்கூட மாற்றக்கூடாது என அடம் பிடிக்கும் குழந்தையாகவுள்ளது.
>>இதற்கு காரணம் மத விவகாரங்களில் கொடுக்கப் பட்ட அளவுக்கதிகமான சுதந்திரம்.<<<
நீங்கள் ஆபிரகாமிய மதங்களின் அடிப்படையில் ஹிந்து மதத்தை அணுகுகிறீர்கள். ஹிந்து மதத்தில் தனிமனித சுதந்திரம் இருப்பதால்தான் அது இந்த அளவு நுணுக்கமாகவுள்ளது. ஆனால் சமுதாயமானது பிற ஆதிக்க மதங்களின் பாதிப்பால் குறுகிய கருத்துக்கள் தன்னை பாதுகாக்கும் என்ற தவறான எண்ணத்தில் சுருங்கியுள்ளது. அதை விரிவடையச் செய்யவும், உண்மையை விளக்கவும்தான் ஷங்கரர், ராமானுஜர், மத்வர், விவேகானந்தர், ஜெ கிருஷ்னமூர்த்தி, ரமண மகரிஷி, மேல்மருவதூர் அடிகள், நாராயண குரு போன்றோர் அவதரிக்கின்றார்கள். அவர்களின் காலில் ஹிந்துக்கள் விழுவதால் அவர்கள் மனமும் விசாலமாகிறது.
என்னுடைய சந்தேகங்களுக்கு கோபம் கொள்ளாமல் பதிலளித்தது எனக்கு சந்தோஷமளிக்கிறது. அனைத்து கேள்விகளும் பதிலை கண்டடையவில்லை என்றாலும், சில கேள்விகளுக்காவது பதிலளித்ததற்கு மிக்க வந்தனங்கள்.
-------
>>>> 1.அவ்வாறு செயல்பட குர்ஆன் முஸ்லிம்களுக்கு கட்டளை இடுகிறது. குர்ஆன் இறை வேதம் தான் என்று நான் நம்புகிறேன்.
2.மற்றவையும் இறை வேதம் என்றாலும் அவற்றில் மனிதக் கரங்கள் புகுந்து விட்டதாக குர்ஆன் சொல்கிறது. அது உண்மைதான் என்றும் விளக்கியும் இருக்கிறேன். <<<<
இரண்டுமே நம்பிக்கை சார்ந்த விஷயங்கள்தான்.
>>>> 4.'உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு' <<<
பிறகு மத மாற்றம் எதற்கு?
>>> அப்பாவிகளை குண்டு வைத்து தகர்ப்பவர்கள் கண்டிப்பாக நரகவாசிகளே! <<<
உங்களது தைரியத்தைப் பாராட்டுகிறேன். மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்களே என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்.